Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நம்லி வசனம் ௪௨

Qur'an Surah An-Naml Verse 42

ஸூரத்துந் நம்லி [௨௭]: ௪௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَلَمَّا جَاۤءَتْ قِيْلَ اَهٰكَذَا عَرْشُكِۗ قَالَتْ كَاَنَّهٗ هُوَۚ وَاُوْتِيْنَا الْعِلْمَ مِنْ قَبْلِهَا وَكُنَّا مُسْلِمِيْنَ (النمل : ٢٧)

falammā jāat
فَلَمَّا جَآءَتْ
So when she came
அவள் வந்தபோது,
qīla
قِيلَ
it was said
கேட்கப்பட்டது
ahākadhā
أَهَٰكَذَا
"Is like this
இது போன்றா
ʿarshuki
عَرْشُكِۖ
your throne?"
உனது அரச கட்டில்
qālat
قَالَتْ
She said
அவள் கூறினாள்
ka-annahu
كَأَنَّهُۥ
"It is like
அதைப் போன்றுதான்
huwa
هُوَۚ
it"
இது
waūtīnā
وَأُوتِينَا
"And we were given
நாம் கொடுக்கப்பட்டோம்
l-ʿil'ma
ٱلْعِلْمَ
the knowledge
அறிவு
min qablihā
مِن قَبْلِهَا
before her before her
இவளுக்கு முன்னரே
wakunnā
وَكُنَّا
and we have been
இன்னும் இருக்கிறோம்
mus'limīna
مُسْلِمِينَ
Muslims"
முஸ்லிம்களாக

Transliteration:

Falammaa jaaa'at qeela ahaakaza 'arshuki qaalat kaanna hoo; wa ooteenal 'ilma min qablihaa wa kunnaa muslimeen (QS. an-Naml:42)

English Sahih International:

So when she arrived, it was said [to her], "Is your throne like this?" She said, "[It is] as though it was it." [Solomon said], "And we were given knowledge before her, and we have been Muslims [in submission to Allah]. (QS. An-Naml, Ayah ௪௨)

Abdul Hameed Baqavi:

அவள் வந்து சேரவே (ஸுலைமான் அவளை நோக்கி) "உன்னுடைய சிம்மாசனம் இவ்வாறு தானா (இருக்கும்)?" என்று கேட்டதற்கு அவள் "இது முற்றிலும் அதைப் போலவே இருக்கின்றது. இதற்கு முன்னதாகவே (உங்கள் மேன்மையைப் பற்றிய) விஷயம் எங்களுக்கு அறிவிக்கப்பட்டு விட்டது. நாங்கள் முற்றிலும் கட்டுப்பட்டே வந்திருக்கிறோம்" என்றாள். (ஸூரத்துந் நம்லி, வசனம் ௪௨)

Jan Trust Foundation

ஆகவே, அவள் வந்த பொழுது, “உன்னுடைய அரியாசனம் இது போன்றதா?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவள்| “நிச்சயமாக இது அதைப் போலவே இருக்கிறது” என்று கூறினாள்; இந்தப் பெண்மணிக்கு முன்பே நாங்கள் ஞானம் கொடுக்கப்பட்டு விட்டோம், நாங்கள் முஸ்லிம்களாகவும் இருக்கிறோம் (என்று ஸுலைமான் கூறினார்).

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவள் வந்தபோது, “இது போன்றா உனது அரச கட்டில்?” என்று கேட்கப்பட்டது. அவள் கூறினாள்: “இது அதைப் போன்றுதான்.” (பின்னர் சுலைமான் கூறினார்:) இவளுக்கு முன்னரே நாம் (அல்லாஹ்வைப் பற்றியும் அவனுடைய ஆற்றலைப் பற்றியும்) அறிவு கொடுக்கப்பட்டோம். இன்னும், முஸ்லிம்களாக இருக்கிறோம்.