Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நம்லி வசனம் ௩௮

Qur'an Surah An-Naml Verse 38

ஸூரத்துந் நம்லி [௨௭]: ௩௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قَالَ يٰٓاَيُّهَا الْمَلَؤُا اَيُّكُمْ يَأْتِيْنِيْ بِعَرْشِهَا قَبْلَ اَنْ يَّأْتُوْنِيْ مُسْلِمِيْنَ (النمل : ٢٧)

qāla
قَالَ
He said
அவர் கூறினார்
yāayyuhā l-mala-u
يَٰٓأَيُّهَا ٱلْمَلَؤُا۟
"O chiefs!
பிரமுகர்களே!
ayyukum
أَيُّكُمْ
Which of you
உங்களில் யார்
yatīnī
يَأْتِينِى
will bring me
என்னிடம் கொண்டு வருவார்
biʿarshihā
بِعَرْشِهَا
her throne
அவளுடைய அரச கட்டிலை
qabla
قَبْلَ
before
முன்னர்
an yatūnī
أَن يَأْتُونِى
that they come to me
அவர்கள் என்னிடம் வருவதற்கு
mus'limīna
مُسْلِمِينَ
(in) submission?"
பணிந்தவர்களாக

Transliteration:

Qaala yaaa aiyuhal mala'u aiyukum yaateenee bi'arshihaa qabla ai yaatoonee muslimeen (QS. an-Naml:38)

English Sahih International:

[Solomon] said, "O assembly [of jinn], which of you will bring me her throne before they come to me in submission?" (QS. An-Naml, Ayah ௩௮)

Abdul Hameed Baqavi:

(ஸுலைமான் தன் மந்திரிகளை நோக்கி) "சன்றோர்களே! அவர்கள் கட்டுப்பட்டவர்களாக என்னிடம் வந்து சேருவதற்கு முன்னதாகவே அவளுடைய சிம்மாசனத்தை என்னிடம் கொண்டு வருபவர் உங்களில் யார்?" என்று கேட்டார். (ஸூரத்துந் நம்லி, வசனம் ௩௮)

Jan Trust Foundation

“பிரமுகர்களே! அவர்கள் என்னிடம் வழிபட்டவர்களாக வருமுன், உங்களில் யார் அவளுடைய அரியாசனத்தை என்னிடம் கொண்டுவருபவர்?” என்று (ஸுலைமான் அவர்களிடம்) கேட்டார்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர் (தன் அவையோரிடம்) கூறினார்: “பிரமுகர்களே! உங்களில் யார் அவளுடைய அரச கட்டிலை -அவர்கள் என்னிடம் பணிந்தவர்களாக வருவதற்கு முன்னர் -கொண்டு வருவார்.” (அல்லாஹ் தனக்கு தந்துள்ள அற்புதத்தை வெளிப்படுத்துவதற்காக இவ்வாறு சுலைமான் விரும்பினார்.)