Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நம்லி வசனம் ௯௩

Qur'an Surah An-Naml Verse 93

ஸூரத்துந் நம்லி [௨௭]: ௯௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَقُلِ الْحَمْدُ لِلّٰهِ سَيُرِيْكُمْ اٰيٰتِهٖ فَتَعْرِفُوْنَهَاۗ وَمَا رَبُّكَ بِغَافِلٍ عَمَّا تَعْمَلُوْنَ ࣖ (النمل : ٢٧)

waquli
وَقُلِ
And say
கூறுவீராக
l-ḥamdu
ٱلْحَمْدُ
"All praise (be)
எல்லாப் புகழும்
lillahi
لِلَّهِ
to Allah
அல்லாஹ்விற்கே
sayurīkum
سَيُرِيكُمْ
He will show you
உங்களுக்கு காண்பிப்பான்
āyātihi
ءَايَٰتِهِۦ
His Signs
தனது அத்தாட்சிகளை
fataʿrifūnahā
فَتَعْرِفُونَهَاۚ
and you will recognize them
அச்சமயம் நீங்கள் அறிந்து கொள்வீர்கள்/அவற்றை
wamā
وَمَا
And your Lord is not
இல்லை
rabbuka
رَبُّكَ
And your Lord is not
உமது இறைவன்
bighāfilin
بِغَٰفِلٍ
unaware
கவனிக்காதவனாக
ʿammā taʿmalūna
عَمَّا تَعْمَلُونَ
of what you do"
நீங்கள் செய்பவற்றை

Transliteration:

Wa qulil hamdu lillaahi sa yureekum Aayaatihee fata'ri foonahaa; wa maa Rabbuka bighaaflin 'ammaa ta'maloon (QS. an-Naml:93)

English Sahih International:

And say, "[All] praise is [due] to Allah. He will show you His signs, and you will recognize them. And your Lord is not unaware of what you do." (QS. An-Naml, Ayah ௯௩)

Abdul Hameed Baqavi:

புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியன. (அவன் மறுமை வருவதற்குரிய) தன்னுடைய அத்தாட்சிகளை அதி சீக்கிரத்தில் உங்களுக்குக் காண்பிப்பான். அச்சமயம், அவைகளை நீங்கள் (உண்மையென) அறிந்து கொள்வீர்கள். (தற்சமயம்) நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றீர்கள் என்பதைப் பற்றி (நபியே!) உங்களது இறைவன் பராமுகமாயில்லை என்று கூறுங்கள். (ஸூரத்துந் நம்லி, வசனம் ௯௩)

Jan Trust Foundation

இன்னும் கூறுவீராக| “எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே! அவன் சீக்கிரத்தில் உங்களுக்குத் தன் அத்தாட்சிகளைக் காண்பிப்பான்; அப்போது அவற்றை நீங்கள் அறிந்து கொள்வீர்கள்” மேலும் உம்முடைய இறைவன் நீங்கள் செய்வதை விட்டும் பராமுகமாக இல்லை.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(நபியே!) கூறுவீராக: எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே. அவன் தனது அத்தாட்சிகளை உங்களுக்கு காண்பிப்பான். அச்சமயம் அவற்றை நீங்கள் (உண்மையென) அறிந்து கொள்வீர்கள். (நபியே!) உமது இறைவன் நீங்கள் (-இணைவைப்பவர்கள்) செய்பவற்றை கவனிக்காதவனாக இல்லை. (அவர்கள் ஒரு தவணைக்காகவே விட்டு வைக்கப்படுகின்றனர். கண்டிப்பாக அவர்களுக்கு அழிவும், உமக்கு வெற்றியும் உண்டு.)பேரருளாளன் பேரன்பாளன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...