Skip to content

ஸூரா ஸூரத்துல் கஸஸ் - Page: 2

Al-Qasas

(al-Q̈aṣaṣ)

௧௧

وَقَالَتْ لِاُخْتِهٖ قُصِّيْهِۗ فَبَصُرَتْ بِهٖ عَنْ جُنُبٍ وَّهُمْ لَا يَشْعُرُوْنَ ۙ ١١

waqālat
وَقَالَتْ
அவள் கூறினாள்
li-ukh'tihi
لِأُخْتِهِۦ
அவருடைய சகோதரிக்கு
quṣṣīhi
قُصِّيهِۖ
நீ அவரைப் பின்தொடர்ந்து செல்
fabaṣurat
فَبَصُرَتْ
ஆக, அவள் பார்த்துவிட்டாள்
bihi
بِهِۦ
அவரை
ʿan junubin
عَن جُنُبٍ
தூரத்திலிருந்து
wahum
وَهُمْ
எனினும், அவர்கள்
lā yashʿurūna
لَا يَشْعُرُونَ
உணரவில்லை
(அக்குழந்தையைப் பேழையில் வைத்து ஆற்றில் விட்டதன் பின்னர்) அவள், அக்குழந்தையின் சகோதரியை நோக்கி "(ஆற்றில் மிதந்து செல்லும்) அதனைப் பின்தொடர்ந்து நீயும் செல்" என்று கூறினாள். அவளும் அ(தனைப் பின்தொடர்ந்து சென்று அதனை எடுத்த)வர்களுக்குத் தெரியாத விதத்தில் அதை(ப் பற்றி என்ன நடக்கிறதென்று) தூரத்திலிருந்தே கவனித்து வந்தாள். ([௨௮] ஸூரத்துல் கஸஸ்: ௧௧)
Tafseer
௧௨

۞ وَحَرَّمْنَا عَلَيْهِ الْمَرَاضِعَ مِنْ قَبْلُ فَقَالَتْ هَلْ اَدُلُّكُمْ عَلٰٓى اَهْلِ بَيْتٍ يَّكْفُلُوْنَهٗ لَكُمْ وَهُمْ لَهٗ نَاصِحُوْنَ ١٢

waḥarramnā
وَحَرَّمْنَا
நாம் தடுத்துவிட்டோம்
ʿalayhi
عَلَيْهِ
அவர் மீது
l-marāḍiʿa
ٱلْمَرَاضِعَ
பால்கொடுப்பவர்களை
min qablu
مِن قَبْلُ
முன்னர்
faqālat
فَقَالَتْ
கூறினாள்
hal adullukum
هَلْ أَدُلُّكُمْ
நான் உங்களுக்கு அறிவிக்கலாமா?
ʿalā ahli baytin
عَلَىٰٓ أَهْلِ بَيْتٍ
ஒரு வீட்டாரை
yakfulūnahu
يَكْفُلُونَهُۥ
அவர்கள் அவரை பொறுப்பேற்பார்கள்
lakum
لَكُمْ
உங்களுக்காக
wahum
وَهُمْ
அவர்கள்
lahu
لَهُۥ
அவருக்கு
nāṣiḥūna
نَٰصِحُونَ
நன்மையை நாடுபவர்கள்
(ஆற்றில் மிதந்து சென்ற குழந்தையை எடுத்துக் கொண்டவர்கள் அதற்குப் பாலூட்ட பல செவிலித் தாய்களை அழைத்து வந்தனர். எனினும்,) இதற்கு முன்னதாகவே அக்குழந்தை (எவளுடைய) பாலையும் அருந்தாது தடுத்துவிட்டோம். (ஆகவே, இதைப் பற்றி அவர்கள் திகைத்துக் கொண்டிருந்த சமயத்தில் மூஸாவின் சகோதரி அவர்கள் முன் வந்து) "உங்களுக்காக இக்குழந்தைக்கு செவிலித்தாயாக இருந்து அதன் நன்மையைக் கவனிக்கும் பொறுப்பேற்றுக் கொள்ளக்கூடிய ஒரு வீட்டுடையாரை நான் உங்களுக்கு அறிவிக்கவா?" என்று கூறினாள். ([௨௮] ஸூரத்துல் கஸஸ்: ௧௨)
Tafseer
௧௩

