Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நம்லி வசனம் ௫௯

Qur'an Surah An-Naml Verse 59

ஸூரத்துந் நம்லி [௨௭]: ௫௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قُلِ الْحَمْدُ لِلّٰهِ وَسَلٰمٌ عَلٰى عِبَادِهِ الَّذِيْنَ اصْطَفٰىۗ ءٰۤاللّٰهُ خَيْرٌ اَمَّا يُشْرِكُوْنَ ۔ (النمل : ٢٧)

quli
قُلِ
Say
கூறுவீராக
l-ḥamdu
ٱلْحَمْدُ
"All praise (be)
எல்லாப் புகழும்
lillahi
لِلَّهِ
to Allah
அல்லாஹ்விற்கே
wasalāmun
وَسَلَٰمٌ
and peace (be)
இன்னும் ஸலாம்
ʿalā ʿibādihi
عَلَىٰ عِبَادِهِ
upon His slaves
அவனுடைய அடியார்களுக்கு
alladhīna iṣ'ṭafā
ٱلَّذِينَ ٱصْطَفَىٰٓۗ
those whom He has chosen
எவர்கள்/அவன் தேர்ந்தெடுத்தான்
āllahu
ءَآللَّهُ
Is Allah
?/அல்லாஹ்
khayrun
خَيْرٌ
better
சிறந்தவையா
ammā yush'rikūna
أَمَّا يُشْرِكُونَ
or what they associate (with Him)?"
அல்லது அவர்கள் இணைவைப்பவையா?

Transliteration:

Qulil hamdu lillaahi wa salaamun 'alaa 'ibaadihil lazeenas tafaa; aaallaahu khairun ammmaa yushrikoon (QS. an-Naml:59)

English Sahih International:

Say, [O Muhammad], "Praise be to Allah, and peace upon His servants whom He has chosen. Is Allah better or what they associate with Him?" (QS. An-Naml, Ayah ௫௯)

Abdul Hameed Baqavi:

ஆகவே, (நபியே!) புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக் குரியனவே. தன்னுடைய அடியார்களில் அவன் தேர்ந்தெடுத்துக் கொண்டவர்களின் மீது "ஈடேற்றம் உண்டாவதாக" என்றும் "அல்லாஹ் மேலானவனா அல்லது அவர்கள் அவனுக்கு இணையாக்குகின்றவைகள் மேலானவைகளா?" என்று கேளுங்கள். (ஸூரத்துந் நம்லி, வசனம் ௫௯)

Jan Trust Foundation

(நபியே!) நீர் கூறுவீராக| “எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே உரியது; இன்னும் அவன் தேர்ந்தெடுத்துக் கொண்ட அவனுடைய அடியார்கள் மீது ஸலாம் உண்டாவதாக! அல்லாஹ் மேலானவனா? அல்லது அவர்கள் (அவனுக்கு) இணையாக்குபவை (மேலானவை)யா?”

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(நபியே!) கூறுவீராக: எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே. அவன் தேர்ந்தெடுத்த அவனுடைய அடியார்களுக்கு (-உமது தோழர்களுக்கு) ஸலாம் - ஈடேற்றம்- உண்டாகுக! அல்லாஹ் சிறந்தவனா? அல்லது அவர்கள் இணைவைப்பவை (சிறந்தவை)யா? (அல்லாஹ்வை வணங்குவது சிறந்ததா? அல்லது சிலைகளையும் படைக்கப்பட்ட படைப்பினங்களையும் வணங்குவது சிறந்ததா?)