Skip to content

ஸூரா ஸூரத்துல் கஸஸ் - Word by Word

Al-Qasas

(al-Q̈aṣaṣ)

bismillaahirrahmaanirrahiim

طٰسۤمّۤ ١

tta-seen-meem
طسٓمٓ
தா சீம் மீம்
தா; ஸீம்; மீம். ([௨௮] ஸூரத்துல் கஸஸ்: ௧)
Tafseer

تِلْكَ اٰيٰتُ الْكِتٰبِ الْمُبِيْنِ ٢

til'ka
تِلْكَ
இவை
āyātu
ءَايَٰتُ
வசனங்களாகும்
l-kitābi
ٱلْكِتَٰبِ
வேதத்தின்
l-mubīni
ٱلْمُبِينِ
தெளிவான
(நபியே!) இவை(களும்) தெளிவான இவ்வேதத்திலுள்ள சில வசனங்களாகும். ([௨௮] ஸூரத்துல் கஸஸ்: ௨)
Tafseer

نَتْلُوْا عَلَيْكَ مِنْ نَّبَاِ مُوْسٰى وَفِرْعَوْنَ بِالْحَقِّ لِقَوْمٍ يُّؤْمِنُوْنَ ٣

natlū
نَتْلُوا۟
நாம் ஓதுகிறோம்
ʿalayka
عَلَيْكَ
உம்மீது
min naba-i
مِن نَّبَإِ
செய்தியை
mūsā
مُوسَىٰ
மூசா
wafir'ʿawna
وَفِرْعَوْنَ
மற்றும் ஃபிர்அவ்னின்
bil-ḥaqi
بِٱلْحَقِّ
உண்மையாக
liqawmin
لِقَوْمٍ
மக்களுக்காக
yu'minūna
يُؤْمِنُونَ
நம்பிக்கைகொள்கின்ற
(நபியே!) நம்பிக்கை கொண்ட மக்களுக்காக மூஸா, ஃபிர்அவ்னைப் பற்றிய சில உண்மை விஷயங்களை நாம் உங்களுக்கு ஓதிக் காண்பிக்கிறோம். ([௨௮] ஸூரத்துல் கஸஸ்: ௩)
Tafseer

اِنَّ فِرْعَوْنَ عَلَا فِى الْاَرْضِ وَجَعَلَ اَهْلَهَا شِيَعًا يَّسْتَضْعِفُ طَاۤىِٕفَةً مِّنْهُمْ يُذَبِّحُ اَبْنَاۤءَهُمْ وَيَسْتَحْيٖ نِسَاۤءَهُمْ ۗاِنَّهٗ كَانَ مِنَ الْمُفْسِدِيْنَ ٤

inna
إِنَّ
நிச்சயமாக
fir'ʿawna
فِرْعَوْنَ
ஃபிர்அவ்ன்
ʿalā
عَلَا
பலவந்தப்படுத்தினான்
fī l-arḍi
فِى ٱلْأَرْضِ
பூமியில்
wajaʿala
وَجَعَلَ
இன்னும் ஆக்கினான்
ahlahā
أَهْلَهَا
அங்குள்ளவர்களை
shiyaʿan
شِيَعًا
பல பிரிவுகளாக
yastaḍʿifu
يَسْتَضْعِفُ
பலவீனப்படுத்தினான்
ṭāifatan
طَآئِفَةً
ஒரு வகுப்பாரை
min'hum
مِّنْهُمْ
அவர்களில்
yudhabbiḥu
يُذَبِّحُ
கொன்றான்
abnāahum
أَبْنَآءَهُمْ
ஆண் பிள்ளைகளை அவர்களின்
wayastaḥyī
وَيَسْتَحْىِۦ
வாழவிட்டான்
nisāahum
نِسَآءَهُمْۚ
அவர்களின் பெண்களை
innahu
إِنَّهُۥ
நிச்சயமாக அவன்
kāna
كَانَ
இருந்தான்
mina l-muf'sidīna
مِنَ ٱلْمُفْسِدِينَ
கெட்டவர்களில் ஒருவனாக
நிச்சயமாக ஃபிர்அவ்ன், பூமியில் மிகவும் பெருமை கொண்டு, அதில் உள்ளவர்களைப் பல வகுப்புக்களாகப் பிரித்து, அவர்களில் ஒரு பிரிவினரை பலவீனப்படுத்தும் பொருட்டு அவர்களுடைய ஆண் மக்களைக் கொலை செய்து, பெண் மக்களை உயிருடன் வாழ வைத்து வந்தான். மெய்யாகவே (இவ்வாறு) அவன் விஷமம் செய்பவனாக இருந்தான். ([௨௮] ஸூரத்துல் கஸஸ்: ௪)
Tafseer

