Skip to content

ஸூரா ஸூரத்துல் கஸஸ் - Page: 6

Al-Qasas

(al-Q̈aṣaṣ)

௫௧

۞ وَلَقَدْ وَصَّلْنَا لَهُمُ الْقَوْلَ لَعَلَّهُمْ يَتَذَكَّرُوْنَ ۗ ٥١

walaqad
وَلَقَدْ
திட்டவட்டமாக
waṣṣalnā
وَصَّلْنَا
நாம் சேர்ப்பித்தோம்
lahumu
لَهُمُ
அவர்களுக்கு
l-qawla
ٱلْقَوْلَ
செய்தியை
laʿallahum yatadhakkarūna
لَعَلَّهُمْ يَتَذَكَّرُونَ
அவர்கள் நல்லுணர்வு பெறுவதற்காக
அவர்கள் நல்லுணர்ச்சி பெறும் பொருட்டு நம்முடைய வசனத்தை மென்மேலும் அவர்களுக்கு (இறக்கி)ச் சேர்ப்பித்தே வந்தோம். ([௨௮] ஸூரத்துல் கஸஸ்: ௫௧)
Tafseer
௫௨

اَلَّذِيْنَ اٰتَيْنٰهُمُ الْكِتٰبَ مِنْ قَبْلِهٖ هُمْ بِهٖ يُؤْمِنُوْنَ ٥٢

alladhīna ātaynāhumu
ٱلَّذِينَ ءَاتَيْنَٰهُمُ
நாம் கொடுத்தவர்கள்
l-kitāba
ٱلْكِتَٰبَ
வேதத்தை
min qablihi
مِن قَبْلِهِۦ
இதற்கு முன்னர்
hum
هُم
அவர்கள்
bihi
بِهِۦ
இதையும்
yu'minūna
يُؤْمِنُونَ
நம்பிக்கை கொள்வார்கள்
ஆகவே, இதற்கு முன்னர் எவர்களுக்கு நாம் நம்முடைய வேதத்தைக் கொடுத்து, அவர்களும் அதனை உண்மையாகவே நம்பிக்கை கொள்கின்றார்களோ, ([௨௮] ஸூரத்துல் கஸஸ்: ௫௨)
Tafseer
௫௩

وَاِذَا يُتْلٰى عَلَيْهِمْ قَالُوْٓا اٰمَنَّا بِهٖٓ اِنَّهُ الْحَقُّ مِنْ رَّبِّنَآ اِنَّا كُنَّا مِنْ قَبْلِهٖ مُسْلِمِيْنَ ٥٣

wa-idhā yut'lā
وَإِذَا يُتْلَىٰ
ஓதப்பட்டால்
ʿalayhim
عَلَيْهِمْ
அவர்கள் முன்
qālū
قَالُوٓا۟
அவர்கள் கூறுவார்கள்
āmannā
ءَامَنَّا
நாங்கள் நம்பிக்கை கொண்டோம்
bihi
بِهِۦٓ
இதை
innahu
إِنَّهُ
நிச்சயமாக இது
l-ḥaqu
ٱلْحَقُّ
உண்மையான வேதம்
min rabbinā
مِن رَّبِّنَآ
எங்கள் இறைவனிடமிருந்து
innā kunnā
إِنَّا كُنَّا
நிச்சயமாக நாங்கள் இருந்தோம்
min qablihi
مِن قَبْلِهِۦ
இதற்கு முன்னரும்
mus'limīna
مُسْلِمِينَ
முஸ்லிம்களாகவே இருந்தோம்
அவர்கள் மீது (இவ்வேதம்) ஓதிக் காண்பிக்கப்பட்டால் அதற்கவர்கள் "இதனையும் நாங்கள் நம்பிக்கை கொண்டோம். நிச்சயமாக இதுவும் எங்கள் இறைவனிடமிருந்து வந்த உண்மை(யான வேதம்)தான். இதற்கு முன்னதாகவே நிச்சயமாக நாங்கள் இதனை (எங்கள் வேதத்தின் மூலம் அறிந்து) ஏற்றுக் கொண்டிருக்கின்றோம்" என்று கூறுவார்கள். ([௨௮] ஸூரத்துல் கஸஸ்: ௫௩)
Tafseer
௫௪

