اَفَمَنْ وَّعَدْنٰهُ وَعْدًا حَسَنًا فَهُوَ لَاقِيْهِ كَمَنْ مَّتَّعْنٰهُ مَتَاعَ الْحَيٰوةِ الدُّنْيَا ثُمَّ هُوَ يَوْمَ الْقِيٰمَةِ مِنَ الْمُحْضَرِيْنَ ٦١
- afaman
- أَفَمَن
- எவருக்கு
- waʿadnāhu
- وَعَدْنَٰهُ
- நாம் வாக்களித்தோம்
- waʿdan
- وَعْدًا
- வாக்கை
- ḥasanan
- حَسَنًا
- அழகிய
- fahuwa
- فَهُوَ
- அவர்
- lāqīhi
- لَٰقِيهِ
- அதை சந்திப்பாரோ
- kaman mattaʿnāhu
- كَمَن مَّتَّعْنَٰهُ
- நாம் இன்பமளித்தவர் போன்று ஆவாரா?
- matāʿa
- مَتَٰعَ
- இன்பத்தைக்கொண்டு
- l-ḥayati
- ٱلْحَيَوٰةِ
- வாழ்க்கையின்
- l-dun'yā
- ٱلدُّنْيَا
- இவ்வுலக
- thumma
- ثُمَّ
- பிறகு
- huwa
- هُوَ
- இவர்
- yawma l-qiyāmati
- يَوْمَ ٱلْقِيَٰمَةِ
- மறுமை நாளில்
- mina l-muḥ'ḍarīna
- مِنَ ٱلْمُحْضَرِينَ
- ஆஜர்படுத்தப்பட்டவர்களில் இருப்பார்
எவனுக்கு நாம் நன்மை தருவதாக வாக்களித்து அதனை அவன் அடையக்கூடியவனாகவும் இருக்கின்றானோ அவன், எவனுக்கு நாம் இவ்வுலகத்தில் அற்ப சுகத்தை அனுபவிக்கும்படி விட்டுவைத்துப் பின்னர் மறுமையில் (அதற்குக் கணக்குக் கொடுக்கும்படி) நம்மிடம் பிடித்துக்கொண்டு வரப்படுவானோ அவனைப் போலாவானா? (இவ்விருவரும் சமமாக மாட்டார்கள்.) ([௨௮] ஸூரத்துல் கஸஸ்: ௬௧)Tafseer
وَيَوْمَ يُنَادِيْهِمْ فَيَقُوْلُ اَيْنَ شُرَكَاۤءِيَ الَّذِيْنَ كُنْتُمْ تَزْعُمُوْنَ ٦٢
- wayawma
- وَيَوْمَ
- இன்னும் நாளில்
- yunādīhim
- يُنَادِيهِمْ
- அவன் அவர்களை அழைப்பான்
- fayaqūlu
- فَيَقُولُ
- அவன் கேட்பான்
- ayna
- أَيْنَ
- எங்கே என்று
- shurakāiya
- شُرَكَآءِىَ
- எனது இணைகள்
- alladhīna kuntum tazʿumūna
- ٱلَّذِينَ كُنتُمْ تَزْعُمُونَ
- நீங்கள் சொல்லிக்கொண்டிருந்த
(இறைவன்) அவர்களை (விசாரணைக்காக) அழைக்கும் நாளில் (அவர்களை நோக்கி "பொய்யான தெய்வங்களை) எனக்கு இணையானவை என்று நீங்கள் எண்ணிக் கொண்டிருந்தீர்களே! அவை எங்கே?" என்று கேட்பான். ([௨௮] ஸூரத்துல் கஸஸ்: ௬௨)Tafseer
قَالَ الَّذِيْنَ حَقَّ عَلَيْهِمُ الْقَوْلُ رَبَّنَا هٰٓؤُلَاۤءِ الَّذِيْنَ اَغْوَيْنَاۚ اَغْوَيْنٰهُمْ كَمَا غَوَيْنَاۚ تَبَرَّأْنَآ اِلَيْكَ مَا كَانُوْٓا اِيَّانَا يَعْبُدُوْنَ ٦٣
- qāla
- قَالَ
- கூறுவார்(கள்)
- alladhīna ḥaqqa
- ٱلَّذِينَ حَقَّ
- எவர்கள்/கடமையாகிவிட்டது
- ʿalayhimu
- عَلَيْهِمُ
- அவர்கள் மீது
- l-qawlu
- ٱلْقَوْلُ
- வாக்கு
- rabbanā
- رَبَّنَا
- எங்கள் இறைவா!
