Skip to content

ஸூரா ஸூரத்துல் கஸஸ் - Page: 3

Al-Qasas

(al-Q̈aṣaṣ)

௨௧

فَخَرَجَ مِنْهَا خَاۤىِٕفًا يَّتَرَقَّبُ ۖقَالَ رَبِّ نَجِّنِيْ مِنَ الْقَوْمِ الظّٰلِمِيْنَ ࣖ ٢١

fakharaja
فَخَرَجَ
ஆக, அவர் வெளியேறினார்
min'hā
مِنْهَا
அதிலிருந்து
khāifan
خَآئِفًا
பயந்தவராக
yataraqqabu
يَتَرَقَّبُۖ
எதிர்பார்த்தவராக
qāla
قَالَ
அவர் கூறினார்
rabbi
رَبِّ
என் இறைவா!
najjinī
نَجِّنِى
என்னைப் பாதுகாத்துக்கொள்!
mina l-qawmi
مِنَ ٱلْقَوْمِ
மக்களிடமிருந்து
l-ẓālimīna
ٱلظَّٰلِمِينَ
அநியாயக்கார
ஆகவே, அவர் (தன்னை மக்கள் என்ன செய்யப் போகின்றனரோ என்று) கவலைப்பட்டுப் பயந்தவராக அவ்வூரை விட்டு வெளியேறி, "என் இறைவனே! இவ்வக்கிரமக்கார மக்களிடமிருந்து நீ என்னை பாதுகாத்துக் கொள்வாயாக!" என்று பிரார்த்தித்தார். ([௨௮] ஸூரத்துல் கஸஸ்: ௨௧)
Tafseer
௨௨

وَلَمَّا تَوَجَّهَ تِلْقَاۤءَ مَدْيَنَ قَالَ عَسٰى رَبِّيْٓ اَنْ يَّهْدِيَنِيْ سَوَاۤءَ السَّبِيْلِ ٢٢

walammā tawajjaha
وَلَمَّا تَوَجَّهَ
மேலும், அவர் முன்னோக்கிச் சென்றபோது
til'qāa
تِلْقَآءَ
பக்கம்
madyana
مَدْيَنَ
மத்யன் நகரத்தின்
qāla
قَالَ
கூறினார்
ʿasā rabbī
عَسَىٰ رَبِّىٓ
என் இறைவன்
an yahdiyanī
أَن يَهْدِيَنِى
எனக்கு வழி காட்டுவான்
sawāa l-sabīli
سَوَآءَ ٱلسَّبِيلِ
நேரான பாதையை
அவர் "மத்யன்" பக்கம் செல்லக் கருதிய சமயத்தில் (அதன் வழியை அறியாததனால்) "என் இறைவன் அதற்குரிய நேரான வழியை எனக்கு அறிவிக்கக்கூடும்" (என்று தமக்குள்ளாகவே கூறிக்கொண்டு சென்றார்.) ([௨௮] ஸூரத்துல் கஸஸ்: ௨௨)
Tafseer
௨௩

وَلَمَّا وَرَدَ مَاۤءَ مَدْيَنَ وَجَدَ عَلَيْهِ اُمَّةً مِّنَ النَّاسِ يَسْقُوْنَ ەۖ وَوَجَدَ مِنْ دُوْنِهِمُ امْرَاَتَيْنِ تَذُوْدٰنِۚ قَالَ مَا خَطْبُكُمَا ۗقَالَتَا لَا نَسْقِيْ حَتّٰى يُصْدِرَ الرِّعَاۤءُ وَاَبُوْنَا شَيْخٌ كَبِيْرٌ ٢٣

