Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நம்லி வசனம் ௬௩

Qur'an Surah An-Naml Verse 63

ஸூரத்துந் நம்லி [௨௭]: ௬௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اَمَّنْ يَّهْدِيْكُمْ فِيْ ظُلُمٰتِ الْبَرِّ وَالْبَحْرِ وَمَنْ يُّرْسِلُ الرِّيٰحَ بُشْرًا ۢ بَيْنَ يَدَيْ رَحْمَتِهٖۗ ءَاِلٰهٌ مَّعَ اللّٰهِ ۗتَعٰلَى اللّٰهُ عَمَّا يُشْرِكُوْنَ (النمل : ٢٧)

amman
أَمَّن
Or Who
?/எவன்
yahdīkum
يَهْدِيكُمْ
guides you
உங்களுக்கு வழிகாட்டுகிறான்
fī ẓulumāti
فِى ظُلُمَٰتِ
in (the) darkness[es]
இருள்களில்
l-bari
ٱلْبَرِّ
(of) the land
தரையின்
wal-baḥri
وَٱلْبَحْرِ
and the sea
மற்றும் கடலின்
waman
وَمَن
and Who
இன்னும் எவன்
yur'silu
يُرْسِلُ
sends
அனுப்புகிறானோ
l-riyāḥa
ٱلرِّيَٰحَ
the winds
காற்றுகளை
bush'ran
بُشْرًۢا
(as) glad tidings
சுபச் செய்தியாக
bayna yaday
بَيْنَ يَدَىْ
before before
முன்னர்
raḥmatihi
رَحْمَتِهِۦٓۗ
His Mercy?
தனது அருளுக்கு
a-ilāhun
أَءِلَٰهٌ
Is there any god
(வணங்கப்படும் வேறு) ஒரு கடவுளா?!
maʿa l-lahi
مَّعَ ٱللَّهِۚ
with Allah?
அல்லாஹ்வுடன்
taʿālā
تَعَٰلَى
High is
மிக்க உயர்ந்தவன்
l-lahu
ٱللَّهُ
Allah
அல்லாஹ்
ʿammā yush'rikūna
عَمَّا يُشْرِكُونَ
above what they associate (with Him)
அவர்கள் இணைவைப்பவற்றை விட்டு

Transliteration:

Ammany-yahdeekum fee zulumaatil barri wal bahri wa many yursilu riyaaha bushram baina yadai rahmatih; 'a-ilaahum ma'al laah; Ta'aalal laahu 'ammaa yushrikoon (QS. an-Naml:63)

English Sahih International:

Is He [not best] who guides you through the darknesses of the land and sea and who sends the winds as good tidings before His mercy? Is there a deity with Allah? High is Allah above whatever they associate with Him. (QS. An-Naml, Ayah ௬௩)

Abdul Hameed Baqavi:

கடலிலோ அல்லது கரையிலோ இருள்களில் (சிக்கிய) உங்களுக்கு வழி காண்பிப்பவன் யார்? அவனுடைய அருள் மழைக்கு முன்னதாக (குளிர்ந்த) காற்றை நற்செய்தியாக அனுப்பி வைப்பவன் யார்? அல்லாஹ்வுடன் வணக்கத்திற்குரிய வேறொரு இறைவன் இருக்கின்றானா? (இல்லவே இல்லை.) அவர்கள் இணை வைப்பதை விட்டு அவன் மிக்க உயர்ந்தவன். (ஸூரத்துந் நம்லி, வசனம் ௬௩)

Jan Trust Foundation

கரையிலும் கடலிலுமுள்ள இருள்களில் உங்களை நேரான வழியில் செலுத்துபவன் யார்? மேலும், தன்னுடைய “ரஹ்மத்” என்னும் அருள் மாரிக்கு முன்னே நன்மாராயம் (கூறுவன) ஆக காற்றுகளை அனுப்பி வைப்பவன் யார்? அல்லாஹ்வுடன் (வேறு) நாயன் இருக்கின்றானா? - அவர்கள் இணை வைப்பவற்றைவிட அல்லாஹ் மிகவும் உயர்வானவன்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(அல்லது) தரை மற்றும் கடலின் இருள்களில் உங்களுக்கு எவன் வழிகாட்டுகிறானோ, இன்னும் தனது அருளுக்கு முன்னர் காற்றுகளை சுபச்செய்தியாக எவன் அனுப்புகிறானோ (அவனை வணங்குவது சிறந்ததா? அல்லது இவற்றில் எதையும் செய்ய சக்தி இல்லாதவற்றை வணங்குவது சிறந்ததா?) அல்லாஹ்வுடன் (வணங்கப்படும் வேறு) ஒரு கடவுளா?! அவர்கள் இணைவைப்பவற்றை விட்டு அல்லாஹ் மிக்க உயர்ந்தவன்.