فَخَسَفْنَا بِهٖ وَبِدَارِهِ الْاَرْضَ ۗفَمَا كَانَ لَهٗ مِنْ فِئَةٍ يَّنْصُرُوْنَهٗ مِنْ دُوْنِ اللّٰهِ ۖوَمَا كَانَ مِنَ الْمُنْتَصِرِيْنَ ٨١
- fakhasafnā
- فَخَسَفْنَا
- ஆகவே, சொருகிவிட்டோம்
- bihi
- بِهِۦ
- அவனையும்
- wabidārihi
- وَبِدَارِهِ
- அவனுடைய இல்லத்தையும்
- l-arḍa
- ٱلْأَرْضَ
- பூமியில்
- famā kāna
- فَمَا كَانَ
- ஆக, ஏதும் இல்லை
- lahu
- لَهُۥ
- அவனுக்கு
- min fi-atin
- مِن فِئَةٍ
- கூட்டம்
- yanṣurūnahu
- يَنصُرُونَهُۥ
- அவனுக்கு உதவுகின்ற
- min dūni l-lahi
- مِن دُونِ ٱللَّهِ
- அல்லாஹ்வையன்றி
- wamā kāna
- وَمَا كَانَ
- இன்னும் அவன் இல்லை
- mina l-muntaṣirīna
- مِنَ ٱلْمُنتَصِرِينَ
- உதவி செய்துகொள்பவர்களில்
அவனையும், அவனுடைய மாளிகையையும் நாம் பூமியில் சொருகி விட்டோம். அல்லாஹ்வுக்கு எதிரிடையாக அவனுக்கு உதவி செய்யக்கூடிய கூட்டத்தார் ஒருவரும் இருக்கவில்லை. அல்லது அவன் தன்னைத்தானே (அல்லாஹ்வின் பிடியிலிருந்து) காப்பாற்றிக் கொள்ளவும் முடியவில்லை. ([௨௮] ஸூரத்துல் கஸஸ்: ௮௧)Tafseer
وَاَصْبَحَ الَّذِيْنَ تَمَنَّوْا مَكَانَهٗ بِالْاَمْسِ يَقُوْلُوْنَ وَيْكَاَنَّ اللّٰهَ يَبْسُطُ الرِّزْقَ لِمَنْ يَّشَاۤءُ مِنْ عِبَادِهٖ وَيَقْدِرُۚ لَوْلَآ اَنْ مَّنَّ اللّٰهُ عَلَيْنَا لَخَسَفَ بِنَا ۗوَيْكَاَنَّهٗ لَا يُفْلِحُ الْكٰفِرُوْنَ ࣖ ٨٢
- wa-aṣbaḥa
- وَأَصْبَحَ
- காலையில்
- alladhīna tamannaw
- ٱلَّذِينَ تَمَنَّوْا۟
- ஆசைப்பட்டவர்கள்
- makānahu
- مَكَانَهُۥ
- அவனுடைய இடத்தை
- bil-amsi
- بِٱلْأَمْسِ
- நேற்று
- yaqūlūna
- يَقُولُونَ
- கூறினர்
- wayka-anna
- وَيْكَأَنَّ
- பார்க்கவில்லையா!/நிச்சயமாக
- l-laha
- ٱللَّهَ
- அல்லாஹ்
- yabsuṭu
- يَبْسُطُ
- விசாலமாக்குகின்றான்
- l-riz'qa
- ٱلرِّزْقَ
- வாழ்வாதாரத்தை
- liman yashāu
- لِمَن يَشَآءُ
- தான் நாடியவர்களுக்கு
- min ʿibādihi
- مِنْ عِبَادِهِۦ
- தனது அடியார்களில்
- wayaqdiru
- وَيَقْدِرُۖ
- இன்னும் சுருக்கிவிடுகிறான்
- lawlā an manna
- لَوْلَآ أَن مَّنَّ
- அருள் புரிந்திருக்கவில்லையென்றால்
- l-lahu
- ٱللَّهُ
- அல்லாஹ்
- ʿalaynā
- عَلَيْنَا
- நம்மீது
- lakhasafa
- لَخَسَفَ
- அவன் சொருகியிருப்பான்
- binā
- بِنَاۖ
- நம்மையும்
- wayka-annahu
- وَيْكَأَنَّهُۥ
- பார்க்கவில்லையா!/நிச்சயமாக
- lā yuf'liḥu
- لَا يُفْلِحُ
- வெற்றி பெறமாட்டார்கள்
- l-kāfirūna
- ٱلْكَٰفِرُونَ
- நிராகரிப்பாளர்கள்