walammā warada
وَلَمَّا وَرَدَ
அவர் வந்தபோது
māa
مَآءَ
நீர்நிலைக்கு
madyana
مَدْيَنَ
மத்யனுடைய
wajada
وَجَدَ
கண்டார்
ʿalayhi
عَلَيْهِ
அதனருகில்
ummatan
أُمَّةً
ஒரு கூட்டம்
mina l-nāsi
مِّنَ ٱلنَّاسِ
மக்களில்
yasqūna
يَسْقُونَ
அவர்கள் நீர் புகட்டுகின்றனர்
wawajada
وَوَجَدَ
கண்டார்
min dūnihimu
مِن دُونِهِمُ
அவர்கள் அன்றி
im'ra-atayni
ٱمْرَأَتَيْنِ
இரண்டு பெண்களையும்
tadhūdāni
تَذُودَانِۖ
தடுத்துக் கொண்டிருந்தனர்
qāla
قَالَ
அவர் கேட்டார்
mā khaṭbukumā
مَا خَطْبُكُمَاۖ
உங்கள் இருவரின் பிரச்சனை என்ன?
qālatā
قَالَتَا
அவ்விருவரும்கூறினர்
lā nasqī
لَا نَسْقِى
நாங்கள் நீர் புகட்ட மாட்டோம்
ḥattā
حَتَّىٰ
வரை
yuṣ'dira
يُصْدِرَ
வெளியேற்றாத
l-riʿāu
ٱلرِّعَآءُۖ
மேய்ப்பவர்கள்
wa-abūnā
وَأَبُونَا
எங்கள் தந்தையோ
shaykhun
شَيْخٌ
வயதான
kabīrun
كَبِيرٌ
பெரியவர்
(அவ்வாறு சென்ற அவர்) மத்யன் நகரத்தி(ன் வெளியி) லிருந்த ஒரு கிணற்றின் சமீபமாக வந்தபொழுது ஒரு கூட்டத்தினர் (தங்கள் ஆடு, மாடு, ஆகிய கால்நடைகளுக்குத்) தண்ணீர் புகட்டிக் கொண்டிருப்பதையும், அதற்கருகில் இரு பெண்கள் (தங்கள் ஆட்டு மந்தையை) வளைத்து(த் தடுத்து நிறுத்தி)க் கொண்டிருப்பதையும் கண்டு (அப்பெண்களை நோக்கி) "உங்கள் விஷயமென்ன? (எதற்காக நீங்கள் தேங்கி நிற்கிறீர்கள்?)" என்று கேட்டார். அதற்கு அவ்விரு பெண்களும் "இம்மேய்ப்பர்கள் (தங்கள் கால்நடைகளுக்குத் தண்ணீர் புகட்டிக்கொண்டு இங்கிருந்து) விலகும் வரையில் நாங்கள் (எங்கள் ஆடுகளுக்குத்) தண்ணீர் புகட்ட முடியாது. எங்கள் தந்தையோ வயதடைந்த கிழவர். (அவர் இங்கு வர முடியாததால் நாங்களே இவைகளை ஓட்டி வந்திருக்கிறோம்)" என்றார்கள். ([௨௮] ஸூரத்துல் கஸஸ்: ௨௩)
Tafseer
௨௪

فَسَقٰى لَهُمَا ثُمَّ تَوَلّٰىٓ اِلَى الظِّلِّ فَقَالَ رَبِّ اِنِّيْ لِمَآ اَنْزَلْتَ اِلَيَّ مِنْ خَيْرٍ فَقِيْرٌ ٢٤

fasaqā
فَسَقَىٰ
ஆகவே, அவர் நீர் புகட்டினார்
lahumā
لَهُمَا
அவ்விருவருக்காக
thumma
ثُمَّ
பிறகு
tawallā
تَوَلَّىٰٓ
திரும்பிச் சென்றார்
ilā
إِلَى
பக்கம்
l-ẓili
ٱلظِّلِّ
நிழலின்
faqāla
فَقَالَ
அவர் கூறினார்
rabbi
رَبِّ
என் இறைவா!
innī
إِنِّى
நிச்சயமாக நான்
limā anzalta
لِمَآ أَنزَلْتَ
நீ எதன் பக்கம் இறக்கினாய்
ilayya
إِلَىَّ
எனக்கு
min khayrin
مِنْ خَيْرٍ
நன்மையின்
faqīrun
فَقِيرٌ
தேவை உள்ளவன்
(இதைச் செவியுற்ற மூஸா) அவ்விரு பெண்களுடைய கால்நடைகளுக்குத் தண்ணீர் (இறைத்துப்) புகட்டிவிட்டு(ச் சிறிது) விலகி ஒரு (மரத்தின்) நிழலில் அமர்ந்துகொண்டு "என் இறைவனே! எதை நீ எனக்குத் தந்தபோதிலும் நிச்சயமாக நான் அதனை விரும்பக்கூடியவனாகவே இருக்கிறேன்" என்று பிரார்த்தித்தார். ([௨௮] ஸூரத்துல் கஸஸ்: ௨௪)
Tafseer
௨௫

