Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கஸஸ் வசனம் ௧௫

Qur'an Surah Al-Qasas Verse 15

ஸூரத்துல் கஸஸ் [௨௮]: ௧௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَدَخَلَ الْمَدِيْنَةَ عَلٰى حِيْنِ غَفْلَةٍ مِّنْ اَهْلِهَا فَوَجَدَ فِيْهَا رَجُلَيْنِ يَقْتَتِلٰنِۖ هٰذَا مِنْ شِيْعَتِهٖ وَهٰذَا مِنْ عَدُوِّهٖۚ فَاسْتَغَاثَهُ الَّذِيْ مِنْ شِيْعَتِهٖ عَلَى الَّذِيْ مِنْ عَدُوِّهٖ ۙفَوَكَزَهٗ مُوْسٰى فَقَضٰى عَلَيْهِۖ قَالَ هٰذَا مِنْ عَمَلِ الشَّيْطٰنِۗ اِنَّهٗ عَدُوٌّ مُّضِلٌّ مُّبِيْنٌ (القصص : ٢٨)

wadakhala
وَدَخَلَ
And he entered
இன்னும் நுழைந்தார்
l-madīnata
ٱلْمَدِينَةَ
the city
நகரத்தில்
ʿalā ḥīni
عَلَىٰ حِينِ
at a time
நேரத்தில்
ghaflatin
غَفْلَةٍ
(of) inattention
கவனமற்று இருந்த
min ahlihā
مِّنْ أَهْلِهَا
of its people
அதன் வாசிகள்
fawajada
فَوَجَدَ
and found
கண்டார்
fīhā
فِيهَا
therein
அதில்
rajulayni
رَجُلَيْنِ
two men
இருவரை
yaqtatilāni
يَقْتَتِلَانِ
fighting each other
அவ்விருவரும் சண்டை செய்தனர்
hādhā
هَٰذَا
this
இவர்
min shīʿatihi
مِن شِيعَتِهِۦ
of his party
அவருடைய பிரிவை சேர்ந்தவர்
wahādhā
وَهَٰذَا
and this
இன்னும் இவர்
min ʿaduwwihi
مِنْ عَدُوِّهِۦۖ
of his enemy
அவருடைய எதிரிகளில் உள்ளவர்
fa-is'taghāthahu
فَٱسْتَغَٰثَهُ
And called him for help
அவரிடம் உதவி கேட்டான்
alladhī min shīʿatihi
ٱلَّذِى مِن شِيعَتِهِۦ
the one who (was) from his party
இவருடைய பிரிவைச் சேர்ந்தவன்
ʿalā alladhī min ʿaduwwihi
عَلَى ٱلَّذِى مِنْ عَدُوِّهِۦ
against the one who (was) from his enemy
தனது எதிரிகளில் உள்ளவனுக்கு எதிராக
fawakazahu mūsā
فَوَكَزَهُۥ مُوسَىٰ
so Musa struck him with his fist so Musa struck him with his fist
மூஸா அவனை குத்து விட்டார்
faqaḍā
فَقَضَىٰ
and killed him
கதையை முடித்து விட்டார்
ʿalayhi
عَلَيْهِۖ
and killed him
அவனுடைய
qāla hādhā
قَالَ هَٰذَا
He said "This (is)
கூறினார்/இது
min ʿamali
مِنْ عَمَلِ
of (the) deed
செயலில் உள்ளது
l-shayṭāni
ٱلشَّيْطَٰنِۖ
(of) Shaitaan
ஷைத்தானின்
innahu
إِنَّهُۥ
Indeed, he
நிச்சயமாக அவன்
ʿaduwwun
عَدُوٌّ
(is) an enemy
எதிரி ஆவான்
muḍillun
مُّضِلٌّ
one who misleads
வழி கெடுக்கின்றவன்
mubīnun
مُّبِينٌ
clearly"
தெளிவான

Transliteration:

Wa dakhalal madeenata 'alaa heene ghaflatim min ahlihaa fawajada feeha raju laini yaqtatilaani haazaa min shee'atihee wa haaza min 'aduwwihee fastaghaasahul lazee min shee'atihee 'alal lazee min 'aduwwihee fawakazahoo Moosaa faqadaa 'alaihi qaala haaza min 'amalish Shaitaani innahoo 'aduwwum mmudillum mubeen (QS. al-Q̈aṣaṣ:15)

English Sahih International:

And he entered the city at a time of inattention by its people and found therein two men fighting: one from his faction and one from among his enemy. And the one from his faction called for help to him against the one from his enemy, so Moses struck him and [unintentionally] killed him. [Moses] said, "This is from the work of Satan. Indeed, he is a manifest, misleading enemy." (QS. Al-Qasas, Ayah ௧௫)

Abdul Hameed Baqavi:

(மூஸா ஒரு நாளன்று) மக்கள் அயர்ந்து (பராமுகமாக) இருக்கும் சமயத்தில் அவ்வூரில் சென்றபொழுது இரு வாலிபர்கள் சண்டையிட்டுக் கொண்டிருப்பதை அவர் கண்டார். ஒருவன் (இஸ்ரவேலரில் உள்ள) இவர் இனத்தைச் சேர்ந்தவன்; மற்றொருவன் (கிப்திகளாகிய) இவருடைய எதிரிகளில் உள்ளவன். அவனுக்கு எதிராக உதவி செய்யுமாறு இவர் இனத்தைச் சேர்ந்தவன் இவரிடத்தில் கோரிக் கொண்டான். (அதற்கிணங்கி) மூஸா அவனை ஒரு குத்துக் குத்தி அவன் காரியத்தை முடித்து விட்டார். (அதனால் அவன் இறந்து விட்டான். இதை அறிந்த மூஸா) "இது ஷைத்தானுடைய வேலை. நிச்சயமாக அவன் வழி கெடுக்கக்கூடிய பகிரங்கமான எதிரி" எனக் கூறினார். (ஸூரத்துல் கஸஸ், வசனம் ௧௫)

Jan Trust Foundation

(ஒரு நாள் மூஸா) மக்கள் அயர்ந்து (தூக்கத்தில் பராமுகமாக) இருந்த போது, நகரத்தில் நுழைந்தார்; அங்கு இரண்டு மனிதர்கள் சண்டையிட்டுக் கொண்டியிருந்ததைக் கண்டார்; ஒருவன் அவர் கூட்டத்தைச் சேர்ந்தவன்; மற்றொருவன் அவர் பகைவன் கூட்டத்தைச் சேர்ந்தவன்; பகைவனுக்கெதிராக உதவி செய்யுமாறு அவர் கூட்டத்தான் கோரினான் - மூஸா அ(ப் பகை)வனை ஒரு குத்துக் குத்தினார்; அவனை முடித்தார்; (இதைக் கண்ட மூஸா)| “இது ஷைத்தானுடைய வேலை; நிச்சயமாக அவன் வழி கெடுக்கக்கூடிய பகிரங்கமான விரோதியாவான்” என்று கூறினார்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர் (மூசா) நகரத்தில் -அதன் வாசிகள் கவனமற்று இருந்த நேரத்தில்- நுழைந்தார். அதில் இருவரைக் கண்டார். அவ்விருவரும் சண்டை செய்தனர். இவர் அவருடைய (-மூஸாவுடைய) பிரிவை சேர்ந்தவர். இன்னும் இவரோ அவருடைய (-மூஸாவுடைய) எதிரிகளில் உள்ளவர். இவருடைய பிரிவைச் சேர்ந்தவன் தனது எதிரிகளில் உள்ளவனுக்கு எதிராக அவரிடம் (மூஸாவிடம்) உதவி கேட்டான். மூஸா அவனை குத்து விட்டார். அவனுடைய கதையை முடித்து விட்டார். (தான் செய்த தவறை உணர்ந்த அவர்) கூறினார்: இது ஷைத்தானின் செயலில் உள்ளது. நிச்சயமாக அவன் தெளிவான வழி கெடுக்கின்ற எதிரி ஆவான்.