اُولٰۤىِٕكَ يُؤْتَوْنَ اَجْرَهُمْ مَّرَّتَيْنِ بِمَا صَبَرُوْا وَيَدْرَءُوْنَ بِالْحَسَنَةِ السَّيِّئَةَ وَمِمَّا رَزَقْنٰهُمْ يُنْفِقُوْنَ ٥٤

ulāika
أُو۟لَٰٓئِكَ
அவர்கள்
yu'tawna
يُؤْتَوْنَ
வழங்கப்படுவார்கள்
ajrahum
أَجْرَهُم
தங்கள் கூலியை
marratayni
مَّرَّتَيْنِ
இருமுறை
bimā ṣabarū
بِمَا صَبَرُوا۟
அவர்கள் பொறுமையாக இருந்ததால்
wayadraūna
وَيَدْرَءُونَ
இன்னும் அவர்கள் தடுப்பார்கள்
bil-ḥasanati
بِٱلْحَسَنَةِ
நன்மையைக்கொண்டு
l-sayi-ata
ٱلسَّيِّئَةَ
தீமையை
wamimmā razaqnāhum
وَمِمَّا رَزَقْنَٰهُمْ
இன்னும் நாம் அவர்களுக்கு வழங்கியவற்றிலிருந்து
yunfiqūna
يُنفِقُونَ
தர்மம் செய்வார்கள்
இத்தகையவர் உறுதியாக இருந்ததன் காரணத்தால், இரண்டு தடவைகள் அவர்களுக்கு (நற்) கூலி கொடுக்கப்படும். இத்தகைய வர்கள், தீய காரியங்களை நன்மையைக் கொண்டே தடுத்துக் கொள்வார்கள். நாம் அவர்களுக்கு அளித்தவைகளில் இருந்து அவர்கள் தானமும் செய்வார்கள். ([௨௮] ஸூரத்துல் கஸஸ்: ௫௪)
Tafseer
௫௫

وَاِذَا سَمِعُوا اللَّغْوَ اَعْرَضُوْا عَنْهُ وَقَالُوْا لَنَآ اَعْمَالُنَا وَلَكُمْ اَعْمَالُكُمْ ۖسَلٰمٌ عَلَيْكُمْ ۖ لَا نَبْتَغِى الْجٰهِلِيْنَ ٥٥

wa-idhā samiʿū
وَإِذَا سَمِعُوا۟
அவர்கள் செவிமடுத்தால்
l-laghwa
ٱللَّغْوَ
வீணானவற்றை
aʿraḍū
أَعْرَضُوا۟
புறக்கணித்து விடுவார்கள்
ʿanhu
عَنْهُ
அதை
waqālū
وَقَالُوا۟
இன்னும் கூறுவார்கள்
lanā
لَنَآ
எங்களுக்கு
aʿmālunā
أَعْمَٰلُنَا
எங்கள் செயல்கள்
walakum
وَلَكُمْ
இன்னும் உங்களுக்கு
aʿmālukum
أَعْمَٰلُكُمْ
உங்கள் செயல்கள்
salāmun
سَلَٰمٌ
ஸலாம் உண்டாகட்டும்
ʿalaykum
عَلَيْكُمْ
உங்கள் மீது
lā nabtaghī
لَا نَبْتَغِى
நாங்கள் விரும்ப மாட்டோம்
l-jāhilīna
ٱلْجَٰهِلِينَ
அறியாதவர்களிடம்
அன்றி, அவர்கள் வீணான வார்த்தைகளைக் கேள்வி யுற்றால் (அதில் சம்பந்தப்படாது) அதனைப் புறக்கணித்து விட்டு "எங்களுடைய காரியங்கள் எங்களுக்கும் உங்களுடைய காரியங்கள் உங்களுக்கும் (பெரியது) உங்களுக்கு ஸலாம்! அறியாதவர்களிடம் நாங்கள் (தர்க்கிக்க) விரும்புவதில்லை" என்று கூறுவார்கள். ([௨௮] ஸூரத்துல் கஸஸ்: ௫௫)
Tafseer
௫௬

