Skip to content

ஸூரா ஸூரத்துல் கஸஸ் - Page: 5

Al-Qasas

(al-Q̈aṣaṣ)

௪௧

وَجَعَلْنٰهُمْ اَىِٕمَّةً يَّدْعُوْنَ اِلَى النَّارِۚ وَيَوْمَ الْقِيٰمَةِ لَا يُنْصَرُوْنَ ٤١

wajaʿalnāhum
وَجَعَلْنَٰهُمْ
அவர்களை ஆக்கினோம்
a-immatan
أَئِمَّةً
முன்னோடிகளாக
yadʿūna
يَدْعُونَ
அழைக்கின்றனர்
ilā l-nāri
إِلَى ٱلنَّارِۖ
நரகத்தின் பக்கம்
wayawma l-qiyāmati
وَيَوْمَ ٱلْقِيَٰمَةِ
மறுமை நாளில்
lā yunṣarūna
لَا يُنصَرُونَ
அவர்கள் உதவி செய்யப்பட மாட்டார்கள்
(அவர்கள் இவ்வுலகத்தில் இருந்தவரை மனிதர்களை) நரகத்திற்கு அழைக்கக்கூடிய தலைவர்களாகவே அவர்களை ஆக்கி வைத்தோம். மறுமை நாளிலோ அவர்களுக்கு எத்தகைய உதவியும் கிடைக்காது. ([௨௮] ஸூரத்துல் கஸஸ்: ௪௧)
Tafseer
௪௨

وَاَتْبَعْنٰهُمْ فِيْ هٰذِهِ الدُّنْيَا لَعْنَةً ۚوَيَوْمَ الْقِيٰمَةِ هُمْ مِّنَ الْمَقْبُوْحِيْنَ ࣖ ٤٢

wa-atbaʿnāhum
وَأَتْبَعْنَٰهُمْ
அவர்களுக்குத் தொடர வைத்தோம்
fī hādhihi l-dun'yā
فِى هَٰذِهِ ٱلدُّنْيَا
இவ்வுலகத்திலும்
laʿnatan
لَعْنَةًۖ
சாபத்தை
wayawma l-qiyāmati
وَيَوْمَ ٱلْقِيَٰمَةِ
மறுமையிலும்
hum
هُم
அவர்கள்
mina l-maqbūḥīna
مِّنَ ٱلْمَقْبُوحِينَ
அசிங்கப்படுத்தப்பட்டவர்களில் உள்ளவர்கள்
இவ்வுலகில் நம்முடைய சாபம் அவர்களைப் பின்பற்றும்படி செய்தோம். மறுமை நாளிலோ அவர்களுடைய நிலைமை மிக்க கேடானதாகவே இருக்கும். ([௨௮] ஸூரத்துல் கஸஸ்: ௪௨)
Tafseer
௪௩

وَلَقَدْ اٰتَيْنَا مُوْسَى الْكِتٰبَ مِنْۢ بَعْدِ مَآ اَهْلَكْنَا الْقُرُوْنَ الْاُوْلٰى بَصَاۤىِٕرَ لِلنَّاسِ وَهُدًى وَّرَحْمَةً لَّعَلَّهُمْ يَتَذَكَّرُوْنَ ٤٣

walaqad
وَلَقَدْ
திட்டவட்டமாக
ātaynā
ءَاتَيْنَا
நாம் தந்தோம்
mūsā
مُوسَى
மூஸாவிற்கு
l-kitāba
ٱلْكِتَٰبَ
வேதத்தை
min baʿdi
مِنۢ بَعْدِ
பின்னர்
mā ahlaknā
مَآ أَهْلَكْنَا
நாம் அழித்த
l-qurūna
ٱلْقُرُونَ
தலைமுறையினர்களை
l-ūlā
ٱلْأُولَىٰ
முந்திய(வர்கள்)
baṣāira
بَصَآئِرَ
ஒளியாகவும்
lilnnāsi
لِلنَّاسِ
மக்களுக்கு
wahudan
وَهُدًى
நேர்வழியாகவும்
waraḥmatan
وَرَحْمَةً
கருணையாகவும்
laʿallahum yatadhakkarūna
لَّعَلَّهُمْ يَتَذَكَّرُونَ
அவர்கள் நல்லுணர்வு பெறவேண்டும்
(அவர்களுக்கு) முன்னிருந்த வகுப்பார்களையும் நாம் அழித்துவிட்ட பின்னர் (அவர்களுடைய வேதங்களும் அழிந்து விட்டதனால்) நிச்சயமாக நாம் மூஸாவுக்கு ஒரு வேதத்தைக் கொடுத்தோம். அது மனிதர்களுக்கு நல்ல படிப்பினை தரக் கூடியதாகவும், நேரான வழியாகவும், அருளாகவும் இருந்தது. அவர்கள் (அதனைக் கொண்டு) நல்லுணர்ச்சி பெறும் பொருட்டே (கொடுத்தோம்). ([௨௮] ஸூரத்துல் கஸஸ்: ௪௩)
Tafseer
௪௪

