Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நம்லி வசனம் ௮௦

Qur'an Surah An-Naml Verse 80

ஸூரத்துந் நம்லி [௨௭]: ௮௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِنَّكَ لَا تُسْمِعُ الْمَوْتٰى وَلَا تُسْمِعُ الصُّمَّ الدُّعَاۤءَ اِذَا وَلَّوْا مُدْبِرِيْنَ (النمل : ٢٧)

innaka
إِنَّكَ
Indeed you
நிச்சயமாக நீர்
lā tus'miʿu
لَا تُسْمِعُ
(can)not cause to hear
நீர் செவியுறச் செய்யமுடியாது
l-mawtā
ٱلْمَوْتَىٰ
the dead
மரணித்தவர்களை
walā tus'miʿu
وَلَا تُسْمِعُ
and not can you cause to hear
இன்னும் நீர் செவியுறச் செய்ய முடியாது
l-ṣuma
ٱلصُّمَّ
the deaf
செவிடர்களுக்கும்
l-duʿāa
ٱلدُّعَآءَ
the call
அழைப்பை
idhā wallaw mud'birīna
إِذَا وَلَّوْا۟ مُدْبِرِينَ
when they turn back retreating
அவர்கள் புறமுதுகிட்டவர்களாக திரும்பினால்

Transliteration:

Innaka laa tusmi'ul mawtaa wa laa tusmi'us summad du'aaa izaa wallaw mudbireen (QS. an-Naml:80)

English Sahih International:

Indeed, you will not make the dead hear, nor will you make the deaf hear the call when they have turned their backs retreating. (QS. An-Naml, Ayah ௮௦)

Abdul Hameed Baqavi:

(நபியே!) மரணித்தவர்களுக்குக் கேட்கும்படிச் செய்ய நிச்சயமாக உங்களால் முடியாது. (அவ்வாறே உங்களுக்குப்) புறங்காட்டிச் செல்லும் செவிடர்களுக்கு நீங்கள் அழைக்கும் (உங்களுடைய) சப்தத்தைக் கேட்கும்படிச் செய்யவும் முடியாது. (ஸூரத்துந் நம்லி, வசனம் ௮௦)

Jan Trust Foundation

நிச்சயமாக நீர் மரித்தோரைக் கேட்கும் படிச் செய்ய முடியாது; - அவ்வாறே செவிடர்களையும் - அவர்கள் புறங்காட்டித் திரும்பி விடும்போது - (உம்) அழைப்பைக் கேட்கும் படிச் செய்ய முடியாது.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நிச்சயமாக (உள்ளம்) மரணித்தவர்களை நீர் செவியுறச் செய்யமுடியாது. (செவியில் முத்திரை இடப்பட்ட) செவிடர்களுக்கும் -அவர்கள் புறமுதுகிட்டவர்களாக (-புறக்கணித்தவர்களாக) திரும்பினால்- அழைப்பை நீர் செவியுறச் செய்யமுடியாது.