اِنَّكَ لَا تَهْدِيْ مَنْ اَحْبَبْتَ وَلٰكِنَّ اللّٰهَ يَهْدِيْ مَنْ يَّشَاۤءُ ۚوَهُوَ اَعْلَمُ بِالْمُهْتَدِيْنَ ٥٦

innaka
إِنَّكَ
நிச்சயமாக நீர்
lā tahdī
لَا تَهْدِى
நீர் நேர்வழி செலுத்த மாட்டீர்
man aḥbabta
مَنْ أَحْبَبْتَ
நீர் விரும்பியவரை
walākinna
وَلَٰكِنَّ
என்றாலும்
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்
yahdī
يَهْدِى
நேர்வழி செலுத்துகின்றான்
man yashāu
مَن يَشَآءُۚ
தான் நாடியவரை
wahuwa
وَهُوَ
அவன்தான்
aʿlamu
أَعْلَمُ
மிக அறிந்தவன்
bil-muh'tadīna
بِٱلْمُهْتَدِينَ
நேர்வழி செல்பவர்களை
(நபியே!) நிச்சயமாக நீங்கள் இவர்களில் விரும்பியவர்களை நேரான வழியில் செலுத்த உங்களால் முடியாது. எனினும், தான் விரும்பியவர்களை அல்லாஹ் நேரான வழியில் செலுத்துகின்றான். நேரான வழியில் செல்லத் தகுதியுடையவர் யார் என்பதை அவனே நன்கறிவான். ([௨௮] ஸூரத்துல் கஸஸ்: ௫௬)
Tafseer
௫௭

وَقَالُوْٓا اِنْ نَّتَّبِعِ الْهُدٰى مَعَكَ نُتَخَطَّفْ مِنْ اَرْضِنَاۗ اَوَلَمْ نُمَكِّنْ لَّهُمْ حَرَمًا اٰمِنًا يُّجْبٰٓى اِلَيْهِ ثَمَرٰتُ كُلِّ شَيْءٍ رِّزْقًا مِّنْ لَّدُنَّا وَلٰكِنَّ اَكْثَرَهُمْ لَا يَعْلَمُوْنَ ٥٧