- hāulāi
- هَٰٓؤُلَآءِ
- இவர்கள்தான்
- alladhīna
- ٱلَّذِينَ
- எவர்கள்
- aghwaynā
- أَغْوَيْنَآ
- நாங்கள் வழிகெடுத்தோம்
- aghwaynāhum
- أَغْوَيْنَٰهُمْ
- அவர்களை நாங்கள் வழிகெடுத்தோம்
- kamā
- كَمَا
- போன்றே
- ghawaynā
- غَوَيْنَاۖ
- நாங்கள் வழிகெட்டது
- tabarranā
- تَبَرَّأْنَآ
- நாங்கள் விலகி விட்டோம்
- ilayka
- إِلَيْكَۖ
- உன் பக்கம்
- mā kānū
- مَا كَانُوٓا۟
- அவர்கள் இல்லை
- iyyānā
- إِيَّانَا
- எங்களை
- yaʿbudūna
- يَعْبُدُونَ
- அவர்கள் வணங்குகின்றனர்
(இணைவைக்கும்படி செய்து வழிகெடுத்தவர்களில்) எவர்கள் மீது நம்முடைய தண்டனை விதிக்கப்பட்டு விட்டதோ அவர்கள் (இறைவனை நோக்கி) "எங்கள் இறைவனே! நாங்கள் வழி கெடுத்தவர்கள் இவர்கள்தாம். (எனினும், எவருடைய நிர்ப்பந்தமுமின்றி) எவ்வாறு நாங்கள் வழி கெட்டோமோ அவ்வாறே இவர்களையும் (எவ்வித நிர்ப்பந்தமுமின்றியே) வழி கெடுத்தோம். ஆதலால், உன்னிடம் (அவர்களுடைய பொறுப்பிலிருந்து) நாங்கள் விலகிக் கொள்கின்றோம். அவர்கள் எங்களை வணங்கிக் கொண்டிருக்கவும் இல்லை" என்று கூறுவார்கள். ([௨௮] ஸூரத்துல் கஸஸ்: ௬௩)Tafseer
وَقِيْلَ ادْعُوْا شُرَكَاۤءَكُمْ فَدَعَوْهُمْ فَلَمْ يَسْتَجِيْبُوْا لَهُمْ ۗوَرَاَوُا الْعَذَابَۚ لَوْ اَنَّهُمْ كَانُوْا يَهْتَدُوْنَ ٦٤
- waqīla
- وَقِيلَ
- இன்னும் சொல்லப்படும்
- id'ʿū
- ٱدْعُوا۟
- அழையுங்கள்
- shurakāakum
- شُرَكَآءَكُمْ
- தெய்வங்களை உங்கள்
- fadaʿawhum
- فَدَعَوْهُمْ
- அவற்றை அவர்கள் அழைப்பார்கள்
- falam yastajībū
- فَلَمْ يَسْتَجِيبُوا۟
- ஆனால், அவை பதில் தரமாட்டா
- lahum
- لَهُمْ
- அவர்களுக்கு
- wara-awū
- وَرَأَوُا۟
- இன்னும் காண்பார்கள்
- l-ʿadhāba
- ٱلْعَذَابَۚ
- தண்டனையை
- law annahum kānū
- لَوْ أَنَّهُمْ كَانُوا۟
- நிச்சயமாக தாங்கள் இருந்திருக்க வேண்டுமே!