فَرَدَدْنٰهُ اِلٰٓى اُمِّهٖ كَيْ تَقَرَّ عَيْنُهَا وَلَا تَحْزَنَ وَلِتَعْلَمَ اَنَّ وَعْدَ اللّٰهِ حَقٌّ وَّلٰكِنَّ اَكْثَرَهُمْ لَا يَعْلَمُوْنَ ࣖ ١٣

faradadnāhu
فَرَدَدْنَٰهُ
அவரை நாம் திரும்பக் கொண்டுவந்தோம்
ilā ummihi
إِلَىٰٓ أُمِّهِۦ
அவருடைய தாயாரிடம்
kay taqarra
كَىْ تَقَرَّ
குளிர்வதற்காகவும்
ʿaynuhā
عَيْنُهَا
அவளது கண்
walā taḥzana
وَلَا تَحْزَنَ
இன்னும் அவள் கவலைப்படாமல் இருப்பதற்காகவும்
walitaʿlama
وَلِتَعْلَمَ
அவள் அறிவதற்காகவும்
anna waʿda
أَنَّ وَعْدَ
நிச்சயமாக/வாக்கு
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
ḥaqqun
حَقٌّ
உண்மை
walākinna
وَلَٰكِنَّ
என்றாலும்
aktharahum
أَكْثَرَهُمْ
அதிகமானவர்கள் அவர்களில்
lā yaʿlamūna
لَا يَعْلَمُونَ
அறியமாட்டார்கள்
(அவர்கள் அனுமதிக்கவே, அவள் மூஸாவுடைய தாயை அழைத்தும் வந்து விட்டாள்.) இவ்வாறு நாம் அவரை அவருடைய தாயிடமே சேர்த்துத் தாயின் கண் குளிர்ந்திருக்கவும் அவள் கவலைப்படாதிருக்கவும் செய்து, அல்லாஹ்வுடைய வாக்குறுதி உண்மையானதுதான் என்று நிச்சயமாக அவள் அறிந்து கொள்ளும் படியும் செய்தோம். எனினும், அவர்களில் பெரும்பாலானவர்கள் (இதனை) அறியமாட்டார்கள். ([௨௮] ஸூரத்துல் கஸஸ்: ௧௩)
Tafseer
௧௪

وَلَمَّا بَلَغَ اَشُدَّهٗ وَاسْتَوٰىٓ اٰتَيْنٰهُ حُكْمًا وَّعِلْمًاۗ وَكَذٰلِكَ نَجْزِى الْمُحْسِنِيْنَ ١٤

walammā
وَلَمَّا
போது
balagha
بَلَغَ
அடைந்தார்
ashuddahu
أَشُدَّهُۥ
அவர் தனது வலிமையை
wa-is'tawā
وَٱسْتَوَىٰٓ
அவர் முழுமை பெற்றார்
ātaynāhu
ءَاتَيْنَٰهُ
நாம் அவருக்கு தந்தோம்
ḥuk'man
حُكْمًا
ஞானத்தையும்
waʿil'man
وَعِلْمًاۚ
அறிவையும்
wakadhālika
وَكَذَٰلِكَ
இவ்வாறே
najzī
نَجْزِى
நாம்கூலிதருகிறோம்
l-muḥ'sinīna
ٱلْمُحْسِنِينَ
நன்மை செய்பவர்களுக்கு
அவர் வாலிபத்தையடைந்து அவருடைய அறிவு பூரணப் பக்குவம் அடையவே, அவருக்கு ஞானக் கல்வியையும், வேதத்தையும் நாம் அளித்தோம். இவ்வாறே நன்மை செய்பவர்களுக்கு நாம் கூலி தருகிறோம். ([௨௮] ஸூரத்துல் கஸஸ்: ௧௪)
Tafseer
௧௫

