Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நம்லி வசனம் ௭

Qur'an Surah An-Naml Verse 7

ஸூரத்துந் நம்லி [௨௭]: ௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِذْ قَالَ مُوْسٰى لِاَهْلِهٖٓ اِنِّيْٓ اٰنَسْتُ نَارًاۗ سَاٰتِيْكُمْ مِّنْهَا بِخَبَرٍ اَوْ اٰتِيْكُمْ بِشِهَابٍ قَبَسٍ لَّعَلَّكُمْ تَصْطَلُوْنَ (النمل : ٢٧)

idh qāla
إِذْ قَالَ
When said
அந்த சமயத்தை நினைவு கூறினார்
mūsā
مُوسَىٰ
Musa
மூசா
li-ahlihi
لِأَهْلِهِۦٓ
to his family
தன்குடும்பத்தினருக்கு
innī
إِنِّىٓ
"Indeed I
நிச்சயமாக நான்
ānastu
ءَانَسْتُ
perceive
நான் பார்த்தேன்
nāran
نَارًا
a fire
நெருப்பை
saātīkum
سَـَٔاتِيكُم
I will bring you
உங்களுக்கு கொண்டு வருகிறேன்
min'hā
مِّنْهَا
from it
அதிலிருந்து
bikhabarin
بِخَبَرٍ
some information
ஒரு செய்தியை
aw
أَوْ
or
அல்லது
ātīkum
ءَاتِيكُم
I will bring you
உங்களுக்கு கொண்டு வருகிறேன்
bishihābin
بِشِهَابٍ
a torch
நெருப்பை
qabasin
قَبَسٍ
burning
எடுக்கப்பட்ட
laʿallakum taṣṭalūna
لَّعَلَّكُمْ تَصْطَلُونَ
so that you may warm yourselves"
நீங்கள் குளிர் காய்வதற்காக

Transliteration:

Iz qaala Moosaa li ahliheee inneee aanastu naaran saaateekum minhaa bikhabarin aw aateekum bishihaabin qabasil la'allakum tastaloon (QS. an-Naml:7)

English Sahih International:

[Mention] when Moses said to his family, "Indeed, I have perceived a fire. I will bring you from there information or will bring you a burning torch that you may warm yourselves." (QS. An-Naml, Ayah ௭)

Abdul Hameed Baqavi:

மூஸா (தூர் என்னும் மலையின் சமீபமாகச் சென்றபொழுது) தன் குடும்பத்தினரை நோக்கி "நிச்சயமாக நான் ஒரு நெருப்பைக் காண்கிறேன். (நீங்கள் இங்கு தாமதித்து இருங்கள்.) நான் சென்று (நம்முடைய வழியைப் பற்றி) யாதொரு விஷயத்தை அதன் மூலம் அறிந்து வருகின்றேன் அல்லது நீங்கள் குளிர் காய்வதற்கு ஓர் எரி கொள்ளியேனும் கொண்டு வருவேன்" என்று கூறி, (ஸூரத்துந் நம்லி, வசனம் ௭)

Jan Trust Foundation

மூஸா தம் குடும்பத்தாரை நோக்கி| “நிச்சயமாக நான் நெருப்பைக் காண்கிறேன்; உங்களுக்கு நான் அதிலிருந்து (நாம் செல்ல வேண்டிய வழி பற்றிய) செய்தியைக் கொண்டு வருகிறேன், அல்லது நீங்கள் குளிர்காயும் பொருட்டு (உங்களுக்கு அதிலிருந்து) நெருப்புக் கங்கைக் கொண்டு வருகிறேன்” என்று கூறியதை (நபியே!) நினைவு கூர்வீராக!

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அந்த சமயத்தை நினைவு கூறுவீராக! மூசா தன் குடும்பத்தினருக்கு கூறினார்: “நிச்சயமாக நான் நெருப்பைப் பார்த்தேன். அதிலிருந்து ஒரு செய்தியை அல்லது எடுக்கப்பட்ட (கொஞ்சம்) நெருப்பை நீங்கள் குளிர்காய்வதற்காக கொண்டு வருகிறேன்.