Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நம்லி வசனம் ௫௭

Qur'an Surah An-Naml Verse 57

ஸூரத்துந் நம்லி [௨௭]: ௫௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَاَنْجَيْنٰهُ وَاَهْلَهٗٓ اِلَّا امْرَاَتَهٗ قَدَّرْنٰهَا مِنَ الْغٰبِرِيْنَ (النمل : ٢٧)

fa-anjaynāhu
فَأَنجَيْنَٰهُ
So We saved him
எனவே, நாம் அவரை(யும்) பாதுகாத்தோம்
wa-ahlahu
وَأَهْلَهُۥٓ
and his family
அவருடைய குடும்பத்தையும்
illā
إِلَّا
except
தவிர
im'ra-atahu
ٱمْرَأَتَهُۥ
his wife;
அவருடைய மனைவியை
qaddarnāhā
قَدَّرْنَٰهَا
We destined her
அவளை முடிவு செய்தோம்
mina l-ghābirīna
مِنَ ٱلْغَٰبِرِينَ
(to be) of those who remained behind
மிஞ்சியவர்களில்

Transliteration:

Fa anjainaahu wa ahlahooo illam ra atahoo qaddarnaahaa minal ghaabireen (QS. an-Naml:57)

English Sahih International:

So We saved him and his family, except for his wife; We destined her to be of those who remained behind. (QS. An-Naml, Ayah ௫௭)

Abdul Hameed Baqavi:

ஆகவே, அவரையும் அவருடைய குடும்பத்தாரையும் நாம் பாதுகாத்துக் கொண்டோம். எனினும், அவருடைய மனைவியைத் தவிர. ஏனென்றால், அவள் (அந்தப் பாவிகளுடன்) தங்கிவிட வேண்டுமென்று (ஏற்கனவே) தீர்மானித்து விட்டோம். (ஸூரத்துந் நம்லி, வசனம் ௫௭)

Jan Trust Foundation

ஆனால், நாம் அவரையும் அவருடைய குடும்பத்தாரையும் பாதுகாத்துக் கொண்டோம்; அவருடைய மனைவியைத் தவிர (ஈமான் கொள்ளாமல்) பின்தங்கி (அழிந்து) விட்டவர்களில் ஒருத்தியாக அவளை தீர்மானித்தோம்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நாம் அவரையும் அவருடைய குடும்பத்தையும் -அவருடைய பிள்ளைகள், மனைவியைத் தவிர-பாதுகாத்தோம். அவளை நாம், (ஊரில்) மிஞ்சியவர்களில் (இருக்க வைத்து தண்டனையில் அழிக்கப்பட) முடிவு செய்தோம்.