وَدَخَلَ الْمَدِيْنَةَ عَلٰى حِيْنِ غَفْلَةٍ مِّنْ اَهْلِهَا فَوَجَدَ فِيْهَا رَجُلَيْنِ يَقْتَتِلٰنِۖ هٰذَا مِنْ شِيْعَتِهٖ وَهٰذَا مِنْ عَدُوِّهٖۚ فَاسْتَغَاثَهُ الَّذِيْ مِنْ شِيْعَتِهٖ عَلَى الَّذِيْ مِنْ عَدُوِّهٖ ۙفَوَكَزَهٗ مُوْسٰى فَقَضٰى عَلَيْهِۖ قَالَ هٰذَا مِنْ عَمَلِ الشَّيْطٰنِۗ اِنَّهٗ عَدُوٌّ مُّضِلٌّ مُّبِيْنٌ ١٥

wadakhala
وَدَخَلَ
இன்னும் நுழைந்தார்
l-madīnata
ٱلْمَدِينَةَ
நகரத்தில்
ʿalā ḥīni
عَلَىٰ حِينِ
நேரத்தில்
ghaflatin
غَفْلَةٍ
கவனமற்று இருந்த
min ahlihā
مِّنْ أَهْلِهَا
அதன் வாசிகள்
fawajada
فَوَجَدَ
கண்டார்
fīhā
فِيهَا
அதில்
rajulayni
رَجُلَيْنِ
இருவரை
yaqtatilāni
يَقْتَتِلَانِ
அவ்விருவரும் சண்டை செய்தனர்
hādhā
هَٰذَا
இவர்
min shīʿatihi
مِن شِيعَتِهِۦ
அவருடைய பிரிவை சேர்ந்தவர்
wahādhā
وَهَٰذَا
இன்னும் இவர்
min ʿaduwwihi
مِنْ عَدُوِّهِۦۖ
அவருடைய எதிரிகளில் உள்ளவர்
fa-is'taghāthahu
فَٱسْتَغَٰثَهُ
அவரிடம் உதவி கேட்டான்
alladhī min shīʿatihi
ٱلَّذِى مِن شِيعَتِهِۦ
இவருடைய பிரிவைச் சேர்ந்தவன்
ʿalā alladhī min ʿaduwwihi
عَلَى ٱلَّذِى مِنْ عَدُوِّهِۦ
தனது எதிரிகளில் உள்ளவனுக்கு எதிராக
fawakazahu mūsā
فَوَكَزَهُۥ مُوسَىٰ
மூஸா அவனை குத்து விட்டார்
faqaḍā
فَقَضَىٰ
கதையை முடித்து விட்டார்
ʿalayhi
عَلَيْهِۖ
அவனுடைய
qāla hādhā
قَالَ هَٰذَا
கூறினார்/இது
min ʿamali
مِنْ عَمَلِ
செயலில் உள்ளது
l-shayṭāni
ٱلشَّيْطَٰنِۖ
ஷைத்தானின்
innahu
إِنَّهُۥ
நிச்சயமாக அவன்
ʿaduwwun
عَدُوٌّ
எதிரி ஆவான்
muḍillun
مُّضِلٌّ
வழி கெடுக்கின்றவன்
mubīnun
مُّبِينٌ
தெளிவான
(மூஸா ஒரு நாளன்று) மக்கள் அயர்ந்து (பராமுகமாக) இருக்கும் சமயத்தில் அவ்வூரில் சென்றபொழுது இரு வாலிபர்கள் சண்டையிட்டுக் கொண்டிருப்பதை அவர் கண்டார். ஒருவன் (இஸ்ரவேலரில் உள்ள) இவர் இனத்தைச் சேர்ந்தவன்; மற்றொருவன் (கிப்திகளாகிய) இவருடைய எதிரிகளில் உள்ளவன். அவனுக்கு எதிராக உதவி செய்யுமாறு இவர் இனத்தைச் சேர்ந்தவன் இவரிடத்தில் கோரிக் கொண்டான். (அதற்கிணங்கி) மூஸா அவனை ஒரு குத்துக் குத்தி அவன் காரியத்தை முடித்து விட்டார். (அதனால் அவன் இறந்து விட்டான். இதை அறிந்த மூஸா) "இது ஷைத்தானுடைய வேலை. நிச்சயமாக அவன் வழி கெடுக்கக்கூடிய பகிரங்கமான எதிரி" எனக் கூறினார். ([௨௮] ஸூரத்துல் கஸஸ்: ௧௫)
Tafseer
௧௬