நேற்றைய தினம் அவனுடைய பதவியை விரும்பியவர் களெல்லாம் (அவனும், அவனுடைய மாளிகையும் பூமியில் சொருகிப்போனதைக் கண்ணுற்றதும் திடுக்கிட்டு நாணமுற்று) என்ன நேர்ந்தது! நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்களில் தான் விரும்பியவர்களுக்கு ஏராளமாகக் கொடுக்கின்றான்; (அவன் விரும்பியவர்களுக்கு) குறைத்தும் விடுகின்றான் என்றும், (மனிதனுடைய சாமர்த்தியத்தால் மட்டும் ஒன்றும் ஆவதில்லை என்றும்) தெரிகின்றதே! அல்லாஹ் நம்மீது அருள் புரிந்திருக்கா விடில் அவ்வாறே நம்மையும் பூமி விழுங்கியே இருக்கும், (என்று கூறினர். பிறகு திடுக்கிட்டு, நாணமுற்று) என்ன நேர்ந்தது! நிச்சயமாக (இறைவனின் அருட்கொடையை மறுக்கும்) நன்றி கெட்டவர்கள் வெற்றி அடையவே மாட்டார்கள் என்று (தெரிகின்றதே! என்று) கூற ஆரம்பித்தார்கள். ([௨௮] ஸூரத்துல் கஸஸ்: ௮௨)Tafseer
تِلْكَ الدَّارُ الْاٰخِرَةُ نَجْعَلُهَا لِلَّذِيْنَ لَا يُرِيْدُوْنَ عُلُوًّا فِى الْاَرْضِ وَلَا فَسَادًا ۗوَالْعَاقِبَةُ لِلْمُتَّقِيْنَ ٨٣
- til'ka
- تِلْكَ
- அந்த
- l-dāru
- ٱلدَّارُ
- இல்லமானது
- l-ākhiratu
- ٱلْءَاخِرَةُ
- மறுமை
- najʿaluhā
- نَجْعَلُهَا
- அதை ஆக்குவோம்
- lilladhīna lā yurīdūna
- لِلَّذِينَ لَا يُرِيدُونَ
- விரும்பாதவர்களுக்கு
- ʿuluwwan
- عُلُوًّا
- அநியாயத்தையோ
- fī l-arḍi
- فِى ٱلْأَرْضِ
- பூமியில்
- walā fasādan
- وَلَا فَسَادًاۚ
- குழப்பத்தையோ
- wal-ʿāqibatu
- وَٱلْعَٰقِبَةُ
- முடிவான நற்பாக்கியம்
- lil'muttaqīna
- لِلْمُتَّقِينَ
- இறையச்சமுடையவர்களுக்குத்தான் உண்டு
(மிக்க பாக்கியம் பெற்ற) மறுமையின் வீட்டையோ, பூமியில் பெருமையையும் விஷமத்தையும் விரும்பாதவர்களுக்கே நாம் சொந்தமாக்கி விடுவோம். ஏனென்றால், முடிவான நற்பாக்கியம் இறை அச்சம் உடையவர்களுக்குத்தான். ([௨௮] ஸூரத்துல் கஸஸ்: ௮௩)Tafseer
مَنْ جَاۤءَ بِالْحَسَنَةِ فَلَهٗ خَيْرٌ مِّنْهَاۚ وَمَنْ جَاۤءَ بِالسَّيِّئَةِ فَلَا يُجْزَى الَّذِيْنَ عَمِلُوا السَّيِّاٰتِ اِلَّا مَا كَانُوْا يَعْمَلُوْنَ ٨٤
- man
- مَن
- எவர்
- jāa
- جَآءَ
- வருவாரோ
- bil-ḥasanati
- بِٱلْحَسَنَةِ
- நன்மையைக்கொண்டு
- falahu
- فَلَهُۥ
- அவருக்கு
- khayrun
- خَيْرٌ
- நற்கூலி கிடைக்கும்
- min'hā
- مِّنْهَاۖ
- அதனால்
- waman
- وَمَن
- எவர்கள்
- jāa
- جَآءَ
- வருவார்களோ
- bil-sayi-ati
- بِٱلسَّيِّئَةِ
- தீமையைக் கொண்டு
- falā yuj'zā
- فَلَا يُجْزَى
- கூலி கொடுக்கப்பட மாட்டார்(கள்)
- alladhīna ʿamilū
- ٱلَّذِينَ عَمِلُوا۟
- செய்தவர்கள்
- l-sayiāti
- ٱلسَّيِّـَٔاتِ
- தீமைகளை
- illā
- إِلَّا
- தவிர
- mā kānū yaʿmalūna
