குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நம்லி வசனம் ௯௨
Qur'an Surah An-Naml Verse 92
ஸூரத்துந் நம்லி [௨௭]: ௯௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَاَنْ اَتْلُوَا الْقُرْاٰنَ ۚفَمَنِ اهْتَدٰى فَاِنَّمَا يَهْتَدِيْ لِنَفْسِهٖۚ وَمَنْ ضَلَّ فَقُلْ اِنَّمَآ اَنَا۠ مِنَ الْمُنْذِرِيْنَ (النمل : ٢٧)
- wa-an atluwā
- وَأَنْ أَتْلُوَا۟
- And that I recite
- இன்னும் நான் ஓதுவதற்கு
- l-qur'āna
- ٱلْقُرْءَانَۖ
- the Quran"
- குர்ஆனை
- famani
- فَمَنِ
- And whoever
- ஆகவே, யார்
- ih'tadā
- ٱهْتَدَىٰ
- accepts guidance
- நேர்வழி பெறுகிறாரோ
- fa-innamā yahtadī
- فَإِنَّمَا يَهْتَدِى
- then only he accepts guidance
- நிச்சயமாக அவர் நேர்வழி பெறுவதெல்லாம்
- linafsihi waman
- لِنَفْسِهِۦۖ وَمَن
- for himself; and whoever
- அவரது நன்மைக்காகத்தான்/யார்
- ḍalla
- ضَلَّ
- goes astray
- வழி கெடுகின்றானோ
- faqul
- فَقُلْ
- then say
- கூறுவீராக!
- innamā anā
- إِنَّمَآ أَنَا۠
- "Only I am
- நான் எல்லாம்
- mina l-mundhirīna
- مِنَ ٱلْمُنذِرِينَ
- of the warners"
- எச்சரிப்பவர்களில் உள்ளவன்தான்
Transliteration:
Wa an atluwal Qur-aana famanih tadaa fa innnamaa yahtadee linafsihee wa man dalla faqul innamaaa ana minal munzireen(QS. an-Naml:92)
English Sahih International:
And to recite the Quran." And whoever is guided is only guided for [the benefit of] himself; and whoever strays – say, "I am only [one] of the warners." (QS. An-Naml, Ayah ௯௨)
Abdul Hameed Baqavi:
அன்றி, திருக்குர்ஆனை நான் (அனைவருக்கும்) ஓதிக் காண்பிக்குமாறும் (ஏவப்பட்டுள்ளேன். அதனைக் கொண்டு) எவன் நேரான வழியை அடைகின்றானோ அவன் தன் சுய நன்மைக் காகவே நேரான வழியில் செல்கின்றான். எவரேனும் (இதிலிருந்து விலகித்) தவறான வழியில் சென்றால் (நபியே! நீங்கள் அதைப் பற்றிக் கவலைப்படாதீர்கள்.) "நிச்சயமாக நான் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவன் மட்டும்தான் (நிர்ப்பந்திப்பவனல்ல)" என்று கூறுங்கள். (ஸூரத்துந் நம்லி, வசனம் ௯௨)
Jan Trust Foundation
இன்னும்| குர்ஆனை ஓதி வரவும் (நான் ஏவப்பட்டுள்ளேன்); ஆகவே எவர் நேர்வழியை அடைகிறாரோ - அவர் நேர்வழியடைவது அவர் நன்மைக்கேயாகும்; அன்றியும் எவர் வழி கெடுகிறாரோ (அவருக்குக்) கூறுவீராக| “நிச்சயமாக நான் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவன்தான்.“
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
இன்னும், (இந்த) குர்ஆனை நான் ஓதுவதற்கும்(கட்டளை இடப்பட்டுள்ளேன்). ஆகவே, யார் நேர்வழி பெறுகிறாரோ அவர் நேர்வழி பெறுவதெல்லாம் அவரது நன்மைக்காகத்தான். யார் வழி கெடுகின்றானோ (அவனுக்கு நபியே நீர் உம்மைப் பற்றி) கூறுவீராக! “நான் எல்லாம் எச்சரிப்பவர்களில் உள்ளவன் தான். (நான் எச்சரித்து விட்டேன். நீங்கள் என்னை பின்பற்றினால் நீங்கள் அடையப்போகும் நன்மை உங்களுக்குத்தான். நீங்கள் என்னை நிராகரித்தால் அதனால் ஏற்படும் தீமை உங்களுக்குத்தான்.)”