Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நம்லி வசனம் ௮௧

Qur'an Surah An-Naml Verse 81

ஸூரத்துந் நம்லி [௨௭]: ௮௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَمَآ اَنْتَ بِهٰدِى الْعُمْيِ عَنْ ضَلٰلَتِهِمْۗ اِنْ تُسْمِعُ اِلَّا مَنْ يُّؤْمِنُ بِاٰيٰتِنَا فَهُمْ مُّسْلِمُوْنَ (النمل : ٢٧)

wamā anta
وَمَآ أَنتَ
And not (can) you
நீர் முடியாது
bihādī
بِهَٰدِى
guide
நேர்வழிபடுத்த
l-ʿum'yi
ٱلْعُمْىِ
the blind
குருடர்களை
ʿan ḍalālatihim
عَن ضَلَٰلَتِهِمْۖ
from their error
அவர்களின் வழிகேட்டிலிருந்து
in tus'miʿu
إِن تُسْمِعُ
Not you can cause to hear
நீர் செவியுறச் செய்ய முடியாது
illā
إِلَّا
except
தவிர
man yu'minu
مَن يُؤْمِنُ
(those) who believe
எவர்/நம்பிக்கை கொள்வார்
biāyātinā
بِـَٔايَٰتِنَا
in Our Signs
நமது வசனங்களை
fahum
فَهُم
so they
அவர்கள்தான்
mus'limūna
مُّسْلِمُونَ
(are) Muslims
முற்றிலும் பணிந்து நடப்பவர்கள்

Transliteration:

Wa maaa anta bihaadil 'umyi 'an dalaalatihim in tusmi'u illaa mai yu'minu bi aayaatinaa fahum muslimoon (QS. an-Naml:81)

English Sahih International:

And you cannot guide the blind away from their error. You will only make hear those who believe in Our verses so they are Muslims [i.e., submitting to Allah]. (QS. An-Naml, Ayah ௮௧)

Abdul Hameed Baqavi:

குருடர்களையும் அவர்களுடைய வழிகேட்டிலிருந்து நேரான வழிக்குக் கொண்டு வரவும் உங்களால் முடியாது. எவர்கள் நம்முடைய வசனங்களை நம்பிக்கை கொண்டு முற்றிலும் நமக்கு வழிபட்டு நடக்கின்றார்களோ அவர்களைத் தவிர மற்றவர்களுக்கும் நீங்கள் (நம்முடைய வசனங்களைக்) கேட்கும்படிச் செய்ய முடியாது. (ஸூரத்துந் நம்லி, வசனம் ௮௧)

Jan Trust Foundation

இன்னும்| நீர் குருடர்களையும் அவர்களுடைய வழிகேட்டிலிருந்து (அகற்றி) நேர் வழியில் செலுத்த முடியாது - எவர்கள் நம் வசனங்களை நம்புகிறார்களோ அவர்களைத் தான் (அவற்றைக்) கேட்கும்படி நீர் செய்ய முடியும்; ஏனெனில் அவர்கள் (அவற்றை) முற்றிலும் ஏற்றுக்கொள்வர்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(அல்லாஹ் எவர்களின் கண்களை சத்தியத்தை பார்ப்பதிலிருந்து குருடாக்கி விட்டானோ அந்த) குருடர்களை அவர்களின் வழிகேட்டிலிருந்து நீர் நேர்வழிபடுத்த முடியாது. நமது வசனங்களை நம்பிக்கை கொள்பவர்களைத் தவிர (பிறரை) நீர் செவியுறச் செய்யமுடியாது. அவர்கள்தான் (நமது கட்டளைகளுக்கு) முற்றிலும் பணிந்து நடப்பவர்கள்.