فَجَاۤءَتْهُ اِحْدٰىهُمَا تَمْشِيْ عَلَى اسْتِحْيَاۤءٍ ۖقَالَتْ اِنَّ اَبِيْ يَدْعُوْكَ لِيَجْزِيَكَ اَجْرَ مَا سَقَيْتَ لَنَاۗ فَلَمَّا جَاۤءَهٗ وَقَصَّ عَلَيْهِ الْقَصَصَۙ قَالَ لَا تَخَفْۗ نَجَوْتَ مِنَ الْقَوْمِ الظّٰلِمِيْنَ ٢٥

fajāathu
فَجَآءَتْهُ
அவரிடம் வந்தாள்
iḥ'dāhumā
إِحْدَىٰهُمَا
அவ்விருவரில் ஒருத்தி
tamshī
تَمْشِى
நடந்தவளாக
ʿalā is'tiḥ'yāin
عَلَى ٱسْتِحْيَآءٍ
வெட்கத்துடன்
qālat
قَالَتْ
அவள் கூறினாள்
inna
إِنَّ
நிச்சயமாக
abī
أَبِى
என் தந்தை
yadʿūka
يَدْعُوكَ
உம்மை அழைக்கிறார்
liyajziyaka
لِيَجْزِيَكَ
உமக்கு தருவதற்காக
ajra
أَجْرَ
கூலியை
mā saqayta
مَا سَقَيْتَ
நீநீர்புகட்டியதற்குரிய
lanā
لَنَاۚ
எங்களுக்காக
falammā jāahu
فَلَمَّا جَآءَهُۥ
போது/அவரிடம்/வந்தார்
waqaṣṣa
وَقَصَّ
இன்னும் விவரித்தார்
ʿalayhi
عَلَيْهِ
அவரிடம்
l-qaṣaṣa
ٱلْقَصَصَ
வரலாற்றை
qāla
قَالَ
அவர் கூறினார்
lā takhaf
لَا تَخَفْۖ
பயப்படாதே!
najawta
نَجَوْتَ
நீ தப்பித்து விட்டாய்
mina l-qawmi
مِنَ ٱلْقَوْمِ
மக்களிடமிருந்து
l-ẓālimīna
ٱلظَّٰلِمِينَ
அநியாயக்காரர்(கள்)
அச்சமயம் (அவ்விரு பெண்களில்) ஒருத்தி மிக்க நாணத்துடன் இவர் முன் வந்து "நீங்கள் எங்க(ள் கால்நடைக)ளுக்குத் தண்ணீர் புகட்டியதற்குரிய கூலியை உங்களுக்குக் கொடுக்கும் பொருட்டு மெய்யாகவே என் தந்தை உங்களை அழைக்கிறார்" என்று கூறி அழைத்துச் சென்றாள். மூஸா அவரிடம் சென்று தன் சரித்திரத்தைக் கூறவே அவர் (இனி) "நீங்கள் பயப்படவேண்டாம். அநியாயக்கார மக்களைவிட்டு நீங்கள் தப்பித்துக் கொண்டீர்கள்" என்று கூறினார். ([௨௮] ஸூரத்துல் கஸஸ்: ௨௫)
Tafseer
௨௬