waqālū
وَقَالُوٓا۟
அவர்கள் கூறினர்
in nattabiʿi
إِن نَّتَّبِعِ
நாம் பின்பற்றினால்
l-hudā
ٱلْهُدَىٰ
நேர்வழியை
maʿaka
مَعَكَ
உம்முடன்
nutakhaṭṭaf
نُتَخَطَّفْ
நாங்கள் வெளியேற்றப்பட்டிருப்போம்
min arḍinā
مِنْ أَرْضِنَآۚ
எங்கள் பூமியிலிருந்து
awalam numakkin
أَوَلَمْ نُمَكِّن
நாம் ஸ்திரப்படுத்தித் தரவில்லையா?
lahum
لَّهُمْ
அவர்களுக்கு
ḥaraman
حَرَمًا
புனித தலத்தை
āminan
ءَامِنًا
பாதுகாப்பான
yuj'bā
يُجْبَىٰٓ
கொண்டு வரப்படுகின்றன
ilayhi
إِلَيْهِ
அங்கு
thamarātu
ثَمَرَٰتُ
கனிகளும்
kulli
كُلِّ
எல்லா
shayin
شَىْءٍ
வகையான
riz'qan
رِّزْقًا
உணவாக
min ladunnā
مِّن لَّدُنَّا
நம் புறத்திலிருந்து
walākinna
وَلَٰكِنَّ
என்றாலும்
aktharahum
أَكْثَرَهُمْ
அதிகமானவர்கள் அவர்களில்
lā yaʿlamūna
لَا يَعْلَمُونَ
அறியமாட்டார்கள்
(நபியே! மக்காவாசிகளான) இவர்கள் (உங்களை நோக்கி) "நாங்கள் உங்களுடன் குர்ஆனைப் பின்பற்றினால், எங்கள் ஊரில் இருந்த நாங்கள் (இறாய்ஞ்சித்) தூக்கிச் செல்லப்பட்டு விடுவோம்" என்று கூறுகின்றனர். (இவர்கள் சிந்திக்க வேண்டாமா?) அபயமளிக்கும் மிக்க கண்ணியமான இடத்தில் (இவர்கள் வசித்திருக்க) இவர்களுக்கு நாம் வசதி அளிக்கவில்லையா? ஒவ்வொரு கனி வர்க்கமும் உணவாக நம்மிடமிருந்து அங்கு வந்து குவிந்துகொண்டே இருக்கின்றது. எனினும், இவர்களில் பெரும்பாலானவர்கள் (இதன் நன்றியை) அறியமாட்டார்கள். ([௨௮] ஸூரத்துல் கஸஸ்: ௫௭)
Tafseer
௫௮

وَكَمْ اَهْلَكْنَا مِنْ قَرْيَةٍ ۢ بَطِرَتْ مَعِيْشَتَهَا ۚفَتِلْكَ مَسٰكِنُهُمْ لَمْ تُسْكَنْ مِّنْۢ بَعْدِهِمْ اِلَّا قَلِيْلًاۗ وَكُنَّا نَحْنُ الْوَارِثِيْنَ ٥٨

wakam
وَكَمْ
எத்தனையோ
ahlaknā
أَهْلَكْنَا
நாம் அழித்தோம்
min qaryatin
مِن قَرْيَةٍۭ
ஊர்களை
baṭirat
بَطِرَتْ
வரம்பு மீறி நிராகரித்தனர்
maʿīshatahā
مَعِيشَتَهَاۖ
தங்களது வாழ்க்கை (வசதியால்)
fatil'ka
فَتِلْكَ
இதோ
masākinuhum
مَسَٰكِنُهُمْ
அவர்களது இல்லங்கள்
lam tus'kan
لَمْ تُسْكَن
வசிக்கப்படவில்லை
min
مِّنۢ
பின்னர்
baʿdihim
بَعْدِهِمْ
பின்னர் அவர்களுக்கு
illā
إِلَّا
தவிர
qalīlan
قَلِيلًاۖ
குறைவாகவே
wakunnā
وَكُنَّا
இருக்கின்றோம்
naḥnu
نَحْنُ
நாமே
l-wārithīna
ٱلْوَٰرِثِينَ
வாரிசுகளாக
(இவர்களைப் போன்று) தன் வாழ்க்கைத் தரத்தால் கொழுத்துத் திமிர் பிடித்த எத்தனையோ ஊரார்களை நாம் அழித்திருக்கின்றோம். இதோ! (பாருங்கள்.) இவை யாவும் அவர்கள் வசித்திருந்த இடங்கள்தாம். (எனினும், அங்கே மூலை முடுக்குகளில் உள்ள) சொற்ப சிலரைத் தவிர நாம்தான் அதற்கு வாரிசுகளாக இருக்கிறோம். ([௨௮] ஸூரத்துல் கஸஸ்: ௫௮)
Tafseer
௫௯