- مَا كَانُوا۟ يَعْمَلُونَ
- அவர்கள் செய்து கொண்டிருந்ததற்கே
(உங்களில்) எவரேனும் யாதொரு நன்மையை(ச் செய்து) கொண்டு வந்தால், அவருக்கு அதைவிட மேலான கூலியே கிடைக்கும். உங்களில் எவரேனும் யாதொரு பாவத்தைக் கொண்டு வந்தாலோ, அவர் செய்த பாவங்களின் அளவேயன்றி (அதிகமாகத்) தண்டிக்கப்பட மாட்டார். ([௨௮] ஸூரத்துல் கஸஸ்: ௮௪)Tafseer
اِنَّ الَّذِيْ فَرَضَ عَلَيْكَ الْقُرْاٰنَ لَرَاۤدُّكَ اِلٰى مَعَادٍ ۗقُلْ رَّبِّيْٓ اَعْلَمُ مَنْ جَاۤءَ بِالْهُدٰى وَمَنْ هُوَ فِيْ ضَلٰلٍ مُّبِيْنٍ ٨٥
- inna
- إِنَّ
- நிச்சயமாக
- alladhī faraḍa
- ٱلَّذِى فَرَضَ
- இறக்கியவன்
- ʿalayka
- عَلَيْكَ
- உம்மீது
- l-qur'āna
- ٱلْقُرْءَانَ
- குர்ஆனை
- larādduka
- لَرَآدُّكَ
- உம்மை திரும்பக்கொண்டு வருவான்
- ilā maʿādin
- إِلَىٰ مَعَادٍۚ
- வழமைக்கு
- qul
- قُل
- கூறுவீராக!
- rabbī
- رَّبِّىٓ
- என் இறைவன்
- aʿlamu
- أَعْلَمُ
- மிக அறிந்தவன்
- man jāa
- مَن جَآءَ
- கொண்டு வந்தவரையும்
- bil-hudā
- بِٱلْهُدَىٰ
- நேர்வழியை
- waman huwa
- وَمَنْ هُوَ
- இருப்பவரையும்
- fī ḍalālin
- فِى ضَلَٰلٍ
- வழிகேட்டில்
- mubīnin
- مُّبِينٍ
- தெளிவான
(நபியே!) நிச்சயமாக எவன் இந்தக் குர்ஆனின் கட்டளைகளை உங்கள் மீது விதித்து இருக்கின்றானோ அவன் நிச்சயமாக உங்களை (மக்காவாகிய) உங்களுடைய இல்லத்தில் திரும்பச் சேர்த்து வைப்பான். ஆகவே, (நபியே!) நீங்கள் கூறுங்கள்: நேரான வழியைக் கொண்டு வந்திருப்பவர் யார்? (அதனை மறுத்துப்) பகிரங்கமான வழிகேட்டில் இருப்பவர் யார்? என்பதை என் இறைவன் நன்கறிவான். ([௨௮] ஸூரத்துல் கஸஸ்: ௮௫)Tafseer
وَمَا كُنْتَ تَرْجُوْٓا اَنْ يُّلْقٰٓى اِلَيْكَ الْكِتٰبُ اِلَّا رَحْمَةً مِّنْ رَّبِّكَ فَلَا تَكُوْنَنَّ ظَهِيْرًا لِّلْكٰفِرِيْنَ ۖ ٨٦
- wamā kunta tarjū
- وَمَا كُنتَ تَرْجُوٓا۟
- நீர் எதிர்பார்த்திருக்கவில்லை
- an yul'qā
- أَن يُلْقَىٰٓ
- இறக்கப்படுவதை
- ilayka
- إِلَيْكَ
- உமக்கு
- l-kitābu
- ٱلْكِتَٰبُ
- இந்த வேதம்
- illā
- إِلَّا
- என்றாலும்
- raḥmatan
- رَحْمَةً
- கருணையினால்தான்`
- min rabbika
- مِّن رَّبِّكَۖ
- உமது இறைவனின்
- falā takūnanna
- فَلَا تَكُونَنَّ
- ஆகவே நீர் அறவே ஆகிவிடாதீர்
- ẓahīran
- ظَهِيرًا
- உதவியாளராக
- lil'kāfirīna
- لِّلْكَٰفِرِينَ
- நிராகரிப்பாளர்களுக்கு
(நபியே!) உங்களது இறைவனின் அருளால் அன்றி இவ்வேதம் (அவன் புறத்திலிருந்து) உங்களுக்குக் கொடுக்கப்படும் என்று நீங்கள் எதிர்பார்த்திருக்கவில்லை. (அவனுடைய அருளாலேயே இது உங்களுக்குக் கொடுக்கப்படுகின்றது.) ஆகவே, நீங்கள் நிராகரிப்பவர்களுக்கு உதவியாக இருக்கவேண்டாம். ([௨௮] ஸூரத்துல் கஸஸ்: ௮௬)Tafseer