وَنُرِيْدُ اَنْ نَّمُنَّ عَلَى الَّذِيْنَ اسْتُضْعِفُوْا فِى الْاَرْضِ وَنَجْعَلَهُمْ اَىِٕمَّةً وَّنَجْعَلَهُمُ الْوٰرِثِيْنَ ۙ ٥

wanurīdu
وَنُرِيدُ
இன்னும் நாடினோம்
an namunna
أَن نَّمُنَّ
?/நாம் அருள்புரிவதற்கு
ʿalā alladhīna us'tuḍ'ʿifū
عَلَى ٱلَّذِينَ ٱسْتُضْعِفُوا۟
பலவீனப்படுத்தப்பட்டவர்கள் மீது
fī l-arḍi
فِى ٱلْأَرْضِ
பூமியில்
wanajʿalahum
وَنَجْعَلَهُمْ
இன்னும் அவர்களை நாம் ஆக்குவதற்கு
a-immatan
أَئِمَّةً
அரசர்களாக
wanajʿalahumu
وَنَجْعَلَهُمُ
இன்னும் அவர்களை நாம் ஆக்குவதற்கு
l-wārithīna
ٱلْوَٰرِثِينَ
வாரிசுகளாக
எனினும், பூமியில் அவன் பலவீனப்படுத்தியவர்கள் மீது நாம் அருள் புரிந்து அவர்களைத் தலைவர்களாக்கி (அங்கு இருந்தவர்களுடைய பொருள்களுக்கும்,) இவர்களையே வாரிசுகளாக்கி வைக்க விரும்பினோம். ([௨௮] ஸூரத்துல் கஸஸ்: ௫)
Tafseer

وَنُمَكِّنَ لَهُمْ فِى الْاَرْضِ وَنُرِيَ فِرْعَوْنَ وَهَامٰنَ وَجُنُوْدَهُمَا مِنْهُمْ مَّا كَانُوْا يَحْذَرُوْنَ ٦

wanumakkina
وَنُمَكِّنَ
இன்னும் நாம் ஆதிக்கத்தை ஏற்படுத்துவதற்கு
lahum
لَهُمْ
அவர்களுக்கு
fī l-arḍi
فِى ٱلْأَرْضِ
பூமியில்
wanuriya
وَنُرِىَ
நாம் காண்பிப்பதற்கு
fir'ʿawna
فِرْعَوْنَ
ஃபிர்அவ்ன்
wahāmāna
وَهَٰمَٰنَ
இன்னும் ஹாமான்
wajunūdahumā
وَجُنُودَهُمَا
இன்னும் இராணுவங்களுக்கு அவ்விருவரின்
min'hum
مِنْهُم
அவர்கள் மூலமாக
mā kānū
مَّا كَانُوا۟
எதை/இருந்தனர்
yaḥdharūna
يَحْذَرُونَ
அச்சப்படுகின்றனர்
அப்பூமியில் நாம் (பலவீனமான) அவர்களை மேன்மையாக்கி வைத்து ஃபிர்அவ்னும், ஹாமானும், அவர்களுடைய ராணுவங்களும் எந்த வேதனைக்குப் பயந்து கொண்டிருந்தார்களோ, அதனை அவர்களுக்குக் காண்பிக்கவும் நாம் கருதினோம். ([௨௮] ஸூரத்துல் கஸஸ்: ௬)
Tafseer

وَاَوْحَيْنَآ اِلٰٓى اُمِّ مُوْسٰٓى اَنْ اَرْضِعِيْهِۚ فَاِذَا خِفْتِ عَلَيْهِ فَاَلْقِيْهِ فِى الْيَمِّ وَلَا تَخَافِيْ وَلَا تَحْزَنِيْ ۚاِنَّا رَاۤدُّوْهُ اِلَيْكِ وَجَاعِلُوْهُ مِنَ الْمُرْسَلِيْنَ ٧

