Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நம்லி வசனம் ௩௭

Qur'an Surah An-Naml Verse 37

ஸூரத்துந் நம்லி [௨௭]: ௩௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِرْجِعْ اِلَيْهِمْ فَلَنَأْتِيَنَّهُمْ بِجُنُوْدٍ لَّا قِبَلَ لَهُمْ بِهَا وَلَنُخْرِجَنَّهُمْ مِّنْهَآ اَذِلَّةً وَّهُمْ صَاغِرُوْنَ (النمل : ٢٧)

ir'jiʿ
ٱرْجِعْ
Return
நீ திரும்பிப் போ!
ilayhim
إِلَيْهِمْ
to them
அவர்களிடம்
falanatiyannahum
فَلَنَأْتِيَنَّهُم
surely we will come to them
நாம் அவர்களிடம் கொண்டு வருவோம்
bijunūdin
بِجُنُودٍ
with hosts
இராணுவங்களை
lā qibala
لَّا قِبَلَ
not (is) resistance
அறவே வலிமை இருக்காது
lahum
لَهُم
for them
அவர்களுக்கு
bihā
بِهَا
of it
அவர்களை எதிர்க்க
walanukh'rijannahum
وَلَنُخْرِجَنَّهُم
and surely we will drive them out
நிச்சயமாக அவர்களை நாம் வெளியேற்றுவோம்
min'hā
مِّنْهَآ
from there
அதிலிருந்து
adhillatan
أَذِلَّةً
(in) humiliation
இழிவானவர்களாக
wahum
وَهُمْ
and they
அவர்கள்
ṣāghirūna
صَٰغِرُونَ
(will be) abased"
சிறுமைப்படுவார்கள்

Transliteration:

Irji' ilaihim falanaatiyan nahum bijunoodil laa qibala lahum bihaa wa lanukhri jannahum minhaaa azillatanw wa hum saaghiroon (QS. an-Naml:37)

English Sahih International:

Return to them, for we will surely come to them with soldiers that they will be powerless to encounter, and we will surely expel them therefrom in humiliation, and they will be debased." (QS. An-Naml, Ayah ௩௭)

Abdul Hameed Baqavi:

நீங்கள் அவர்களிடம் திரும்பச் செல்லுங்கள். எவராலும் எதிர்க்க முடியாததொரு ராணுவத்துடன் நிச்சயமாக நாங்கள் அவர்களிடம் வருவோம். அவர்களை சிறுமைப்பட்டவர்களாக அவ்வூரிலிருந்து துரத்தி விடுவோம்" என்று (கூறி அனுப்பிவிட்டு,) (ஸூரத்துந் நம்லி, வசனம் ௩௭)

Jan Trust Foundation

“அவர்களிடமே திரும்பிச் செல்க; நிச்சயமாக நாம் அவர்களால் எதிர்க்க முடியாத (பலமுள்ள) ஒரு பெரும் படையைக் கொண்டு அவர்களிடம் வருவோம்; நாம் அவர்களைச் சிறுமைப் படுத்தி, அவ்வூரிலிருந்து வெளியேற்றிவிடுவோம், மேலும் அவர்கள் இழிந்தவர்களாவார்கள்” (என்று ஸுலைமான் கூறினார்).

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நீ அவர்களிடம் திரும்பிப் போ! நாம் அவர்களிடம் (பல) இராணுவங்களைக் கொண்டு வருவோம். அவர்களை (-இராணுவங்களை எதிர்ப்பதற்கு) அவர்களுக்கு அறவே வலிமை இருக்காது. இன்னும் நிச்சயமாக அவர்களை அதிலிருந்து (அவர்களின் ஊரிலிருந்து) இழிவானவர்களாக நாம் வெளியேற்றுவோம். அவர்கள் (இஸ்லாமை ஏற்கவில்லை என்றால்) சிறுமைப்படுவார்கள்.