قَالَ رَبِّ اِنِّيْ ظَلَمْتُ نَفْسِيْ فَاغْفِرْ لِيْ فَغَفَرَ لَهٗ ۗاِنَّهٗ هُوَ الْغَفُوْرُ الرَّحِيْمُ ١٦

qāla
قَالَ
அவர் கூறினார்
rabbi
رَبِّ
என் இறைவா!
innī
إِنِّى
நிச்சயமாக நான்
ẓalamtu
ظَلَمْتُ
அநீதி இழைத்தேன்
nafsī
نَفْسِى
எனக்கு
fa-igh'fir lī
فَٱغْفِرْ لِى
ஆகவே, என்னை மன்னித்துவிடு
faghafara
فَغَفَرَ
ஆகவே அவன் மன்னித்தான்
lahu
لَهُۥٓۚ
அவரை
innahu huwa
إِنَّهُۥ هُوَ
நிச்சயமாக அவன்தான்
l-ghafūru
ٱلْغَفُورُ
மகா மன்னிப்பாளன்
l-raḥīmu
ٱلرَّحِيمُ
மகா கருணையாளன்
அன்றி அவர் "என் இறைவனே! நிச்சயமாக நான் எனக்கே தீங்கிழைத்துக் கொண்டேன். நீ என்னுடைய குற்றத்தை மன்னிப்பாயாக!" என்று பிரார்த்தித்தார். ஆகவே, (இறைவனும்) அவருடைய குற்றத்தை மன்னித்துவிட்டான். ஏனென்றால், நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவனும் கிருபை செய்பவனுமாக இருக்கின்றான். ([௨௮] ஸூரத்துல் கஸஸ்: ௧௬)
Tafseer
௧௭

قَالَ رَبِّ بِمَآ اَنْعَمْتَ عَلَيَّ فَلَنْ اَكُوْنَ ظَهِيْرًا لِّلْمُجْرِمِيْنَ ١٧

qāla
قَالَ
அவர் கூறினார்
rabbi
رَبِّ
என் இறைவா!
bimā anʿamta
بِمَآ أَنْعَمْتَ
சத்தியமாக/அருள் புரிந்ததின் மீது
ʿalayya
عَلَىَّ
எனக்கு
falan akūna
فَلَنْ أَكُونَ
ஆகவே நான் ஆகவே மாட்டேன்
ẓahīran
ظَهِيرًا
உதவுபவனாக
lil'muj'rimīna
لِّلْمُجْرِمِينَ
குற்றவாளிகளுக்கு
(பின்னும் அவர் தன் இறைவனை நோக்கி) "என் இறைவனே! என் மீது நீ அருள் புரிந்ததன் காரணமாக (இனி) ஒரு காலத்திலும் நான் குற்றவாளிகளுக்கு உதவி செய்யமாட்டேன்" என்று கூறினார். ([௨௮] ஸூரத்துல் கஸஸ்: ௧௭)
Tafseer
௧௮