wa-awḥaynā
وَأَوْحَيْنَآ
நாம் உள்ளத்தில் போட்டோம்
ilā ummi
إِلَىٰٓ أُمِّ
தாயாருக்கு
mūsā
مُوسَىٰٓ
மூஸாவின்
an arḍiʿīhi
أَنْ أَرْضِعِيهِۖ
நீ அவருக்கு பாலூட்டு!
fa-idhā khif'ti
فَإِذَا خِفْتِ
நீ பயந்தால்
ʿalayhi
عَلَيْهِ
அவரை
fa-alqīhi
فَأَلْقِيهِ
அவரை எரிந்து விடு
fī l-yami
فِى ٱلْيَمِّ
கடலில்
walā takhāfī
وَلَا تَخَافِى
நீ பயப்படாதே!
walā taḥzanī
وَلَا تَحْزَنِىٓۖ
இன்னும் நீ கவலைப்படாதே!
innā
إِنَّا
நிச்சயமாக நாம்
rāddūhu
رَآدُّوهُ
அவரை திரும்பக் கொண்டு வருவோம்
ilayki
إِلَيْكِ
உம்மிடம்
wajāʿilūhu
وَجَاعِلُوهُ
இன்னும் , அவரை ஆக்குவோம்
mina l-mur'salīna
مِنَ ٱلْمُرْسَلِينَ
தூதர்களில்
(ஆகவே, பலவீனமானவர்களில் மூஸாவை நாம் படைத்தோம். மூஸா பிறந்த சமயத்தில், பலவீனமான இவர்களுடைய மக்களில் பிறக்கும் ஆண் குழந்தைகளை ஃபிர்அவ்ன் வதை செய்து கொண்டிருந்தான். ஆகவே மூஸாவின் தாய், தன்னுடைய இக்குழந்தையையும் ஃபிர்அவ்ன் கொலை செய்து விடுவானோ என்று அஞ்சி நடுங்கினாள்.) ஆகவே, (அச்சமயம்) மூஸாவின் தாய்க்கு நாம் வஹீ மூலம் அறிவித்தோம்: (குழந்தையை உன்னிடமே வைத்துக்கொண்டு) "அவருக்குப் பால் கொடுத்து வா. (உன்னிடம் இருப்பதில்) அவரைப் பற்றி நீ பயந்தால், அவரை (பேழையில் வைத்து) ஆற்றில் எறிந்துவிடு. நீ அவரைப் பற்றிக் கவலைப்படாதே! பயப்படாதே! நிச்சயமாக நாம் அவரை உன்னிடமே கொண்டு வந்து சேர்த்து, அவரை நம்முடைய தூதர்களில் ஒருவராகவும் ஆக்குவோம்" (என்று அறிவித்தோம்.) ([௨௮] ஸூரத்துல் கஸஸ்: ௭)
Tafseer

فَالْتَقَطَهٗٓ اٰلُ فِرْعَوْنَ لِيَكُوْنَ لَهُمْ عَدُوًّا وَّحَزَنًاۗ اِنَّ فِرْعَوْنَ وَهَامٰنَ وَجُنُوْدَهُمَا كَانُوْا خٰطِـِٕيْنَ ٨

fal-taqaṭahu
فَٱلْتَقَطَهُۥٓ
அவரைக் கண்டெடுத்தனர்
ālu
ءَالُ
குடும்பத்தினர்
fir'ʿawna
فِرْعَوْنَ
ஃபிர்அவ்னின்
liyakūna
لِيَكُونَ
முடிவில் அவர் ஆகுவதற்காக
lahum
لَهُمْ
அவர்களுக்கு
ʿaduwwan
عَدُوًّا
எதிரியாகவும்
waḥazanan
وَحَزَنًاۗ
கவலையாகவும்
inna
إِنَّ
நிச்சயமாக
fir'ʿawna
فِرْعَوْنَ
ஃபிர்அவ்ன்
wahāmāna
وَهَٰمَٰنَ
ஹாமான்
wajunūdahumā
وَجُنُودَهُمَا
இன்னும் ராணுவங்கள் அவ்விருவரின்
kānū
كَانُوا۟
இருந்தனர்
khāṭiīna
خَٰطِـِٔينَ
பாவிகளாகவே
(ஆகவே, மூஸாவுடைய தாய் அவரை ஒரு பேழையில் வைத்து ஆற்றில் விட்டுவிட்டாள்.) அக்குழந்தையை ஃபிர்அவ்னுடைய குடும்பத்தினரில் ஒருவர் எடுத்துக்கொண்டார். (அவர்களுக்கு) எதிரியாகி துக்கத்தைத் தரக்கூடிய (அக்குழந்)தை (யை அவர்களே எடுத்துக்கொண்டதினால்) ஃபிர்அவ்னும், ஹாமானும், அவர்களுடைய ராணுவங்களும் நிச்சயமாகத் தவறிழைத்தவர்களாவே ஆயினர். ([௨௮] ஸூரத்துல் கஸஸ்: ௮)
Tafseer