- yahtadūna
- يَهْتَدُونَ
- நேர்வழி பெற்றவர்களாக
பின்னர், தங்கள் பொய்யான தெய்வங்களை (உதவிக்கு) அழைக்கும்படி அவர்களுக்குக் கூறப்பட்டு, அவ்வாறே அவர்கள் அவைகளையும் அழைப்பார்கள். எனினும், அவை இவர்களுக்கு (வாய் திறந்து) பதிலும் கொடுக்கா. அதற்குள்ளாக இவர்கள் தங்கள் வேதனையைக் கண்டு கொள்வார்கள். இவர்கள் நேரான வழியில் சென்றிருந்தால் (இக்கதிக்கு ஆளாகியிருக்க மாட்டார்கள்.) ([௨௮] ஸூரத்துல் கஸஸ்: ௬௪)Tafseer
وَيَوْمَ يُنَادِيْهِمْ فَيَقُوْلُ مَاذَآ اَجَبْتُمُ الْمُرْسَلِيْنَ ٦٥
- wayawma
- وَيَوْمَ
- இன்னும் நாளில்
- yunādīhim
- يُنَادِيهِمْ
- அவன் அவர்களை அழைக்கின்றான்
- fayaqūlu
- فَيَقُولُ
- அவன் கேட்பான்
- mādhā
- مَاذَآ
- என்ன
- ajabtumu
- أَجَبْتُمُ
- நீங்கள் பதிலளித்தீர்கள்
- l-mur'salīna
- ٱلْمُرْسَلِينَ
- தூதர்களுக்கு
அவர்கள் (விசாரணைக்காக) அழைக்கப்படும் நாளில், (அவர்களை நோக்கி, நம்முடைய நேரான வழியில் அழைக்க உங்களிடம் வந்த) நம்முடைய தூதர்களுக்கு நீங்கள் என்ன பதில் கூறினீர்கள்?" என்று கேட்கப்படும். ([௨௮] ஸூரத்துல் கஸஸ்: ௬௫)Tafseer
فَعَمِيَتْ عَلَيْهِمُ الْاَنْۢبَاۤءُ يَوْمَىِٕذٍ فَهُمْ لَا يَتَسَاۤءَلُوْنَ ٦٦
- faʿamiyat
- فَعَمِيَتْ
- மறைத்து விடும்
- ʿalayhimu
- عَلَيْهِمُ
- அவர்கள் மீது
- l-anbāu
- ٱلْأَنۢبَآءُ
- செய்திகள்
- yawma-idhin
- يَوْمَئِذٍ
- அந்நாளில்
- fahum
- فَهُمْ
- ஆகவே, அவர்கள்
- lā yatasāalūna
- لَا يَتَسَآءَلُونَ
- கேட்டுக்கொள்ள மாட்டார்கள்
அந்நேரத்தில் எல்லா விஷயங்களையும் அவர்கள் மறந்து தடுமாறி (எதைப் பற்றியும்) ஒருவர் ஒருவரைக் கேட்க சக்தியற்றுப் போவார்கள். ([௨௮] ஸூரத்துல் கஸஸ்: ௬௬)Tafseer
فَاَمَّا مَنْ تَابَ وَاٰمَنَ وَعَمِلَ صَالِحًا فَعَسٰٓى اَنْ يَّكُوْنَ مِنَ الْمُفْلِحِيْنَ ٦٧
- fa-ammā
- فَأَمَّا
- ஆக,
- man
- مَن
- யார்
- tāba
- تَابَ
- திருந்தினார்
- waāmana
- وَءَامَنَ
- இன்னும் நம்பிக்கைகொண்டார்
- waʿamila
- وَعَمِلَ
- இன்னும் செய்வார்
- ṣāliḥan
- صَٰلِحًا
- நற்செயலை
- faʿasā an yakūna
- فَعَسَىٰٓ أَن يَكُونَ
- அவர் ஆகக்கூடும்
- mina l-muf'liḥīna
- مِنَ ٱلْمُفْلِحِينَ
- வெற்றியாளர்களில்
எனினும், (இவர்களில்) எவர்கள் கைசேதப்பட்டு (பாவத்தில் இருந்து) விலகி, மன்னிப்புக் கோரி, நம்பிக்கை கொண்டு நற் செயல்களைச் செய்கின்றார்களோ அவர்கள் வெற்றி அடைந்தவர்களில் (சேர்ந்து) விடுவார்கள். ([௨௮] ஸூரத்துல் கஸஸ்: ௬௭)Tafseer
وَرَبُّكَ يَخْلُقُ مَا يَشَاۤءُ وَيَخْتَارُ ۗمَا كَانَ لَهُمُ الْخِيَرَةُ ۗسُبْحٰنَ اللّٰهِ وَتَعٰلٰى عَمَّا يُشْرِكُوْنَ ٦٨