فَاَصْبَحَ فِى الْمَدِيْنَةِ خَاۤىِٕفًا يَّتَرَقَّبُ فَاِذَا الَّذِى اسْتَنْصَرَهٗ بِالْاَمْسِ يَسْتَصْرِخُهٗ ۗقَالَ لَهٗ مُوْسٰٓى اِنَّكَ لَغَوِيٌّ مُّبِيْنٌ ١٨

fa-aṣbaḥa
فَأَصْبَحَ
காலையில் அவர் இருந்தார்
fī l-madīnati
فِى ٱلْمَدِينَةِ
நகரத்தில்
khāifan
خَآئِفًا
பயந்தவராக
yataraqqabu
يَتَرَقَّبُ
எதிர்பார்த்தவராக
fa-idhā alladhī is'tanṣarahu
فَإِذَا ٱلَّذِى ٱسْتَنصَرَهُۥ
அப்போது/ எவன்/உதவிதேடினான்/அவரிடத்தில்
bil-amsi
بِٱلْأَمْسِ
நேற்று
yastaṣrikhuhu
يَسْتَصْرِخُهُۥۚ
அவரை உதவிக்கு கத்தி அழைத்தான்
qāla
قَالَ
கூறினார்
lahu
لَهُۥ
அவனுக்கு
mūsā
مُوسَىٰٓ
மூசா
innaka
إِنَّكَ
நிச்சயமாக நீ
laghawiyyun
لَغَوِىٌّ
ஒரு மூடன் ஆவாய்
mubīnun
مُّبِينٌ
தெளிவான
(அன்றிரவு அவருக்கு நிம்மதியாகவே கழிந்தது. எனினும்) காலையில் எழுந்து அந்நகரத்தில் (தன்னைப் பற்றி என்ன நடந்திருக்கின்றதோ என்று) பயந்தவராகக் கவனித்துக் கொண்டிருந்த சமயத்தில், நேற்று இவரிடம் உதவி தேடியவன் (பின்னும் தனக்கு உதவி செய்யுமாறு) கூச்சலிட்டு இவரை அழைத்தான். அதற்கு மூஸா அவனை நோக்கி "நீ பகிரங்கமான கலகக்காரனாக இருக்கிறாய்" என்று நிந்தித்து, ([௨௮] ஸூரத்துல் கஸஸ்: ௧௮)
Tafseer
௧௯

فَلَمَّآ اَنْ اَرَادَ اَنْ يَّبْطِشَ بِالَّذِيْ هُوَ عَدُوٌّ لَّهُمَاۙ قَالَ يٰمُوْسٰٓى اَتُرِيْدُ اَنْ تَقْتُلَنِيْ كَمَا قَتَلْتَ نَفْسًاۢ بِالْاَمْسِۖ اِنْ تُرِيْدُ اِلَّآ اَنْ تَكُوْنَ جَبَّارًا فِى الْاَرْضِ وَمَا تُرِيْدُ اَنْ تَكُوْنَ مِنَ الْمُصْلِحِيْنَ ١٩

