Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நம்லி வசனம் ௪௩

Qur'an Surah An-Naml Verse 43

ஸூரத்துந் நம்லி [௨௭]: ௪௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَصَدَّهَا مَا كَانَتْ تَّعْبُدُ مِنْ دُوْنِ اللّٰهِ ۗاِنَّهَا كَانَتْ مِنْ قَوْمٍ كٰفِرِيْنَ (النمل : ٢٧)

waṣaddahā
وَصَدَّهَا
And has averted her
அவளைத் தடுத்து விட்டது
مَا
what
எது
kānat
كَانَت
she used (to)
இருந்தாள்
taʿbudu
تَّعْبُدُ
worship
அவள் வணங்கிக் கொண்டு
min dūni l-lahi
مِن دُونِ ٱللَّهِۖ
besides besides Allah
அல்லாஹ்வையன்றி
innahā
إِنَّهَا
Indeed, she
நிச்சயமாக, அவள்
kānat
كَانَتْ
was
இருந்தாள்
min qawmin
مِن قَوْمٍ
from a people
மக்களில்
kāfirīna
كَٰفِرِينَ
who disbelieve
நிராகரிக்கின்ற

Transliteration:

Wa saddahaa maa kaanat ta'budu min doonil laahi innahaa kaanat min qawmin kaafireen (QS. an-Naml:43)

English Sahih International:

And that which she was worshipping other than Allah had averted her [from submission to Him]. Indeed, she was from a disbelieving people." (QS. An-Naml, Ayah ௪௩)

Abdul Hameed Baqavi:

இதுவரையில் (நம்பிக்கை கொள்ளாது) அவளைத் தடுத்துக் கொண்டிருந்ததெல்லாம் அல்லாஹ்வையன்றி அவள் வணங்கிக் கொண்டிருந்த (பொய்யான) தெய்வங்கள் தாம். ஏனென்றால், அவள் அல்லாஹ்வை நிராகரிக்கும் மக்களில் உள்ளவளாக இருந்தாள். (ஸூரத்துந் நம்லி, வசனம் ௪௩)

Jan Trust Foundation

அல்லாஹ்வையன்றி (மற்றவர்களை) அவள் வணங்கிக் கொண்டிருந்ததுதான் அவளைத் தடுத்துக் கொண்டிருந்தது நிச்சயமாக அவள் காஃபிர்களின் சமூகத்திலுள்ளவளாக இருந்தாள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவள் அல்லாஹ்வை அன்றி (சூரியனை) வணங்கிக்கொண்டு இருந்தது (அவள் அல்லாஹ்வை வணங்குவதை விட்டும்) அவளைத் தடுத்து விட்டது. நிச்சயமாக, அவள் நிராகரிக்கின்ற மக்களில் இருந்தாள்.