குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நம்லி வசனம் ௪௭
Qur'an Surah An-Naml Verse 47
ஸூரத்துந் நம்லி [௨௭]: ௪௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
قَالُوا اطَّيَّرْنَا بِكَ وَبِمَنْ مَّعَكَۗ قَالَ طٰۤىِٕرُكُمْ عِنْدَ اللّٰهِ بَلْ اَنْتُمْ قَوْمٌ تُفْتَنُوْنَ (النمل : ٢٧)
- qālū
- قَالُوا۟
- They said
- அவர்கள் கூறினர்
- iṭṭayyarnā
- ٱطَّيَّرْنَا
- "We consider you a bad omen
- நாங்கள் துற்சகுணம் அடைந்தோம்
- bika
- بِكَ
- "We consider you a bad omen
- உம்மாலும்
- wabiman maʿaka
- وَبِمَن مَّعَكَۚ
- and those with you"
- இன்னும் உம்முடன் உள்ளவர்களாலும்
- qāla
- قَالَ
- He said
- அவர் கூறினார்
- ṭāirukum
- طَٰٓئِرُكُمْ
- "Your bad omen
- மாறாக உங்கள் துன்பத்தின் காரணம்
- ʿinda l-lahi
- عِندَ ٱللَّهِۖ
- (is) with Allah
- அல்லாஹ்விடம்தான் இருக்கிறது
- bal
- بَلْ
- Nay
- மாறாக
- antum
- أَنتُمْ
- you
- நீங்கள்
- qawmun
- قَوْمٌ
- (are) a people
- மக்கள்
- tuf'tanūna
- تُفْتَنُونَ
- being tested"
- சோதிக்கப்படுகின்ற
Transliteration:
Qaalut taiyarnaa bika wa bimam ma'ak; qaala taaa'irukum 'indal laahi bal antum qawmun tuftanoon(QS. an-Naml:47)
English Sahih International:
They said, "We consider you a bad omen, you and those with you." He said, "Your omen [i.e., fate] is with Allah. Rather, you are a people being tested." (QS. An-Naml, Ayah ௪௭)
Abdul Hameed Baqavi:
அதற்கவர்கள் "உங்களையும் உங்களுடன் இருப்பவர் களையும் நாங்கள் அபசகுணமாக எண்ணுகிறோம்" என்று கூறினார்கள். அதற்கவர் "அல்லாஹ்விடமிருந்துதான் உங்கள் துர்ச்சகுனம் வந்தது. நீங்கள் (அதிசீக்கிரத்தில் அல்லாஹ்வினுடைய) சோதனைக்குள்ளாக வேண்டிய மக்கள்" என்று கூறினார். (ஸூரத்துந் நம்லி, வசனம் ௪௭)
Jan Trust Foundation
அதற்கவர்கள்| “உம்மையும், உம்முடன் இருப்பவர்களையும் நாங்கள் துர்ச்சகுணமாகக் காண்கிறோம்” என்று சொன்னார்கள்; அவர் கூறினார்| “உங்கள் துர்ச்சகுணம் அல்லாஹ்விடம் இருக்கிறது; எனினும், நீஙகள் சோதனைக்குள்ளாக்கப்படும் சமூகத்தாராக இருக்கிறீர்கள்.”
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவர்கள் கூறினர்: “உம்மாலும் உம்முடன் உள்ளவர்களாலும் நாங்கள் துற்சகுணம் அடைந்தோம்.” அவர் கூறினார்: (மாறாக) உங்கள் துன்பத்தின் காரணம் அல்லாஹ்விடம்தான் இருக்கிறது. (உங்கள் செயலுக்கு ஏற்ப அவன் உங்களிடம் நடந்து கொள்கிறான்.) மாறாக, நீங்கள் சோதிக்கப்படுகின்ற மக்கள்.