وَمَا كُنْتَ بِجَانِبِ الْغَرْبِيِّ اِذْ قَضَيْنَآ اِلٰى مُوْسَى الْاَمْرَ وَمَا كُنْتَ مِنَ الشّٰهِدِيْنَ ۙ ٤٤

wamā kunta
وَمَا كُنتَ
நீர் இருக்கவில்லை
bijānibi
بِجَانِبِ
பக்கத்தில்
l-gharbiyi
ٱلْغَرْبِىِّ
மேற்கு
idh qaḍaynā
إِذْ قَضَيْنَآ
நாம் ஒப்படைத்த போது
ilā mūsā
إِلَىٰ مُوسَى
மூஸாவிடம்
l-amra
ٱلْأَمْرَ
சட்டங்களை
wamā kunta
وَمَا كُنتَ
நீர் இருக்கவில்லை
mina l-shāhidīna
مِنَ ٱلشَّٰهِدِينَ
இருந்தவர்களில்
(நபியே! தூர் ஸீனாய் என்னும் மலையில்) நாம் மூஸாவுக்குக் (கற்பலகையில் எழுதப்பட்ட) கட்டளைகளை விதித்தபோது நீங்கள் அதன் மேற்குத் திசையில் இருக்கவில்லை. அதைப் பார்த்துக் கொண்டிருந்தவர்களில் நீங்கள் ஒருவருமல்ல. ([௨௮] ஸூரத்துல் கஸஸ்: ௪௪)
Tafseer
௪௫

وَلٰكِنَّآ اَنْشَأْنَا قُرُوْنًا فَتَطَاوَلَ عَلَيْهِمُ الْعُمُرُۚ وَمَا كُنْتَ ثَاوِيًا فِيْٓ اَهْلِ مَدْيَنَ تَتْلُوْا عَلَيْهِمْ اٰيٰتِنَاۙ وَلٰكِنَّا كُنَّا مُرْسِلِيْنَ ٤٥

walākinnā
وَلَٰكِنَّآ
என்றாலும்
anshanā
أَنشَأْنَا
நாம்உருவாக்கினோம்
qurūnan
قُرُونًا
பல தலைமுறையினரை
fataṭāwala
فَتَطَاوَلَ
நீண்டு சென்றது
ʿalayhimu
عَلَيْهِمُ
அவர்களுக்கு
l-ʿumuru
ٱلْعُمُرُۚ
காலம்
wamā kunta
وَمَا كُنتَ
இன்னும் நீர் இல்லை
thāwiyan
ثَاوِيًا
தங்கியவராக
fī ahli madyana
فِىٓ أَهْلِ مَدْيَنَ
மத்யன் வாசிகளுடன்
tatlū
تَتْلُوا۟
நீர் ஓதியவராக
ʿalayhim
عَلَيْهِمْ
அவர்கள் மீது
āyātinā
ءَايَٰتِنَا
நமது வசனங்களை
walākinnā
وَلَٰكِنَّا
என்றாலும் நாம்தான்
kunnā
كُنَّا
இருந்தோம்
mur'silīna
مُرْسِلِينَ
தூதர்களை அனுப்பக்கூடியவர்களாக
எனினும், (அவர்களுக்குப் பின்னர்) எத்தனையோ வகுப்பினரை நாம் உற்பத்தி செய்தோம். அவர்கள் சென்றும் நீண்ட காலம் ஆகிவிட்டது. (அவ்வாறிருந்தும் மூஸாவைப் பற்றிய இவ்வளவு உண்மையான சரித்திரத்தை நீங்கள் கூறுவதெல்லாம் இறைவனால் உங்களுக்கு அறிவிக்கப்பட்டதால்தான் என்று இவர்கள் அறிந்துகொள்ள வேண்டாமா?) அன்றி, (நபியே!) மத்யன் வாசிகளிடமும் நீங்கள் தங்கியிருக்கவில்லை. (அவ்வாறிருந்தும் அவர்களைப் பற்றிய) நம்முடைய வசனங்களை நீங்கள் இவர்களுக்கு ஓதிக் காண்பிக்கின்றீர்கள். ஆகவே, நிச்சயமாக நாம் உங்களை நம் தூதர்களில் ஒருவராகவே அனுப்பி வைத்திருக்கின்றோம். (நம்முடைய வஹீ மூலம் கிடைத்த விஷயங்களையே நீங்கள் அவர்களுக்கு அறிவிக்கின்றீர்கள்.) ([௨௮] ஸூரத்துல் கஸஸ்: ௪௫)
Tafseer
௪௬

