குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நம்லி வசனம் ௬௧
Qur'an Surah An-Naml Verse 61
ஸூரத்துந் நம்லி [௨௭]: ௬௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اَمَّنْ جَعَلَ الْاَرْضَ قَرَارًا وَّجَعَلَ خِلٰلَهَآ اَنْهٰرًا وَّجَعَلَ لَهَا رَوَاسِيَ وَجَعَلَ بَيْنَ الْبَحْرَيْنِ حَاجِزًاۗ ءَاِلٰهٌ مَّعَ اللّٰهِ ۗبَلْ اَكْثَرُهُمْ لَا يَعْلَمُوْنَ ۗ (النمل : ٢٧)
- amman
- أَمَّن
- Or Who
- ?/எவன்
- jaʿala
- جَعَلَ
- made
- ஆக்கினான்
- l-arḍa
- ٱلْأَرْضَ
- the earth
- பூமியை
- qarāran
- قَرَارًا
- a firm abode
- நிலையானதாக
- wajaʿala
- وَجَعَلَ
- and made
- இன்னும் ஏற்படுத்தினான்
- khilālahā
- خِلَٰلَهَآ
- (in) its midst
- அதற்கிடையில்
- anhāran
- أَنْهَٰرًا
- rivers
- ஆறுகளை
- wajaʿala
- وَجَعَلَ
- and made
- இன்னும் படைத்தான்
- lahā
- لَهَا
- for it
- அதற்காக
- rawāsiya
- رَوَٰسِىَ
- firm mountains
- பெரும் மலைகளை
- wajaʿala
- وَجَعَلَ
- and made
- இன்னும் அமைத்தான்
- bayna
- بَيْنَ
- between
- இடையில்
- l-baḥrayni
- ٱلْبَحْرَيْنِ
- the two seas
- இரு கடல்களுக்கு
- ḥājizan
- حَاجِزًاۗ
- a barrier?
- தடுப்பை
- a-ilāhun
- أَءِلَٰهٌ
- Is there any god
- (வணங்கப்படும் வேறு) ஒரு கடவுளா?!
- maʿa l-lahi
- مَّعَ ٱللَّهِۚ
- with Allah?
- அல்லாஹ்வுடன்
- bal aktharuhum
- بَلْ أَكْثَرُهُمْ
- Nay most of them
- மாறாக/அதிகமானவர்கள்/அவர்களில்
- lā yaʿlamūna
- لَا يَعْلَمُونَ
- (do) not know
- அறியமாட்டார்கள்
Transliteration:
Ammann ja'alal arda qaraaranw wa ja'ala khilaalahaaa anhaaranw wa ja'ala lahaa rawaasiya wa ja'ala bainal bahraini haajizaa; 'a-ilaahumma'allah; bal aksaruhum la ya'lamoon(QS. an-Naml:61)
English Sahih International:
Is He [not best] who made the earth a stable ground and placed within it rivers and made for it firmly set mountains and placed between the two seas a barrier? Is there a deity with Allah? [No], but most of them do not know. (QS. An-Naml, Ayah ௬௧)
Abdul Hameed Baqavi:
பூமியை ஓர் உறுதியான தங்குமிடமாக அமைத்து, அதன் மத்தியில் ஆறுகளையும் மலைகளையும் அமைத்தவன் யார்? இரு கடல்களுக்கிடையில் தடுப்பு ஏற்படுத்தியவன் யார்? (இவைகளைச் செய்த) அல்லாஹ்வுடன் வணக்கத்திற்குரிய வேறொரு இறைவன் இருக்கின்றானா? (இல்லவே இல்லை.) அவர்களில் பெரும்பாலானவர்கள் (இதனை) அறிந்துகொள்வதில்லை. (ஸூரத்துந் நம்லி, வசனம் ௬௧)
Jan Trust Foundation
இந்தப் பூமியை வசிக்கத் தக்க இடமாக ஆக்கியவனும், அதனிடையே ஆறுகளை உண்டாக்கியவனும்; அதற்காக (அதன் மீது அசையா) மலைகளை உண்டாக்கியவனும் இரு கடல்களுக்கிடையே தடுப்பை உண்டாக்கியவனும் யார்? அல்லாஹ்வுடன் (வேறு) நாயன் இருக்கின்றானா? இல்லை! (எனினும்) அவர்களில் பெரும்பாலோர் அறியாதவர்களாக இருக்கின்றனர்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
எவன் பூமியை நிலையானதாக ஆக்கி, அதற்கிடையில் ஆறுகளை ஏற்படுத்தி, அதற்காக (-அது குலுங்காமல் இருப்பதற்காக) பெரும் மலைகளைப் படைத்து, இரு கடல்களுக்கு இடையில் தடுப்பை அமைத்தானோ (அவனை வணங்குவது சிறந்ததா? அல்லது இவற்றில் எதையும் செய்ய சக்தி இல்லாதவற்றை வணங்குவது சிறந்ததா?) அல்லாஹ்வுடன் (வணங்கப்படும் வேறு) ஒரு கடவுளா?! மாறாக, அவர்களில் அதிகமானவர்கள் (அல்லாஹ்வின் மகத்துவத்தை) அறியமாட்டார்கள்.