Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நம்லி வசனம் ௮௨

Qur'an Surah An-Naml Verse 82

ஸூரத்துந் நம்லி [௨௭]: ௮௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

۞ وَاِذَا وَقَعَ الْقَوْلُ عَلَيْهِمْ اَخْرَجْنَا لَهُمْ دَاۤبَّةً مِّنَ الْاَرْضِ تُكَلِّمُهُمْ اَنَّ النَّاسَ كَانُوْا بِاٰيٰتِنَا لَا يُوْقِنُوْنَ ࣖ (النمل : ٢٧)

wa-idhā waqaʿa
وَإِذَا وَقَعَ
And when (is) fulfilled
நிகழ்ந்து விட்டால்
l-qawlu
ٱلْقَوْلُ
the word
வாக்கு
ʿalayhim
عَلَيْهِمْ
against them
அவர்கள் மீது
akhrajnā
أَخْرَجْنَا
We will bring forth
நாம் வெளிப்படுத்துவோம்
lahum
لَهُمْ
for them
அவர்களுக்கு
dābbatan
دَآبَّةً
a creature
ஒரு மிருகத்தை
mina l-arḍi
مِّنَ ٱلْأَرْضِ
from the earth
பூமியிலிருந்து
tukallimuhum
تُكَلِّمُهُمْ
speaking to them
அது பேசும்/அவர்களிடம்
anna l-nāsa
أَنَّ ٱلنَّاسَ
that the people
நிச்சயமாக மக்கள்
kānū
كَانُوا۟
were
இருந்தனர்
biāyātinā
بِـَٔايَٰتِنَا
of Our Signs
நமது அத்தாட்சிகளைக் கொண்டு
lā yūqinūna
لَا يُوقِنُونَ
not certain
உறுதி கொள்ளாதவர்களாக

Transliteration:

Wa izaa waqa'al qawhu 'alaihim akhrajnaa lahum daabbatam minal ardi tukal limuhum annan naasa kaanoo bi aayaatinaa laa yooqinoon (QS. an-Naml:82)

English Sahih International:

And when the word [i.e., decree] befalls them, We will bring forth for them a creature from the earth speaking to them, [saying] that the people were, of Our verses, not certain [in faith]. (QS. An-Naml, Ayah ௮௨)

Abdul Hameed Baqavi:

இறுதிநாள் அவர்களை நெருங்கிய சமயத்தில், அவர்களுக்காகப் பூமியிலிருந்து ஒரு கால்நடையை நாம் வெளிப் படுத்துவோம். அது எந்தெந்த மனிதர்கள் நம்முடைய வசனங்களை நம்பிக்கை கொள்ளவில்லை என்பதை அவர்களுக்குச் சொல்லிக் காண்பிக்கும். (ஸூரத்துந் நம்லி, வசனம் ௮௨)

Jan Trust Foundation

அவர்கள் மீது (வேதனையுடைய) வாக்கு நெருங்கும் போது, அவர்களுக்காக ஒரு பிராணியை பூமியிலிருந்து நாம் வெளியாக்குவோம்; அது, நிச்சயமாக மனிதர்கள் (யார், யார்) நம் வசனங்களின் மீது உறுதி கொள்ளவில்லையென்று அவர்களுக்குச் சொல்லிக் காண்பிக்கும்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்கள் மீது நமது வாக்கு (அவர்கள் இனி நம்பிக்கை கொள்ள மாட்டார்கள் என்ற நமது வாக்கு உறுதியாக) நிகழ்ந்து விட்டால் பூமியிலிருந்து ஒரு மிருகத்தை நாம் அவர்களுக்கு வெளிப்படுத்துவோம். “நிச்சயமாக மக்கள் நமது அத்தாட்சிகளைக் கொண்டு உறுதி(யாக நம்பிக்கை) கொள்ளாதவர்களாக இருந்தனர்”என்று அவர்களிடம் அது பேசும்.