قَالَتْ اِحْدٰىهُمَا يٰٓاَبَتِ اسْتَأْجِرْهُ ۖاِنَّ خَيْرَ مَنِ اسْتَأْجَرْتَ الْقَوِيُّ الْاَمِيْنُ ٢٦

qālat
قَالَتْ
கூறினாள்
iḥ'dāhumā
إِحْدَىٰهُمَا
அவ்விருவரில் ஒருத்தி
yāabati
يَٰٓأَبَتِ
என் தந்தையே
is'tajir'hu
ٱسْتَـْٔجِرْهُۖ
அவரை பணியில் அமர்த்துவீராக!
inna
إِنَّ
நிச்சயமாக
khayra
خَيْرَ
சிறந்தவர்
mani is'tajarta
مَنِ ٱسْتَـْٔجَرْتَ
எவர்கள்/பணியில் அமர்த்தினீர்
l-qawiyu
ٱلْقَوِىُّ
பலசாலி
l-amīnu
ٱلْأَمِينُ
நம்பிக்கையளரான
(அத்தருணத்தில், அவ்விரு பெண்களில் ஒருத்தி தன் தந்தையை நோக்கி) "என் தந்தையே! நீங்கள் இவரைக் கூலிக்கு அமர்த்திக் கொள்ளுங்கள். நீங்கள் கூலிக்கு அமர்த்தியவர் களிலேயே மிகச் சிறந்தவர் நம்பிக்கைக்குரிய (இந்த) பலசாலியே ஆவார்" என்று கூறினாள். ([௨௮] ஸூரத்துல் கஸஸ்: ௨௬)
Tafseer
௨௭

قَالَ اِنِّيْٓ اُرِيْدُ اَنْ اُنْكِحَكَ اِحْدَى ابْنَتَيَّ هٰتَيْنِ عَلٰٓى اَنْ تَأْجُرَنِيْ ثَمٰنِيَ حِجَجٍۚ فَاِنْ اَتْمَمْتَ عَشْرًا فَمِنْ عِنْدِكَۚ وَمَآ اُرِيْدُ اَنْ اَشُقَّ عَلَيْكَۗ سَتَجِدُنِيْٓ اِنْ شَاۤءَ اللّٰهُ مِنَ الصّٰلِحِيْنَ ٢٧

qāla
قَالَ
அவர் கூறினார்
innī
إِنِّىٓ
நிச்சயமாக நான்
urīdu
أُرِيدُ
நான் விரும்புகிறேன்
an unkiḥaka
أَنْ أُنكِحَكَ
உனக்கு நான் மணமுடித்துத்தர
iḥ'dā
إِحْدَى
ஒருத்தியை
ib'natayya
ٱبْنَتَىَّ
என் இரு பெண் பிள்ளைகளில்
hātayni
هَٰتَيْنِ
இந்த இரண்டு
ʿalā
عَلَىٰٓ
மீது
an tajuranī
أَن تَأْجُرَنِى
எனக்கு கூலியாக (-மஹராக)த் தரவேண்டும்
thamāniya ḥijajin
ثَمَٰنِىَ حِجَجٍۖ
எட்டு ஆண்டுகள்
fa-in atmamta
فَإِنْ أَتْمَمْتَ
நீ பூர்த்திசெய்தால்
ʿashran
عَشْرًا
பத்து ஆண்டுகளை
famin ʿindika
فَمِنْ عِندِكَۖ
உன் புறத்திலிருந்து
wamā urīdu
وَمَآ أُرِيدُ
நான் விரும்பவில்லை
an ashuqqa
أَنْ أَشُقَّ
நான் சிரமம் ஏற்படுத்த
ʿalayka
عَلَيْكَۚ
உம்மீது
satajidunī
سَتَجِدُنِىٓ
நீ காண்பாய்/என்னை
in shāa
إِن شَآءَ
நாடினால்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
mina l-ṣāliḥīna
مِنَ ٱلصَّٰلِحِينَ
என்னை நல்லோரில்
அதற்கு அவர் (மூஸாவிடம்) கூறினார்: "நீங்கள் எனக்கு எட்டு வருடங்கள் வேலை செய்ய வேண்டுமென்ற நிபந்தனையின் மீது இவ்விரு பெண்களில் ஒருத்தியை நான் உங்களுக்கு திருமணம் செய்து கொடுக்க விரும்புகிறேன். நீங்கள் அதைப் பத்து வருடங்களாக முழுமை செய்தால், அது நீங்கள் எனக்கு செய்யும் நன்றிதான். நான் உங்களுக்கு (அதிகமான) சிரமத்தைக் கொடுக்க விரும்பவில்லை. அல்லாஹ் நாடினால், நீங்கள் என்னை உங்களுக்கு உபகாரியாகவே காண்பீர்கள்" (என்றார்). ([௨௮] ஸூரத்துல் கஸஸ்: ௨௭)
Tafseer
௨௮