وَمَا كُنْتَ بِجَانِبِ الطُّوْرِ اِذْ نَادَيْنَا وَلٰكِنْ رَّحْمَةً مِّنْ رَّبِّكَ لِتُنْذِرَ قَوْمًا مَّآ اَتٰىهُمْ مِّنْ نَّذِيْرٍ مِّنْ قَبْلِكَ لَعَلَّهُمْ يَتَذَكَّرُوْنَ ٤٦

wamā kunta
وَمَا كُنتَ
நீர் இருக்கவில்லை
bijānibi
بِجَانِبِ
அருகில்
l-ṭūri
ٱلطُّورِ
மலைக்கு
idh nādaynā
إِذْ نَادَيْنَا
நாம் அழைத்தபோது
walākin
وَلَٰكِن
எனினும்
raḥmatan
رَّحْمَةً
அருளினால்
min rabbika
مِّن رَّبِّكَ
உமது இறைவனின்
litundhira
لِتُنذِرَ
ஏனெனில், நீர் எச்சரிக்க வேண்டும்
qawman
قَوْمًا
ஒரு மக்களை
mā atāhum
مَّآ أَتَىٰهُم
அவர்களிடம் வரவில்லை
min nadhīrin
مِّن نَّذِيرٍ
எச்சரிப்பாளர் எவரும்
min qablika
مِّن قَبْلِكَ
உமக்கு முன்னர்
laʿallahum yatadhakkarūna
لَعَلَّهُمْ يَتَذَكَّرُونَ
அவர்கள் நல்லுணர்வு பெறுவதற்காக
அன்றி, (தூர் ஸீனாய் என்னும் மலைக்கு மூஸாவை) நாம் அழைத்த பொழுது (அந்தத்) தூர் (என்னும்) மலையின் சார்பிலும் நீங்கள் இருக்கவில்லை. எனினும், உங்களுக்கு முன்னர் நம்முடைய யாதொரு தூதருமே வராத (இந்த) மக்களுக்கு நீங்கள் அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும் பொருட்டே உங்கள் இறைவனின் அருளால் (இவ்விஷயம் உங்களுக்கு அறிவிக்கப்பட்டது.) அவர்கள் (இதைக்கொண்டு) நல்லுணர்ச்சி பெறுவார்களாக! ([௨௮] ஸூரத்துல் கஸஸ்: ௪௬)
Tafseer
௪௭

وَلَوْلَآ اَنْ تُصِيْبَهُمْ مُّصِيْبَةٌ ۢبِمَا قَدَّمَتْ اَيْدِيْهِمْ فَيَقُوْلُوْا رَبَّنَا لَوْلَآ اَرْسَلْتَ اِلَيْنَا رَسُوْلًا فَنَتَّبِعَ اٰيٰتِكَ وَنَكُوْنَ مِنَ الْمُؤْمِنِيْنَ ٤٧