وَقَالَتِ امْرَاَتُ فِرْعَوْنَ قُرَّتُ عَيْنٍ لِّيْ وَلَكَۗ لَا تَقْتُلُوْهُ ۖعَسٰٓى اَنْ يَّنْفَعَنَآ اَوْ نَتَّخِذَهٗ وَلَدًا وَّهُمْ لَا يَشْعُرُوْنَ ٩

waqālati
وَقَالَتِ
கூறினாள்
im'ra-atu
ٱمْرَأَتُ
மனைவி
fir'ʿawna
فِرْعَوْنَ
ஃபிர்அவ்னின்
qurratu
قُرَّتُ
குளிர்ச்சியாகும்
ʿaynin
عَيْنٍ
கண்
lī walaka
لِّى وَلَكَۖ
எனக்கும் உனக்கும்
lā taqtulūhu
لَا تَقْتُلُوهُ
அதைக் கொல்லாதீர்கள்!
ʿasā an yanfaʿanā
عَسَىٰٓ أَن يَنفَعَنَآ
அது நமக்கு நன்மை தரலாம்
aw nattakhidhahu
أَوْ نَتَّخِذَهُۥ
அல்லது அதை நாம் வைத்துக்கொள்ளலாம்
waladan
وَلَدًا
பிள்ளையாக
wahum
وَهُمْ
இன்னும் அவர்கள்
lā yashʿurūna
لَا يَشْعُرُونَ
உணரவில்லை
(அக்குழந்தையைக் கண்ட) ஃபிர்அவ்னுடைய மனைவி (தன் கணவனை நோக்கி) "நீ இதனை கொலை செய்துவிடாதே! எனக்கும், உனக்கும் இது ஒரு கண் குளிர்ச்சியாக இருக்கின்றது. இதனால் நாம் நன்மை அடையலாம் அல்லது இதனை நாம் நம்முடைய குழந்தையாக தத்தெடுத்துக் கொள்ளலாம்" என்று கூறினாள். எனினும், (இவராலேயே தங்களுக்கும் அழிவு ஏற்படும் என்பதை) அவர்கள் அறிந்துகொள்ளவில்லை. ([௨௮] ஸூரத்துல் கஸஸ்: ௯)
Tafseer
௧௦

وَاَصْبَحَ فُؤَادُ اُمِّ مُوْسٰى فٰرِغًاۗ اِنْ كَادَتْ لَتُبْدِيْ بِهٖ لَوْلَآ اَنْ رَّبَطْنَا عَلٰى قَلْبِهَا لِتَكُوْنَ مِنَ الْمُؤْمِنِيْنَ ١٠

wa-aṣbaḥa
وَأَصْبَحَ
ஆகிவிட்டது
fuādu
فُؤَادُ
உள்ளம்
ummi
أُمِّ
தாயாருடைய
mūsā
مُوسَىٰ
மூஸாவின்
fārighan
فَٰرِغًاۖ
வெறுமையாக
in kādat latub'dī
إِن كَادَتْ لَتُبْدِى
நிச்சயமாக அவள் வெளிப்படுத்தி இருக்கக்கூடும்
bihi
بِهِۦ
அவரை
lawlā an rabaṭnā
لَوْلَآ أَن رَّبَطْنَا
நாம் உறுதிப்படுத்தவில்லையெனில்
ʿalā qalbihā
عَلَىٰ قَلْبِهَا
அவளுடைய உள்ளத்தை
litakūna
لِتَكُونَ
அவள் ஆகவேண்டும் என்பதற்காக
mina l-mu'minīna
مِنَ ٱلْمُؤْمِنِينَ
நம்பிக்கையாளர்களில்
மூஸாவுடைய தாயின் உள்ளம் (அவரை ஆற்றில் எறிந்த பின் துக்கத்தால்) வெறுமையாகி விட்டது. அவள் என்னுடைய வார்த்தையை நம்பும்படி அவளுடைய உள்ளத்தை நாம் உறுதிப் படுத்தியிருக்காவிடில், (மூஸா பிறந்திருக்கும் விஷயத்தை அனைவருக்கும்) அவள் வெளிப்படுத்தியே இருப்பாள். ([௨௮] ஸூரத்துல் கஸஸ்: ௧௦)
Tafseer