وَلَا يَصُدُّنَّكَ عَنْ اٰيٰتِ اللّٰهِ بَعْدَ اِذْ اُنْزِلَتْ اِلَيْكَ وَادْعُ اِلٰى رَبِّكَ وَلَا تَكُوْنَنَّ مِنَ الْمُشْرِكِيْنَ ۚ ٨٧
- walā yaṣuddunnaka
- وَلَا يَصُدُّنَّكَ
- உம்மை அவர்கள் திருப்பி விடவேண்டாம்
- ʿan āyāti
- عَنْ ءَايَٰتِ
- வசனங்களை விட்டு
- l-lahi
- ٱللَّهِ
- அல்லாஹ்வின்
- baʿda
- بَعْدَ
- பின்னர்
- idh unzilat
- إِذْ أُنزِلَتْ
- அவை இறக்கப்பட்டதன்
- ilayka
- إِلَيْكَۖ
- உமக்கு
- wa-ud'ʿu
- وَٱدْعُ
- அழைப்பீராக
- ilā
- إِلَىٰ
- பக்கம்
- rabbika
- رَبِّكَۖ
- உமது இறைவன்
- walā takūnanna
- وَلَا تَكُونَنَّ
- இன்னும் நீர் ஒருபோதும் ஆகிவிடாதீர்
- mina l-mush'rikīna
- مِنَ ٱلْمُشْرِكِينَ
- இணைவைப்பவர்களில்
இவ்வேதம் உங்களுக்கு அருளப்பட்ட பின் (இதிலுள்ள) அல்லாஹ்வுடைய வசனங்களி(ன் பக்கம் நீங்கள் மக்களை அழைப்பதி)லிருந்து அவர்கள் உங்களைத் தடுத்து விட வேண்டாம். ஆகவே, உங்கள் இறைவன் பக்கம் (நீங்கள் அவர்களை) அழைத்துக் கொண்டேயிருங்கள். நிச்சயமாக இணைவைத்து வணங்குபவர்களுடன் சேர்ந்து விட வேண்டாம். ([௨௮] ஸூரத்துல் கஸஸ்: ௮௭)Tafseer
وَلَا تَدْعُ مَعَ اللّٰهِ اِلٰهًا اٰخَرَۘ لَآ اِلٰهَ اِلَّا هُوَۗ كُلُّ شَيْءٍ هَالِكٌ اِلَّا وَجْهَهٗ ۗ لَهُ الْحُكْمُ وَاِلَيْهِ تُرْجَعُوْنَ ࣖ ٨٨
- walā tadʿu
- وَلَا تَدْعُ
- இன்னும் அழைத்துவிடாதீர் !
- maʿa l-lahi
- مَعَ ٱللَّهِ
- அல்லாஹ்வுடன்
- ilāhan
- إِلَٰهًا
- ஒரு கடவுளை
- ākhara
- ءَاخَرَۘ
- வேறு
- lā
- لَآ
- இல்லவே இல்லை
- ilāha
- إِلَٰهَ
- வணக்கத்திற்குரிய கடவுள்
- illā
- إِلَّا
- தவிர
- huwa
- هُوَۚ
- அவனை
- kullu
- كُلُّ
- எல்லா
- shayin
- شَىْءٍ
- பொருள்களும்
- hālikun
- هَالِكٌ
- அழியக்கூடியவையே
- illā
- إِلَّا
- தவிர
- wajhahu
- وَجْهَهُۥۚ
- அவனது முகத்தை
- lahu
- لَهُ
- அவனுக்கே உரியது
- l-ḥuk'mu
- ٱلْحُكْمُ
- அதிகாரம்
- wa-ilayhi
- وَإِلَيْهِ
- அவனிடமே
- tur'jaʿūna
- تُرْجَعُونَ
- நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்
(நபியே!) அல்லாஹ்வுடன் வணக்கத்திற்குரிய வேறொரு இறைவனை நீங்கள் அழைக்க வேண்டாம். அவனைத் தவிர வணக்கத்திற்குரிய வேறு இறைவன் இல்லவே இல்லை. அவனைத் தவிர எல்லா பொருள்களும் அழிந்துவிடக் கூடியனவே. எல்லா அதிகாரங்களும் அவனுக்குரியனவே. அவனிடமே நீங்கள் அனைவரும் கொண்டு வரப்படுவீர்கள். ([௨௮] ஸூரத்துல் கஸஸ்: ௮௮)Tafseer