walawlā an tuṣībahum
وَلَوْلَآ أَن تُصِيبَهُم
அவர்களுக்கு ஏற்பட்டு
muṣībatun
مُّصِيبَةٌۢ
ஒரு சோதனை
bimā qaddamat
بِمَا قَدَّمَتْ
முற்படுத்தியதால்
aydīhim
أَيْدِيهِمْ
அவர்களின் கரங்கள்
fayaqūlū
فَيَقُولُوا۟
அவர்கள் கூறாதிருப்பதற்காக
rabbanā
رَبَّنَا
எங்கள் இறைவா!
lawlā arsalta
لَوْلَآ أَرْسَلْتَ
நீ அனுப்பி இருக்கக்கூடாதா?
ilaynā
إِلَيْنَا
எங்களிடம்
rasūlan
رَسُولًا
ஒரு தூதரை
fanattabiʿa
فَنَتَّبِعَ
நாங்கள் பின்பற்றி இருப்போமே!
āyātika
ءَايَٰتِكَ
உனது வசனங்களை
wanakūna
وَنَكُونَ
நாங்கள்ஆகியிருப்போமே
mina l-mu'minīna
مِنَ ٱلْمُؤْمِنِينَ
நம்பிக்கையாளர்களில்
(நபியே! உங்களுடைய மக்களாகிய) இவர்களின் கைகள் செய்த (தீய) செயலின் காரணமாக இவர்களை யாதொரு வேதனை வந்தடையும் சமயத்தில் "எங்கள் இறைவனே! எங்களிடம் உன்னுடைய ஒரு தூதரை அனுப்பி வைக்க வேண்டாமா? (அவ்வாறு நீ அனுப்பியிருந்தால்) உன்னுடைய வசனங்களை நாங்கள் பின்பற்றி உன்னை நம்பிக்கை கொண்டிருப்போமே" என்று கூறாதிருக்கும் பொருட்டே (உங்களை நம்முடைய தூதராக இவர்களிடம் அனுப்பி வைத்தோம்.) ([௨௮] ஸூரத்துல் கஸஸ்: ௪௭)
Tafseer
௪௮

فَلَمَّا جَاۤءَهُمُ الْحَقُّ مِنْ عِنْدِنَا قَالُوْا لَوْلَآ اُوْتِيَ مِثْلَ مَآ اُوْتِيَ مُوْسٰىۗ اَوَلَمْ يَكْفُرُوْا بِمَآ اُوْتِيَ مُوْسٰى مِنْ قَبْلُۚ قَالُوْا سِحْرٰنِ تَظَاهَرَاۗ وَقَالُوْٓا اِنَّا بِكُلٍّ كٰفِرُوْنَ ٤٨

falammā
فَلَمَّا
வந்த போது
jāahumu
جَآءَهُمُ
அவர்களுக்கு
l-ḥaqu
ٱلْحَقُّ
சத்திய தூதர்
min ʿindinā
مِنْ عِندِنَا
நம்மிடமிருந்து
qālū
قَالُوا۟
கூறினர்
lawlā ūtiya
لَوْلَآ أُوتِىَ
வழங்கப்பட்டிருக்க வேண்டாமா!
mith'la
مِثْلَ
போன்ற
mā ūtiya
مَآ أُوتِىَ
வழங்கப்பட்டதை
mūsā
مُوسَىٰٓۚ
மூஸாவிற்கு
awalam yakfurū
أَوَلَمْ يَكْفُرُوا۟
இவர்கள் மறுக்கவில்லையா?
bimā ūtiya
بِمَآ أُوتِىَ
வழங்கப்பட்டதை
mūsā
مُوسَىٰ
மூஸாவிற்கு
min qablu
مِن قَبْلُۖ
இதற்கு முன்னர்
qālū
قَالُوا۟
கூறினர்
siḥ'rāni
سِحْرَانِ
இரண்டு சூனியங்களாகும்
taẓāharā
تَظَٰهَرَا
தங்களுக்குள் உதவி செய்தனர்
waqālū
وَقَالُوٓا۟
அவர்கள் கூறினர்
innā
إِنَّا
நிச்சயமாக நாங்கள்
bikullin
بِكُلٍّ
அனைத்தையும்
kāfirūna
كَٰفِرُونَ
மறுப்பவர்கள்தான்
எனினும், இத்தகைய உண்மை (விஷயங்களையுடைய சத்திய வேதம்) நம்மிடமிருந்து இவர்களிடம் வந்த சமயத்தில் (இதனை நம்பிக்கை கொள்வதற்குப் பதிலாக இவர்கள் "மூஸாவுக்கு கொடுக்கப்பட்ட அற்புதங்களைப் போல் இவருக்கும் கொடுக்கப்பட வேண்டாமா?" என்று கூறுகின்றனர். (என்னே!) இதற்கு முன்னர் மூஸாவுக்குக் கொடுக்கப்பட்ட அற்புதங்களையும் இவர்(களின் மூதாதை)கள் நிராகரித்துவிட வில்லையா? "(மூஸாவும், ஹாரூனும்) ஒருவருக்கொருவர் உதவி செய்துகொள்ளும் சூனியக்காரர்கள் என்று இவர்கள் கூறியதுடன், நிச்சயமாக நாங்கள் இவ்விருவரையும் நிராகரித்து விட்டோம்" என்றும் கூறினார்கள். ([௨௮] ஸூரத்துல் கஸஸ்: ௪௮)
Tafseer
௪௯