قَالَ ذٰلِكَ بَيْنِيْ وَبَيْنَكَۗ اَيَّمَا الْاَجَلَيْنِ قَضَيْتُ فَلَا عُدْوَانَ عَلَيَّۗ وَاللّٰهُ عَلٰى مَا نَقُوْلُ وَكِيْلٌ ࣖ ٢٨

qāla
قَالَ
அவர் கூறினார்
dhālika
ذَٰلِكَ
இது
baynī
بَيْنِى
எனக்கு மத்தியிலும்
wabaynaka
وَبَيْنَكَۖ
உமக்கு மத்தியிலும்
ayyamā
أَيَّمَا
எதை
l-ajalayni
ٱلْأَجَلَيْنِ
இரண்டு தவணையில்
qaḍaytu
قَضَيْتُ
நான் நிறைவேற்றினாலும்
falā ʿud'wāna
فَلَا عُدْوَٰنَ
வரம்பு மீறுதல் கூடாது
ʿalayya
عَلَىَّۖ
என் மீது
wal-lahu
وَٱللَّهُ
அல்லாஹ்
ʿalā mā naqūlu
عَلَىٰ مَا نَقُولُ
நாம் கூறுவதற்கு
wakīlun
وَكِيلٌ
பொறுப்பாளன்
அதற்கு மூஸா "உங்களுக்கும் நமக்குமிடையே இதுவே (உடன் படிக்கையாகும்). இவ்விரு நிபந்தனைகளில் எதனையும் நான் நிறைவேற்றலாம். (இன்னதைத்தான் நிறைவேற்ற வேண்டுமென்று) என்மீது கட்டாயமில்லை. நாம் பேசிக்கொண்ட இவ்வுடன் படிக்கைக்கு அல்லாஹ்வே பொறுப்பாளன்" என்று கூறினார். ([௨௮] ஸூரத்துல் கஸஸ்: ௨௮)
Tafseer
௨௯

۞ فَلَمَّا قَضٰى مُوْسَى الْاَجَلَ وَسَارَ بِاَهْلِهٖٓ اٰنَسَ مِنْ جَانِبِ الطُّوْرِ نَارًاۗ قَالَ لِاَهْلِهِ امْكُثُوْٓا اِنِّيْٓ اٰنَسْتُ نَارًا لَّعَلِّيْٓ اٰتِيْكُمْ مِّنْهَا بِخَبَرٍ اَوْ جَذْوَةٍ مِّنَ النَّارِ لَعَلَّكُمْ تَصْطَلُوْنَ ٢٩

