Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நம்லி வசனம் ௮

Qur'an Surah An-Naml Verse 8

ஸூரத்துந் நம்லி [௨௭]: ௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَلَمَّا جَاۤءَهَا نُوْدِيَ اَنْۢ بُوْرِكَ مَنْ فِى النَّارِ وَمَنْ حَوْلَهَاۗ وَسُبْحٰنَ اللّٰهِ رَبِّ الْعٰلَمِيْنَ (النمل : ٢٧)

falammā jāahā
فَلَمَّا جَآءَهَا
But when he came to it
அவர் அதனிடம் வந்த போது
nūdiya
نُودِىَ
he was called
அழைக்கப்பட்டார்
an būrika
أَنۢ بُورِكَ
[that] "Blessed is
பரிசுத்தமானவன்
man fī l-nāri
مَن فِى ٱلنَّارِ
who (is) at the fire
நெருப்பில் இருப்பவன்
waman ḥawlahā
وَمَنْ حَوْلَهَا
and whoever (is) around it
இன்னும் அதை சுற்றி உள்ளவர்களும்
wasub'ḥāna
وَسُبْحَٰنَ
And glory be
மிகப் பரிசுத்தமானவன்
l-lahi
ٱللَّهِ
(to) Allah
அல்லாஹ்
rabbi
رَبِّ
(the) Lord
இறைவன்
l-ʿālamīna
ٱلْعَٰلَمِينَ
(of) the worlds
அகிலங்களின்

Transliteration:

Falammaa jaaa'ahaa noodiya am boorika man finnnnaari wa man hawlahaa wa Subhaanal laahi Rabbil 'aalameen (QS. an-Naml:8)

English Sahih International:

But when he came to it, he was called, "Blessed is whoever is at the fire and whoever is around it. And exalted is Allah, Lord of the worlds. (QS. An-Naml, Ayah ௮)

Abdul Hameed Baqavi:

அவர் அதன் சமீபமாக வந்த சமயத்தில் "நெருப்பில் இருப்பவர் (மலக்கின்) மீதும் அதன் சமீபமாக இருப்பவர் (மூஸா) மீதும் பெரும் பாக்கியமளிக்கப்பட்டுள்ளது என்(று சப்தமிட்டுக் கூறப்பெற்)றதுடன், உலகத்தார் அனைவரையும் படைத்து வளர்த்து பரிபக்குவப்படுத்தும் அல்லாஹ் மிக்க பரிசுத்தமானவன்" என்றும் கூறப்பட்டது. (ஸூரத்துந் நம்லி, வசனம் ௮)

Jan Trust Foundation

அவர் அதனிடம் வந்த போது| “நெருப்பில் இருப்பவர் மீதும், அதனைச் சூழ்ந்திருப்பவர் மீதும் பெரும் பாக்கியம் அளிக்கப் பெற்றுள்ளது; மேலும் அகிலங்களுக்கெல்லாம் இறைவனாகிய அல்லாஹ் மிகவும் பரிசுத்தமானவன்” என்று அழைக்கப்பட்டார்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர் அதனிடம் வந்தபோது, “நெருப்பில் (-ஒளியில்) இருப்பவன் பரிசுத்தமானவன். இன்னும் அதை சுற்றி உள்ளவர்களும் (பரிசுத்தமாக்கப்பட்டவர்கள்) என்று (நற்செய்தி கூறி) அழைக்கப்பட்டார். அகிலங்களின் இறைவன் அல்லாஹ் மிக்க பரிசுத்தமானவன்.