Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கஸஸ் வசனம் ௨௦

Qur'an Surah Al-Qasas Verse 20

ஸூரத்துல் கஸஸ் [௨௮]: ௨௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَجَاۤءَ رَجُلٌ مِّنْ اَقْصَى الْمَدِيْنَةِ يَسْعٰىۖ قَالَ يٰمُوْسٰٓى اِنَّ الْمَلَاَ يَأْتَمِرُوْنَ بِكَ لِيَقْتُلُوْكَ فَاخْرُجْ اِنِّيْ لَكَ مِنَ النّٰصِحِيْنَ (القصص : ٢٨)

wajāa
وَجَآءَ
And came
இன்னும் வந்தார்
rajulun
رَجُلٌ
a man
ஓர் ஆடவர்
min aqṣā
مِّنْ أَقْصَا
from (the) farthest end
இறுதியிலிருந்து
l-madīnati
ٱلْمَدِينَةِ
(of) the city
நகரத்தின்
yasʿā
يَسْعَىٰ
running
விரைந்தவராக
qāla
قَالَ
He said
கூறினார்
yāmūsā
يَٰمُوسَىٰٓ
"O Musa!
மூஸாவே!
inna
إِنَّ
Indeed
நிச்சயமாக
l-mala-a
ٱلْمَلَأَ
the chiefs
பிரமுகர்கள்
yatamirūna
يَأْتَمِرُونَ
are taking counsel
ஆலோசிக்கின்றனர்
bika
بِكَ
about you
உமக்காக
liyaqtulūka
لِيَقْتُلُوكَ
to kill you
அவர்கள் உம்மைக் கொல்வதற்கு
fa-ukh'ruj
فَٱخْرُجْ
so leave;
ஆகவே, நீர் வெளியேறிவிடும்!
innī
إِنِّى
indeed I am
நிச்சயமாக நான்
laka
لَكَ
to you
உமக்கு
mina l-nāṣiḥīna
مِنَ ٱلنَّٰصِحِينَ
of the sincere advisors"
நன்மையை நாடுபவர்களில் ஒருவன்

Transliteration:

Wa jaaa'a rajulum min aqsal madeenati yas'aa qaala yaa Moosaaa innal mala a yaa tamiroona bika liyaqtulooka fakhruj innee laka minan naasiheen (QS. al-Q̈aṣaṣ:20)

English Sahih International:

And a man came from the farthest end of the city, running. He said, "O Moses, indeed the eminent ones are conferring over you [intending] to kill you, so leave [the city]; indeed, I am to you of the sincere advisors." (QS. Al-Qasas, Ayah ௨௦)

Abdul Hameed Baqavi:

(இக்கூச்சல் மக்களிடையே பரவி, நேற்று இறந்தவனைக் கொலை செய்தவர் மூஸாதான் என்று மக்களுக்குத் தெரிந்து இவரைப் பழிவாங்கக் கருதினார்கள்.) அச்சமயம் பட்டிணத்தின் கோடியிலிருந்து ஒரு மனிதர் (விரைவாக) ஓடிவந்து மூஸாவே! "மெய்யாகவே உங்களைக் கொலை செய்துவிட வேண்டுமென்று தலைவர்கள் முடிவு செய்து கொண்டிருக்கிறார்கள். ஆதலால், நீங்கள் (இவ்வூரைவிட்டு) வெளியேறி விடுங்கள். மெய்யாகவே நான் உங்களுடைய நன்மைக்கே (இதனைக்) கூறுகிறேன்" என்று கூறினார். (ஸூரத்துல் கஸஸ், வசனம் ௨௦)

Jan Trust Foundation

பின்னர், நகரத்தின் ஒரு கோடியிலிருந்து (நன்) மனிதர் ஒருவர் ஓடி வந்து, “மூஸாவே! நிச்சயமாக (இந்நகர்ப்) பிரமுகர்கள் ஒன்று கூடி உம்மைக் கொன்று விட வேண்டுமென ஆலோசனை செய்கிறார்கள்; ஆகவே நீர் (இங்கிருந்து) வெளியேறி விடுவீராக! நிச்சயமாக நாம் உம் நன்மையை நாடுபவர்களில் ஒருவனாவேன்” என்று கூறினார்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நகரத்தின் இறுதியிலிருந்து ஓர் ஆடவர் விரைந்தவராக வந்து கூறினார்: “மூசாவே! (ஃபிர்அவ்னின்) பிரமுகர்கள் உம்மைக் கொல்வதற்கு உமக்காக ஆலோசிக்கின்றனர். ஆகவே, நீர் வெளியேறிவிடும்! நிச்சயமாக நான் உமக்கு (ஆலோசனை கூறியதில்) நன்மையை நாடுபவர்களில் ஒருவன்.”