قُلْ فَأْتُوْا بِكِتٰبٍ مِّنْ عِنْدِ اللّٰهِ هُوَ اَهْدٰى مِنْهُمَآ اَتَّبِعْهُ اِنْ كُنْتُمْ صٰدِقِيْنَ ٤٩

qul
قُلْ
கூறுவீராக
fatū bikitābin
فَأْتُوا۟ بِكِتَٰبٍ
ஒரு வேதத்தைக் கொண்டு வாருங்கள்
min ʿindi l-lahi
مِّنْ عِندِ ٱللَّهِ
அல்லாஹ்விடமிருந்து
huwa
هُوَ
அது
ahdā
أَهْدَىٰ
மிக்க நேர்வழி
min'humā
مِنْهُمَآ
அவ்விரண்டை விட
attabiʿ'hu
أَتَّبِعْهُ
நான் அதை பின்பற்றுகிறேன்
in kuntum
إِن كُنتُمْ
நீங்கள் இருந்தால்
ṣādiqīna
صَٰدِقِينَ
உண்மையாளர்களாக
ஆகவே, (நபியே! அவர்களை நோக்கி) "மெய்யாகவே நீங்கள் உண்மை சொல்பவர்களாக இருந்தால், அல்லாஹ் விடமிருந்து வந்த வேதங்களில் (மூஸாவுடைய வேதமும், திருக்குர்ஆனுமாகிய) இவ்விரண்டையும்விட நேரான வழியை அறிவிக்கக் கூடியதொரு வேதத்தை நீங்கள் கொண்டு வாருங்கள். நானும் அதனைப் பின்பற்றுகிறேன்" என்று நீங்கள் கூறுங்கள். ([௨௮] ஸூரத்துல் கஸஸ்: ௪௯)
Tafseer
௫௦

فَاِنْ لَّمْ يَسْتَجِيْبُوْا لَكَ فَاعْلَمْ اَنَّمَا يَتَّبِعُوْنَ اَهْوَاۤءَهُمْۗ وَمَنْ اَضَلُّ مِمَّنِ اتَّبَعَ هَوٰىهُ بِغَيْرِ هُدًى مِّنَ اللّٰهِ ۗاِنَّ اللّٰهَ لَا يَهْدِى الْقَوْمَ الظّٰلِمِيْنَ ࣖ ٥٠

fa-in lam yastajībū
فَإِن لَّمْ يَسْتَجِيبُوا۟
அவர்கள் பதிலளிக்கவில்லை என்றால்
laka
لَكَ
உமக்கு
fa-iʿ'lam
فَٱعْلَمْ
நீர் அறிவீராக!
annamā yattabiʿūna
أَنَّمَا يَتَّبِعُونَ
நிச்சயமாக அவர்கள் பின்பற்றுவதெல்லாம்
ahwāahum
أَهْوَآءَهُمْۚ
மன இச்சைகளைத்தான் தங்கள்
waman
وَمَنْ
யார்?
aḍallu
أَضَلُّ
பெரும் வழிகேடன்
mimmani ittabaʿa
مِمَّنِ ٱتَّبَعَ
பின்பற்றியவனை விட
hawāhu
هَوَىٰهُ
தனது மன இச்சையை
bighayri hudan
بِغَيْرِ هُدًى
நேர்வழி அன்றி
mina l-lahi
مِّنَ ٱللَّهِۚ
அல்லாஹ்வின்
inna l-laha
إِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
lā yahdī
لَا يَهْدِى
நேர்வழி செலுத்த மாட்டான்
l-qawma
ٱلْقَوْمَ
மக்களை
l-ẓālimīna
ٱلظَّٰلِمِينَ
அநியாயக்கார
உங்களுக்கு அவர்கள் பதில் சொல்லாவிடில், நிச்சயமாக அவர்கள் தங்கள் சரீர இச்சையையே பின்பற்றுகிறார்கள் என்று உறுதியாக நீங்கள் அறிந்துகொள்ளுங்கள். அல்லாஹ்வினுடைய நேரான வழியை விட்டுத் தன்னுடைய சரீர இச்சையைப் பின்பற்றுபவனை விட வழிகெட்டவன் எவனுமுண்டோ! நிச்சயமாக அல்லாஹ் (இத்தகைய) அநியாயக்கார மக்களை நேரான வழியில் செலுத்துவதில்லை. ([௨௮] ஸூரத்துல் கஸஸ்: ௫௦)
Tafseer