குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கஸஸ் வசனம் ௨௫
Qur'an Surah Al-Qasas Verse 25
ஸூரத்துல் கஸஸ் [௨௮]: ௨௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
فَجَاۤءَتْهُ اِحْدٰىهُمَا تَمْشِيْ عَلَى اسْتِحْيَاۤءٍ ۖقَالَتْ اِنَّ اَبِيْ يَدْعُوْكَ لِيَجْزِيَكَ اَجْرَ مَا سَقَيْتَ لَنَاۗ فَلَمَّا جَاۤءَهٗ وَقَصَّ عَلَيْهِ الْقَصَصَۙ قَالَ لَا تَخَفْۗ نَجَوْتَ مِنَ الْقَوْمِ الظّٰلِمِيْنَ (القصص : ٢٨)
- fajāathu
- فَجَآءَتْهُ
- Then came to him
- அவரிடம் வந்தாள்
- iḥ'dāhumā
- إِحْدَىٰهُمَا
- one of the two women
- அவ்விருவரில் ஒருத்தி
- tamshī
- تَمْشِى
- walking
- நடந்தவளாக
- ʿalā is'tiḥ'yāin
- عَلَى ٱسْتِحْيَآءٍ
- with shyness
- வெட்கத்துடன்
- qālat
- قَالَتْ
- She said
- அவள் கூறினாள்
- inna
- إِنَّ
- "Indeed
- நிச்சயமாக
- abī
- أَبِى
- my father
- என் தந்தை
- yadʿūka
- يَدْعُوكَ
- calls you
- உம்மை அழைக்கிறார்
- liyajziyaka
- لِيَجْزِيَكَ
- that he may reward you
- உமக்கு தருவதற்காக
- ajra
- أَجْرَ
- (the) reward
- கூலியை
- mā saqayta
- مَا سَقَيْتَ
- (for) what you watered
- நீநீர்புகட்டியதற்குரிய
- lanā
- لَنَاۚ
- for us"
- எங்களுக்காக
- falammā jāahu
- فَلَمَّا جَآءَهُۥ
- So when he came to him
- போது/அவரிடம்/வந்தார்
- waqaṣṣa
- وَقَصَّ
- and narrated
- இன்னும் விவரித்தார்
- ʿalayhi
- عَلَيْهِ
- to him
- அவரிடம்
- l-qaṣaṣa
- ٱلْقَصَصَ
- the story
- வரலாற்றை
- qāla
- قَالَ
- he said
- அவர் கூறினார்
- lā takhaf
- لَا تَخَفْۖ
- "(Do) not fear
- பயப்படாதே!
- najawta
- نَجَوْتَ
- You have escaped
- நீ தப்பித்து விட்டாய்
- mina l-qawmi
- مِنَ ٱلْقَوْمِ
- from the people -
- மக்களிடமிருந்து
- l-ẓālimīna
- ٱلظَّٰلِمِينَ
- the wrongdoers"
- அநியாயக்காரர்(கள்)
Transliteration:
Fajaaa'at hu ihdaahumaa tamshee 'alas tihyaaa'in qaalat inna abee yad'ooka li yajziyaka ajra maa saqaita lanaa; falammaa jaaa'ahoo wa qassa 'alaihil qasasa qaala laa takhaf najawta minal qawmiz zaalimeen(QS. al-Q̈aṣaṣ:25)
English Sahih International:
Then one of the two women came to him walking with shyness. She said, "Indeed, my father invites you that he may reward you for having watered for us." So when he came to him and related to him the story, he said, "Fear not. You have escaped from the wrongdoing people." (QS. Al-Qasas, Ayah ௨௫)
Abdul Hameed Baqavi:
அச்சமயம் (அவ்விரு பெண்களில்) ஒருத்தி மிக்க நாணத்துடன் இவர் முன் வந்து "நீங்கள் எங்க(ள் கால்நடைக)ளுக்குத் தண்ணீர் புகட்டியதற்குரிய கூலியை உங்களுக்குக் கொடுக்கும் பொருட்டு மெய்யாகவே என் தந்தை உங்களை அழைக்கிறார்" என்று கூறி அழைத்துச் சென்றாள். மூஸா அவரிடம் சென்று தன் சரித்திரத்தைக் கூறவே அவர் (இனி) "நீங்கள் பயப்படவேண்டாம். அநியாயக்கார மக்களைவிட்டு நீங்கள் தப்பித்துக் கொண்டீர்கள்" என்று கூறினார். (ஸூரத்துல் கஸஸ், வசனம் ௨௫)
Jan Trust Foundation
(சிறிது நேரத்திற்குப்) பிறகு அவ்விரு பெண்களில் ஒருவர் நாணத்துடன் நடந்து மூஸாவின் முன் வந்து; “எங்களுக்காக நீங்கள் தண்ணீர் புகட்டியதற்கான கூலியை உங்களுக்கு வழங்குவதற்காக எங்கள் தந்தை உங்களை அழைக்கிறார்” என்று கூறினார்; இவ்வாறாக மூஸா அவரிடம் வந்தபோது தம் வரலாற்றை எடுத்துச் சொன்னார்; அதற்கவர்; “பயப்படாதீர்! அக்கிரமக்கார சமூகத்தாரை விட்டும் நீர் தப்பித்துவிட்டீர்” என்று கூறினார்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவ்விருவரில் ஒருத்தி (தன் முகத்தை மறைத்தவளாக) வெட்கத்துடன் நடந்தவளாக வந்து கூறினாள்: “நிச்சயமாக என் தந்தை உம்மை அழைக்கிறார் நீ எங்களுக்காக நீர் புகட்டியதற்குரிய கூலியை உமக்கு தருவதற்காக. அவர் அவரிடம் வந்து, (தனது) வரலாற்றை விவரித்த போது அவர் (-அப்பெண்ணின் தந்தை) கூறினார்: பயப்படாதே! அநியாயக்கார மக்களிடமிருந்து நீ தப்பித்து விட்டாய்.