குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நம்லி வசனம் ௬௬
Qur'an Surah An-Naml Verse 66
ஸூரத்துந் நம்லி [௨௭]: ௬௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
بَلِ ادّٰرَكَ عِلْمُهُمْ فِى الْاٰخِرَةِۗ بَلْ هُمْ فِيْ شَكٍّ مِّنْهَاۗ بَلْ هُمْ مِّنْهَا عَمُوْنَ ࣖ (النمل : ٢٧)
- bali iddāraka
- بَلِ ٱدَّٰرَكَ
- Nay is arrested
- அல்லது மறைந்து விட்டதா?
- ʿil'muhum
- عِلْمُهُمْ
- their knowledge
- அவர்களது அறிவு
- fī l-ākhirati
- فِى ٱلْءَاخِرَةِۚ
- of the Hereafter?
- மறுமை விஷயத்தில்
- bal hum
- بَلْ هُمْ
- Nay they
- மாறாக/அவர்கள்
- fī shakkin
- فِى شَكٍّ
- (are) in doubt
- சந்தேகத்தில் இருக்கின்றனர்
- min'hā
- مِّنْهَاۖ
- about it
- அதில்
- bal
- بَلْ
- Nay
- மாறாக
- hum
- هُم
- they
- அவர்கள்
- min'hā
- مِّنْهَا
- about it
- அதில்
- ʿamūna
- عَمُونَ
- (are) blind
- குருடர்கள் ஆவர்
Transliteration:
Balid daaraka 'ilmuhum fil Aakhirah; bal hum fee shakkim minhaa bal hum minhaa 'amoon(QS. an-Naml:66)
English Sahih International:
Rather, their knowledge is arrested concerning the Hereafter. Rather, they are in doubt about it. Rather, they are, concerning it, blind. (QS. An-Naml, Ayah ௬௬)
Abdul Hameed Baqavi:
மறுமையைப் பற்றிய இவர்களுடைய ஞானமே முற்றிலும் சூனியமாகி விட்டது. (அவ்விஷயத்தில்) அவர்கள் பெரும் சந்தேகத்தில் தான் இருக்கின்றனர். அதுமட்டுமா? (அறிந்திருந்தும்) அவர்கள் குருடர்களாகி விட்டனர். (ஸூரத்துந் நம்லி, வசனம் ௬௬)
Jan Trust Foundation
ஆனால் மறுமையைப் பற்றிய அவர்களுடைய அறிவோ மிகக் கீழ்நிலையிலே உள்ளது; அவர்கள் அதில் (பின்னும்) சந்தேகத்திலேயே இருக்கின்றனர்; அது மட்டுமா? அதைப்பற்றி அவர்கள் குருடர்களாகவே இருக்கின்றனர்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அல்லது, அவர்களது அறிவு மறுமை விஷயத்தில் மறைந்து விட்டதா? (அவர்கள் தங்கள் அறிவால் மறுமையை புரிய முடியாமல் ஆகிவிட்டனரா?) மாறாக, அவர்கள் அதில் (-மறுமை விஷயத்தில்) சந்தேகத்தில் இருக்கின்றனர். மாறாக, அவர்கள் அதில் (-மறுமை விஷயத்தில்) குருடர்கள் ஆவர். (குருடனால் ஒரு பொருளை பார்க்க முடியாதது போல் அவர்களால் மறுமையை அறிந்துகொள்ள முடியாது.)