falammā an arāda
فَلَمَّآ أَنْ أَرَادَ
ஆக, அவர் நாடியபோது
an yabṭisha
أَن يَبْطِشَ
தண்டிக்க
bi-alladhī
بِٱلَّذِى
எவனை
huwa
هُوَ
அவன்
ʿaduwwun
عَدُوٌّ
எதிரியாக
lahumā
لَّهُمَا
அவர்கள் இருவருக்கும்
qāla
قَالَ
அவன் கூறினான்
yāmūsā
يَٰمُوسَىٰٓ
மூஸாவே!
aturīdu
أَتُرِيدُ
நீ நாடுகிறாயா?
an taqtulanī
أَن تَقْتُلَنِى
என்னை கொல்ல
kamā qatalta
كَمَا قَتَلْتَ
நீ கொன்றது போன்று
nafsan
نَفْسًۢا
ஓர் உயிரை
bil-amsi
بِٱلْأَمْسِۖ
நேற்று
in turīdu
إِن تُرِيدُ
நீ நாடவில்லை
illā
إِلَّآ
தவிர
an takūna
أَن تَكُونَ
நீ ஆகுவதை
jabbāran
جَبَّارًا
அநியாயக்காரனாக
fī l-arḍi
فِى ٱلْأَرْضِ
பூமியில்
wamā turīdu
وَمَا تُرِيدُ
நீ நாடவில்லை
an takūna
أَن تَكُونَ
நீ ஆகுவதை
mina l-muṣ'liḥīna
مِنَ ٱلْمُصْلِحِينَ
சீர்திருத்தவாதிகளில்
பின்னும் (அவனுக்கு உதவி செய்யவே விரும்பி) அவனுக்கும் தனக்கும் விரோதமாய் இருப்பவனைப் பிடிக்க விரும்பினார். (எனினும், இவருடைய இனத்தான் இவர் தன்னையே பிடிக்க வருவதாய்த் தவறாக எண்ணிப் பயந்து) "மூஸாவே! நேற்றைய தினம் ஒரு மனிதனைக் கொலை செய்தது போல் என்னையும் நீங்கள் கொலை செய்யக் கருதுகிறீர்களா? இவ்வூரில் (நீங்கள் கொலை பாதகம் செய்யும்) வம்பனாக இருக்கக் கருதுகிறீர்களே அன்றி, சீர்திருத்தும் நல்ல மனிதராக இருக்க நீங்கள் நாடவில்லை" என்று கூச்சலிட்டான். ([௨௮] ஸூரத்துல் கஸஸ்: ௧௯)
Tafseer
௨௦

وَجَاۤءَ رَجُلٌ مِّنْ اَقْصَى الْمَدِيْنَةِ يَسْعٰىۖ قَالَ يٰمُوْسٰٓى اِنَّ الْمَلَاَ يَأْتَمِرُوْنَ بِكَ لِيَقْتُلُوْكَ فَاخْرُجْ اِنِّيْ لَكَ مِنَ النّٰصِحِيْنَ ٢٠

wajāa
وَجَآءَ
இன்னும் வந்தார்
rajulun
رَجُلٌ
ஓர் ஆடவர்
min aqṣā
مِّنْ أَقْصَا
இறுதியிலிருந்து
l-madīnati
ٱلْمَدِينَةِ
நகரத்தின்
yasʿā
يَسْعَىٰ
விரைந்தவராக
qāla
قَالَ
கூறினார்
yāmūsā
يَٰمُوسَىٰٓ
மூஸாவே!
inna
إِنَّ
நிச்சயமாக
l-mala-a
ٱلْمَلَأَ
பிரமுகர்கள்
yatamirūna
يَأْتَمِرُونَ
ஆலோசிக்கின்றனர்
bika
بِكَ
உமக்காக
liyaqtulūka
لِيَقْتُلُوكَ
அவர்கள் உம்மைக் கொல்வதற்கு
fa-ukh'ruj
فَٱخْرُجْ
ஆகவே, நீர் வெளியேறிவிடும்!
innī
إِنِّى
நிச்சயமாக நான்
laka
لَكَ
உமக்கு
mina l-nāṣiḥīna
مِنَ ٱلنَّٰصِحِينَ
நன்மையை நாடுபவர்களில் ஒருவன்
(இக்கூச்சல் மக்களிடையே பரவி, நேற்று இறந்தவனைக் கொலை செய்தவர் மூஸாதான் என்று மக்களுக்குத் தெரிந்து இவரைப் பழிவாங்கக் கருதினார்கள்.) அச்சமயம் பட்டிணத்தின் கோடியிலிருந்து ஒரு மனிதர் (விரைவாக) ஓடிவந்து மூஸாவே! "மெய்யாகவே உங்களைக் கொலை செய்துவிட வேண்டுமென்று தலைவர்கள் முடிவு செய்து கொண்டிருக்கிறார்கள். ஆதலால், நீங்கள் (இவ்வூரைவிட்டு) வெளியேறி விடுங்கள். மெய்யாகவே நான் உங்களுடைய நன்மைக்கே (இதனைக்) கூறுகிறேன்" என்று கூறினார். ([௨௮] ஸூரத்துல் கஸஸ்: ௨௦)
Tafseer