- warabbuka
- وَرَبُّكَ
- உமது இறைவன்
- yakhluqu
- يَخْلُقُ
- படைக்கிறான்
- mā yashāu
- مَا يَشَآءُ
- தான் நாடுவதை
- wayakhtāru
- وَيَخْتَارُۗ
- இன்னும் தேர்ந்தெடுக்கிறான்
- mā kāna
- مَا كَانَ
- இல்லை
- lahumu
- لَهُمُ
- அவர்களுக்கு
- l-khiyaratu
- ٱلْخِيَرَةُۚ
- விருப்பம்
- sub'ḥāna
- سُبْحَٰنَ
- மகா பரிசுத்தமானவன்
- l-lahi
- ٱللَّهِ
- அல்லாஹ்
- wataʿālā
- وَتَعَٰلَىٰ
- மிக உயர்ந்தவன்
- ʿammā yush'rikūna
- عَمَّا يُشْرِكُونَ
- அவர்கள் இணைவைப்பவற்றை விட்டு
(நபியே!) உங்களது இறைவன், தான் விரும்பியவர்களை படைத்து(த் தன்னுடைய தூதுக்காக அவர்களில்) தான் விரும்பிய வர்களைத் தேர்ந்தெடுக்கின்றான். (அவ்வாறு தூதரைத்) தேர்ந்தெடுப்பதில் இவர்களுக்கு எத்தகைய உரிமையும் இல்லை. இவர்கள் இணை வைப்பவைகளிலிருந்து அல்லாஹ் மிக்க உயர்ந்தவனும் பரிசுத்தமானவனுமாவான். ([௨௮] ஸூரத்துல் கஸஸ்: ௬௮)Tafseer
وَرَبُّكَ يَعْلَمُ مَا تُكِنُّ صُدُوْرُهُمْ وَمَا يُعْلِنُوْنَ ٦٩
- warabbuka
- وَرَبُّكَ
- உமது இறைவன்
- yaʿlamu
- يَعْلَمُ
- நன்கறிவான்
- mā tukinnu
- مَا تُكِنُّ
- மறைக்கின்றவற்றையும்
- ṣudūruhum
- صُدُورُهُمْ
- நெஞ்சங்கள் அவர்களது
- wamā yuʿ'linūna
- وَمَا يُعْلِنُونَ
- அவர்கள் பகிரங்கப்படுத்துபவற்றையும்
உங்களது இறைவன் அவர்களுடைய உள்ளங்கள் மறைத்து வைத்திருப்பதையும் (அதற்கு மாறாக) அவர்கள் வெளியிடுவதையும் நன்கறிவான். ([௨௮] ஸூரத்துல் கஸஸ்: ௬௯)Tafseer
وَهُوَ اللّٰهُ لَآ اِلٰهَ اِلَّا هُوَ ۗ لَهُ الْحَمْدُ فِى الْاُوْلٰى وَالْاٰخِرَةِ ۖوَلَهُ الْحُكْمُ وَاِلَيْهِ تُرْجَعُوْنَ ٧٠
- wahuwa
- وَهُوَ
- அவன்தான்
- l-lahu
- ٱللَّهُ
- அல்லாஹ்
- lā
- لَآ
- அறவே இல்லை
- ilāha
- إِلَٰهَ
- வணக்கத்திற்குரியவன்
- illā
- إِلَّا
- தவிர
- huwa
- هُوَۖ
- அவனை
- lahu
- لَهُ
- அவனுக்கே
- l-ḥamdu
- ٱلْحَمْدُ
- புகழ்
- fī l-ūlā wal-ākhirati
- فِى ٱلْأُولَىٰ وَٱلْءَاخِرَةِۖ
- இவ்வுலகிலும் மறுமையிலும்
- walahu
- وَلَهُ
- அவனுக்கே
- l-ḥuk'mu
- ٱلْحُكْمُ
- தீர்ப்பளிப்பது
- wa-ilayhi
- وَإِلَيْهِ
- இன்னும் அவனிடமே
- tur'jaʿūna
- تُرْجَعُونَ
- நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்
அவன்தான் அல்லாஹ்; அவனைத்தவிர வணக்கத்திற்குரிய இறைவன் (இல்லவே) இல்லை. இம்மையிலும், மறுமையிலும் புகழ் அனைத்தும் அவனுக்கு உரியனவே! (மறுமையில் தீர்ப்பு கூறும்) அதிகாரமும் அவனுக்குரியதே! ஆதலால், (மறுமையில்) நீங்கள் (அனைவரும்) அவனிடமே கொண்டு வரப்படுவீர்கள். ([௨௮] ஸூரத்துல் கஸஸ்: ௭௦)Tafseer