وَمَا كَانَ رَبُّكَ مُهْلِكَ الْقُرٰى حَتّٰى يَبْعَثَ فِيْٓ اُمِّهَا رَسُوْلًا يَّتْلُوْا عَلَيْهِمْ اٰيٰتِنَاۚ وَمَا كُنَّا مُهْلِكِى الْقُرٰىٓ اِلَّا وَاَهْلُهَا ظٰلِمُوْنَ ٥٩

wamā kāna
وَمَا كَانَ
இல்லை
rabbuka
رَبُّكَ
உமது இறைவன்
muh'lika
مُهْلِكَ
அழிப்பவனாக
l-qurā
ٱلْقُرَىٰ
ஊர்களை
ḥattā yabʿatha
حَتَّىٰ يَبْعَثَ
அனுப்புகின்ற வரை
fī ummihā
فِىٓ أُمِّهَا
அதனுடைய தலைநகரில்
rasūlan
رَسُولًا
ஒரு தூதரை
yatlū
يَتْلُوا۟
அவர் ஓதுவார்
ʿalayhim
عَلَيْهِمْ
அவர்கள் முன்
āyātinā
ءَايَٰتِنَاۚ
நமது வசனங்களை
wamā kunnā
وَمَا كُنَّا
நாம் இல்லை
muh'likī
مُهْلِكِى
அழிப்பவர்களாக
l-qurā
ٱلْقُرَىٰٓ
ஊர்களை
illā
إِلَّا
தவிர
wa-ahluhā
وَأَهْلُهَا
அதன் வாசிகள் இருந்தே
ẓālimūna
ظَٰلِمُونَ
அநியாயக்காரர்களாக
(நபியே!) உங்களது இறைவன் (தன்னுடைய) தூதரை (மக்களின்) தலை நகரங்களுக்கு அனுப்பி, அவர்களுக்கு நம்முடைய வசனங்களை அவர் ஓதிக் காண்பிக்காத வரையில் எவ்வூராரையும் அழிப்பதில்லை. அன்றி, எந்த ஊராரையும் அவர்கள் அநியாயம் செய்து கொண்டிருக்கும் நிலைமையிலேயே தவிர நாம் அழிக்கவில்லை. ([௨௮] ஸூரத்துல் கஸஸ்: ௫௯)
Tafseer
௬௦

وَمَآ اُوْتِيْتُمْ مِّنْ شَيْءٍ فَمَتَاعُ الْحَيٰوةِ الدُّنْيَا وَزِيْنَتُهَا ۚوَمَا عِنْدَ اللّٰهِ خَيْرٌ وَّاَبْقٰىۗ اَفَلَا تَعْقِلُوْنَ ࣖ ٦٠

wamā ūtītum
وَمَآ أُوتِيتُم
நீங்கள் எது கொடுக்கப்பட்டீர்களோ
min shayin
مِّن شَىْءٍ
பொருளில்
famatāʿu
فَمَتَٰعُ
இன்பமும்
l-ḥayati l-dun'yā
ٱلْحَيَوٰةِ ٱلدُّنْيَا
உலக வாழ்க்கையின்
wazīnatuhā
وَزِينَتُهَاۚ
அதன் அலங்காரமும்
wamā ʿinda l-lahi
وَمَا عِندَ ٱللَّهِ
அல்லாஹ்விடம் உள்ளதுதான்
khayrun
خَيْرٌ
சிறந்ததும்
wa-abqā
وَأَبْقَىٰٓۚ
நிலையானதும்
afalā taʿqilūna
أَفَلَا تَعْقِلُونَ
நீங்கள் சிந்தித்து புரிய மாட்டீர்களா?
(நபியே! நீங்கள் கூறுங்கள்:) உங்களுக்குக் கொடுக்கப் பட்டிருப்பவைகள் எல்லாம் இவ்வுலக வாழ்க்கையிலுள்ள அற்ப சுகமும், அதனுடைய அலங்காரமும்தான். (எனினும்,) அல்லாஹ்விடத்தில் இருப்பவைகளோ மிக்க மேலானவையும் நிலையானவையும் ஆகும். இதனை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டாமா? ([௨௮] ஸூரத்துல் கஸஸ்: ௬௦)
Tafseer