falammā
فَلَمَّا
போது
qaḍā
قَضَىٰ
முடித்தார்
mūsā
مُوسَى
மூசா
l-ajala
ٱلْأَجَلَ
தவணையை
wasāra
وَسَارَ
இன்னும் சென்றார்
bi-ahlihi
بِأَهْلِهِۦٓ
தனது குடும்பத்தினரோடு
ānasa
ءَانَسَ
பார்த்தார்
min jānibi
مِن جَانِبِ
அருகில்
l-ṭūri
ٱلطُّورِ
மலையின்
nāran
نَارًا
நெருப்பை
qāla
قَالَ
கூறினார்
li-ahlihi
لِأَهْلِهِ
தனது குடும்பத்தினரிடம்
um'kuthū
ٱمْكُثُوٓا۟
நீங்கள் தாமதியுங்கள்
innī
إِنِّىٓ
நிச்சயமாக நான்
ānastu
ءَانَسْتُ
நான் பார்த்தேன்
nāran
نَارًا
ஒரு நெருப்பை
laʿallī ātīkum
لَّعَلِّىٓ ءَاتِيكُم
உங்களிடம் (கொண்டு) வருகிறேன்
min'hā
مِّنْهَا
அதிலிருந்து
bikhabarin
بِخَبَرٍ
ஒரு செய்தியை
aw
أَوْ
அல்லது
jadhwatin
جَذْوَةٍ
கங்கை
mina l-nāri
مِّنَ ٱلنَّارِ
நெருப்பின்
laʿallakum taṣṭalūna
لَعَلَّكُمْ تَصْطَلُونَ
நீங்கள் குளிர்காய்வதற்காக
மூஸா தன்னுடைய தவணையை முழுமை செய்து (அவருடைய புதல்வியை திருமணம் செய்துகொண்டு) தன்னுடைய குடும்பத்தாரை அழைத்துக் கொண்டு சென்றபொழுது (ஓர் இரவு வழி தெரியாது திகைத்துக் கொண்டிருந்த சமயத்தில்) தூர் ("ஸீனாய்" என்னும்) மலையின் பக்கத்தில் ஒரு நெருப்பைக் கண்டு, தன் குடும்பத்தினரை நோக்கி "நீங்கள் (சிறிது) தாமதித்து இருங்கள். நான் ஒரு நெருப்பைக் காண்கிறேன். நான் (அங்குச் சென்று நாம் செல்லவேண்டிய) பாதையைப் பற்றி யாதொரு தகவலை உங்களுக்குக் கொண்டு வரக்கூடும். அல்லது நீங்கள் குளிர் காய்வதற்கேனும் ஒரு எரி கொள்ளியைக் கொண்டு வருகிறேன்" என்று கூறினார். ([௨௮] ஸூரத்துல் கஸஸ்: ௨௯)
Tafseer
௩௦

فَلَمَّآ اَتٰىهَا نُوْدِيَ مِنْ شَاطِئِ الْوَادِ الْاَيْمَنِ فِى الْبُقْعَةِ الْمُبٰرَكَةِ مِنَ الشَّجَرَةِ اَنْ يّٰمُوْسٰٓى اِنِّيْٓ اَنَا اللّٰهُ رَبُّ الْعٰلَمِيْنَ ۙ ٣٠

falammā atāhā
فَلَمَّآ أَتَىٰهَا
அவர் அதனிடம் வந்தபோது
nūdiya
نُودِىَ
சப்தமிட்டு அழைக்கப்பட்டார்
min shāṭi-i
مِن شَٰطِئِ
பக்கத்திலிருந்து
l-wādi
ٱلْوَادِ
பள்ளத்தாக்கின்
l-aymani
ٱلْأَيْمَنِ
வலது
fī l-buq'ʿati
فِى ٱلْبُقْعَةِ
இடத்தில்
l-mubārakati
ٱلْمُبَٰرَكَةِ
புனிதமான
mina l-shajarati
مِنَ ٱلشَّجَرَةِ
மரத்திலிருந்து
an yāmūsā
أَن يَٰمُوسَىٰٓ
மூசாவே!
innī anā
إِنِّىٓ أَنَا
நிச்சயமாக நான்தான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
rabbu
رَبُّ
இறைவனாகிய
l-ʿālamīna
ٱلْعَٰلَمِينَ
அகிலங்களின்
அவர் அதனிடம் வந்தபொழுது, மிக்க பாக்கியம் பெற்ற அந்த மைதானத்தின் ஓடையின் வலது பக்கத்திலுள்ள ஒரு மரத்தில் இருந்து "மூஸாவே! நிச்சயமாக உலகத்தாரை படைத்து வளர்த்து காக்கும் அல்லாஹ் நான்தான்" என்ற சப்தத்தைக் கேட்டார். ([௨௮] ஸூரத்துல் கஸஸ்: ௩௦)
Tafseer