Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நம்லி வசனம் ௪௧

Qur'an Surah An-Naml Verse 41

ஸூரத்துந் நம்லி [௨௭]: ௪௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قَالَ نَكِّرُوْا لَهَا عَرْشَهَا نَنْظُرْ اَتَهْتَدِيْٓ اَمْ تَكُوْنُ مِنَ الَّذِيْنَ لَا يَهْتَدُوْنَ (النمل : ٢٧)

qāla
قَالَ
He said
அவர் கூறினார்
nakkirū
نَكِّرُوا۟
"Disguise
நீங்கள் மாற்றி விடுங்கள்
lahā
لَهَا
for her
அவளுக்கு
ʿarshahā
عَرْشَهَا
her throne
அவளுடைய அரச கட்டிலை
nanẓur
نَنظُرْ
we will see
நாம் பார்ப்போம்
atahtadī
أَتَهْتَدِىٓ
whether she will be guided
அவள் அறிந்து கொள்கிறாளா?
am
أَمْ
or
அல்லது
takūnu
تَكُونُ
will be
அவள் ஆகிவிடுகிறாளா?
mina alladhīna lā yahtadūna
مِنَ ٱلَّذِينَ لَا يَهْتَدُونَ
of those who are not guided" are not guided"
அறியாதவர்களில்

Transliteration:

Qaala nakkiroo lahaa 'arshahaa nanzur atahtadeee am takoonu minal lazeena laa yahtadoon (QS. an-Naml:41)

English Sahih International:

He said, "Disguise for her her throne; we will see whether she will be guided [to truth] or will be of those who is not guided." (QS. An-Naml, Ayah ௪௧)

Abdul Hameed Baqavi:

"அவளுடைய சிம்மாசனத்தை மாற்றி (அமைத்து) விடுங்கள். அவள் அதனை(த் தன்னுடையதுதான் என்று) அறிந்து கொள்கிறாளா அல்லது அறிந்துகொள்ள முடியாதவளாகி விடுகின்றாளா?" என்று பார்ப்போமென்று கூறினார். (ஸூரத்துந் நம்லி, வசனம் ௪௧)

Jan Trust Foundation

(இன்னும் அவர்) கூறினார்| “(அவள் கண்டு அறிந்து கொள்ள முடியாதபடி) அவளுடைய அரியாசன(த்தின் கோல)த்தை மாற்றி விடுங்கள்; அவள் அதை அறிந்து கொள்கிறாளா, அல்லது அறிந்து கொள்ள முடியாதவர்களில் ஒருத்தியாக இருக்கிறாளா என்பதை நாம் கவனிப்போம்.”

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர் கூறினார்: நீங்கள் அவளுக்கு அவளுடைய அரச கட்டிலை மாற்றி விடுங்கள். நாம் பார்ப்போம், “அவள் அறிந்து கொள்கிறாளா? அல்லது அவள் அறியாதவர்களில் ஆகிவிடுகிறாளா?” என்று.