குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நம்லி வசனம் ௫௨
Qur'an Surah An-Naml Verse 52
ஸூரத்துந் நம்லி [௨௭]: ௫௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
فَتِلْكَ بُيُوْتُهُمْ خَاوِيَةً ۢبِمَا ظَلَمُوْاۗ اِنَّ فِيْ ذٰلِكَ لَاٰيَةً لِّقَوْمٍ يَّعْلَمُوْنَ (النمل : ٢٧)
- fatil'ka
- فَتِلْكَ
- So these
- இதோ
- buyūtuhum
- بُيُوتُهُمْ
- (are) their houses
- அவர்களது வீடுகள்
- khāwiyatan
- خَاوِيَةًۢ
- ruined
- வெறுமையாக இருக்கின்றன
- bimā ẓalamū
- بِمَا ظَلَمُوٓا۟ۗ
- because they wronged
- அவர்கள் தீமை செய்ததால்
- inna
- إِنَّ
- Indeed
- நிச்சயமாக
- fī dhālika
- فِى ذَٰلِكَ
- in that
- இதில் இருக்கிறது
- laāyatan
- لَءَايَةً
- surely is a sign
- ஓர் அத்தாட்சி
- liqawmin
- لِّقَوْمٍ
- for a people
- மக்களுக்கு
- yaʿlamūna
- يَعْلَمُونَ
- who know
- அறிகின்ற
Transliteration:
Fatilka buyootuhum khaa wiyatam bimaa zalamoo; inna fee zaalika la Aayatal liqaw miny-ya'lamoon(QS. an-Naml:52)
English Sahih International:
So those are their houses, desolate because of the wrong they had done. Indeed in that is a sign for people who know. (QS. An-Naml, Ayah ௫௨)
Abdul Hameed Baqavi:
அவர்கள் செய்து கொண்டிருந்த அநியாயங்களின் காரணமாக (அழிந்து போன) அவர்களுடைய வீடுகள் இதோ பாழடைந்து கிடக்கின்றன. அறியக்கூடிய மக்களுக்கு நிச்சயமாக இதில் ஒரு (நல்ல) படிப்பினை இருக்கின்றது. (ஸூரத்துந் நம்லி, வசனம் ௫௨)
Jan Trust Foundation
ஆகவே, அவர்கள் அநியாயம் செய்து வந்த காரணத்தால் (அதோ அழிந்து போன) அவர்களுடைய வீடுகள் அதோ பாழடைந்து கிடக்கின்றன; நிச்சயமாக இதிலே, அறியக் கூடிய சமூகத்தாருக்கு அத்தாட்சி இருக்கிறது.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
இதோ அவர்கள் தீமை செய்ததால் அவர்க(ள் அழிக்கப்பட்ட பின்னர் அவர்க)ளது வீடுகள் வெறுமையாக இருக்கின்றன. அறிகின்ற மக்களுக்கு நிச்சயமாக இதில் ஓர் அத்தாட்சி இருக்கிறது.