Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நம்லி வசனம் ௩௬

Qur'an Surah An-Naml Verse 36

ஸூரத்துந் நம்லி [௨௭]: ௩௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَلَمَّا جَاۤءَ سُلَيْمٰنَ قَالَ اَتُمِدُّوْنَنِ بِمَالٍ فَمَآ اٰتٰىنِ َۧ اللّٰهُ خَيْرٌ مِّمَّآ اٰتٰىكُمْۚ بَلْ اَنْتُمْ بِهَدِيَّتِكُمْ تَفْرَحُوْنَ (النمل : ٢٧)

falammā jāa
فَلَمَّا جَآءَ
So when came
அவர் வந்தபோது
sulaymāna
سُلَيْمَٰنَ
(to) Sulaiman
சுலைமானிடம்
qāla
قَالَ
he said
அவர் கூறினார்
atumiddūnani
أَتُمِدُّونَنِ
"Will you provide me
நீங்கள் எனக்கு தருகிறீர்களா?
bimālin
بِمَالٍ
with wealth?
செல்வத்தை
famā ātāniya
فَمَآ ءَاتَىٰنِۦَ
But what Allah has given me
எனக்கு தந்திருப்பது
l-lahu
ٱللَّهُ
Allah has given me
அல்லாஹ்
khayrun
خَيْرٌ
(is) better
மிகச் சிறந்தது
mimmā ātākum
مِّمَّآ ءَاتَىٰكُم
than what He has given you
அவன் உங்களுக்கு தந்திருப்பதை விட
bal
بَلْ
Nay
மாறாக
antum
أَنتُم
you
நீங்கள்
bihadiyyatikum
بِهَدِيَّتِكُمْ
in your gift
உங்கள் அன்பளிப்புகளைக் கொண்டு
tafraḥūna
تَفْرَحُونَ
rejoice
பெருமிதம் அடைவீர்கள்

Transliteration:

Falammaa jaaa'a Sulaimaana qaala atumiddoonani bimaalin famaaa aataaniyal laahu khairum mimmmaaa aataakum bal antum bihadiy-yatikum tafrahoon (QS. an-Naml:36)

English Sahih International:

So when they came to Solomon, he said, "Do you provide me with wealth? But what Allah has given me is better than what He has given you. Rather, it is you who rejoice in your gift. (QS. An-Naml, Ayah ௩௬)

Abdul Hameed Baqavi:

அந்தத் தூதர்கள் ஸுலைமானிடம் வரவே (ஸுலைமான் அவர்களை நோக்கி) "நீங்கள் பொருளைக் கொண்டு எனக்கு உதவி செய்யக் கருதுகின்றீர்களா? அல்லாஹ் எனக்குக் கொடுத்து இருப்பவைகள் உங்களுக்குக் கொடுத்திருப்பவைகளை விட (அதிகமாகவும்) மேலானதாகவும் இருக்கின்றன. உங்களுடைய இக்காணிக்கையைக் கொண்டு நீங்களே சந்தோஷமடையுங்கள். (அது எனக்கு வேண்டியதில்லை) என்றும், (ஸூரத்துந் நம்லி, வசனம் ௩௬)

Jan Trust Foundation

அவ்வாறே (தூதர்கள்) ஸுலைமானிடம் வந்தபோது; அவர் சொன்னார்| “நீங்கள் எனக்குப் பொருளைக் கொண்டு உதவி செய்(ய நினைக்)கிறீர்களா? அல்லாஹ் எனக்குக் கொடுத்திருப்பது, உங்களுக்கு அவன் கொடுத்திருப்பதை விட மேலானதாகும்; எனினும், உங்கள் அன்பளிப்பைக் கொண்டு நீங்கள் தான் மகிழ்ச்சி அடைகிறீர்கள்!

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர் (-அவளின் தூதர்) சுலைமானிடம் வந்தபோது, அவர் (சுலைமான்) கூறினார்: செல்வத்தை எனக்கு நீங்கள் தருகிறீர்களா? அல்லாஹ் எனக்கு தந்திருப்பது அவன் உங்களுக்கு தந்திருப்பதை விட மிகச் சிறந்தது. மாறாக, நீங்கள் உங்கள் அன்பளிப்புகளைக் கொண்டு பெருமிதம் அடைவீர்கள். (நான் அடைய மாட்டேன்.)