Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நம்லி வசனம் ௮௪

Qur'an Surah An-Naml Verse 84

ஸூரத்துந் நம்லி [௨௭]: ௮௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

حَتّٰٓى اِذَا جَاۤءُوْ قَالَ اَكَذَّبْتُمْ بِاٰيٰتِيْ وَلَمْ تُحِيْطُوْا بِهَا عِلْمًا اَمَّاذَا كُنْتُمْ تَعْمَلُوْنَ (النمل : ٢٧)

ḥattā
حَتَّىٰٓ
Until
இறுதியாக
idhā jāū
إِذَا جَآءُو
when they come
அவர்கள் வந்து விடும்போது
qāla
قَالَ
He will say
அவன் கூறுவான்
akadhabtum
أَكَذَّبْتُم
"Did you deny
நீங்கள்பொய்ப்பித்தீர்களா?
biāyātī
بِـَٔايَٰتِى
My Signs
எனதுஅத்தாட்சிகளை
walam tuḥīṭū bihā ʿil'man
وَلَمْ تُحِيطُوا۟ بِهَا عِلْمًا
while not you encompassed them (in) knowledge
நீங்கள் முழுமையாக அறியாமல் இருக்க/அவற்றை
ammādhā
أَمَّاذَا
or what
?/அல்லது/என்ன
kuntum taʿmalūna
كُنتُمْ تَعْمَلُونَ
you used (to) do?"
நீங்கள் செய்து கொண்டு இருந்தீர்கள்?

Transliteration:

Hattaaa izaa jaaa'oo qaala akazzabtum bi Aayaatee wa lam tuheetoo bihaa 'ilman ammaazaa kuntum ta'maloon (QS. an-Naml:84)

English Sahih International:

Until, when they arrive [at the place of Judgement], He will say, "Did you deny My signs while you encompassed them not in knowledge, or what [was it that] you were doing?" (QS. An-Naml, Ayah ௮௪)

Abdul Hameed Baqavi:

அவர்கள் அனைவரும் (தங்கள் இறைவனிடம்) வரும் சமயத்தில் (இறைவன் அவர்களை நோக்கி) "நீங்கள் என்னுடைய வசனங்களை நன்கறிந்து கொள்வதற்கு முன்னதாகவே அதனைப் பொய்யாக்கி விட்டீர்களா? (அவ்வாறில்லையாயின்) பின்னர் என்னதான் நீங்கள் செய்து கொண்டிருந்தீர்கள்?" என்று கேட்பான். (ஸூரத்துந் நம்லி, வசனம் ௮௪)

Jan Trust Foundation

அவர்கள் யாவரும் வந்ததும்| “நீங்கள் என் வசனங்களைச் சூழ்ந்தறியாத நிலையில் அவற்றைப் பொய்ப்பித்துக் கொண்டிருந்தீர்களா? நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்?” என்று கேட்பான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இறுதியாக, அவர்கள் வந்து விடும்போது அவன் (-அல்லாஹ்) கூறுவான்: எனது அத்தாட்சிகளை நீங்கள் பொய்ப்பித்தீர்களா? அவற்றை நீங்கள் முழுமையாக அறியாமல் இருக்க! அல்லது நீங்கள் என்ன செய்து கொண்டு இருந்தீர்கள்?