Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கஸஸ் வசனம் ௧௮

Qur'an Surah Al-Qasas Verse 18

ஸூரத்துல் கஸஸ் [௨௮]: ௧௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَاَصْبَحَ فِى الْمَدِيْنَةِ خَاۤىِٕفًا يَّتَرَقَّبُ فَاِذَا الَّذِى اسْتَنْصَرَهٗ بِالْاَمْسِ يَسْتَصْرِخُهٗ ۗقَالَ لَهٗ مُوْسٰٓى اِنَّكَ لَغَوِيٌّ مُّبِيْنٌ (القصص : ٢٨)

fa-aṣbaḥa
فَأَصْبَحَ
In the morning he was
காலையில் அவர் இருந்தார்
fī l-madīnati
فِى ٱلْمَدِينَةِ
in the city
நகரத்தில்
khāifan
خَآئِفًا
fearful
பயந்தவராக
yataraqqabu
يَتَرَقَّبُ
(and) was vigilant
எதிர்பார்த்தவராக
fa-idhā alladhī is'tanṣarahu
فَإِذَا ٱلَّذِى ٱسْتَنصَرَهُۥ
when behold! The one who sought his help
அப்போது/ எவன்/உதவிதேடினான்/அவரிடத்தில்
bil-amsi
بِٱلْأَمْسِ
the previous day
நேற்று
yastaṣrikhuhu
يَسْتَصْرِخُهُۥۚ
cried out to him for help
அவரை உதவிக்கு கத்தி அழைத்தான்
qāla
قَالَ
Said
கூறினார்
lahu
لَهُۥ
to him
அவனுக்கு
mūsā
مُوسَىٰٓ
Musa
மூசா
innaka
إِنَّكَ
"Indeed you
நிச்சயமாக நீ
laghawiyyun
لَغَوِىٌّ
(are) surely a deviator
ஒரு மூடன் ஆவாய்
mubīnun
مُّبِينٌ
clear"
தெளிவான

Transliteration:

Fa asbaha fil madeenati khaaa'ifany yataraqqabu fa izal lazis tansarahoo bil amsi yastasrikhuh; qaala lahoo moosaaa innaka laghawiyyum mubeen (QS. al-Q̈aṣaṣ:18)

English Sahih International:

And he became inside the city fearful and anticipating [exposure], when suddenly the one who sought his help the previous day cried out to him [once again]. Moses said to him, "Indeed, you are an evident, [persistent] deviator." (QS. Al-Qasas, Ayah ௧௮)

Abdul Hameed Baqavi:

(அன்றிரவு அவருக்கு நிம்மதியாகவே கழிந்தது. எனினும்) காலையில் எழுந்து அந்நகரத்தில் (தன்னைப் பற்றி என்ன நடந்திருக்கின்றதோ என்று) பயந்தவராகக் கவனித்துக் கொண்டிருந்த சமயத்தில், நேற்று இவரிடம் உதவி தேடியவன் (பின்னும் தனக்கு உதவி செய்யுமாறு) கூச்சலிட்டு இவரை அழைத்தான். அதற்கு மூஸா அவனை நோக்கி "நீ பகிரங்கமான கலகக்காரனாக இருக்கிறாய்" என்று நிந்தித்து, (ஸூரத்துல் கஸஸ், வசனம் ௧௮)

Jan Trust Foundation

மேலும், (தமக்கு என்ன நடக்குமோ என்று மறுநாள்) காலையில் பயத்துடன் கவனித்துக் கொண்டு நகரத்தில் இருந்தபோது, முன் தினம் அவரிடம் உதவி கோரியவன் (மீண்டும்) அவரை (உதவிக்காக) கூச்சலிட்டு அழைத்தான் அதற்கு, மூஸா| “நிச்சயமாக நீ பகிரங்கமான கலகக்காரனாக இருக்கின்றாய்” என்று அவனிடம் கூறினார்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(அந்)நகரத்தில் பயந்தவராக (செய்திகளை) எதிர் பார்த்தவராக (மறுநாள்) காலையில் அவர் இருந்தார். அப்போது நேற்று அவரிடத்தில் உதவி தேடியவன் (இன்றும்) அவரை உதவிக்கு கத்தி அழைத்தான். அவனுக்கு மூசா கூறினார்: “நிச்சயமாக நீ ஒரு தெளிவான மூடன் ஆவாய்.”