Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நம்லி வசனம் ௩௫

Qur'an Surah An-Naml Verse 35

ஸூரத்துந் நம்லி [௨௭]: ௩௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاِنِّيْ مُرْسِلَةٌ اِلَيْهِمْ بِهَدِيَّةٍ فَنٰظِرَةٌ ۢبِمَ يَرْجِعُ الْمُرْسَلُوْنَ (النمل : ٢٧)

wa-innī
وَإِنِّى
But indeed I am
நிச்சயமாக நான்
mur'silatun
مُرْسِلَةٌ
going to send
அனுப்புகிறேன்
ilayhim
إِلَيْهِم
to them
அவர்களிடம்
bihadiyyatin
بِهَدِيَّةٍ
a gift
ஓர் அன்பளிப்பை
fanāẓiratun
فَنَاظِرَةٌۢ
and see
பார்க்கிறேன்
bima
بِمَ
with what
என்ன பதில்
yarjiʿu
يَرْجِعُ
return
திரும்ப கொண்டு வருகிறார்கள்
l-mur'salūna
ٱلْمُرْسَلُونَ
the messengers"
தூதர்கள்

Transliteration:

Wa innee mursilatun ilaihim bihadiyyatin fanaaziratum bima yarji'ul mursaloon (QS. an-Naml:35)

English Sahih International:

But indeed, I will send to them a gift and see with what [reply] the messengers will return." (QS. An-Naml, Ayah ௩௫)

Abdul Hameed Baqavi:

ஆகவே, நான் அவர்களிடம் (உயர்ந்த பொருள்களைக் கொண்ட) ஒரு காணிக்கையை அனுப்பி வைத்து (அதனைக் கொண்டு செல்லும்) தூதர்கள் (அவரிடமிருந்து) என்ன பதில் கொண்டு வருகின்றார்கள் என்பதை நான் எதிர்பார்த்திருப்பேன்" என்று கூறி (அவ்வாறே அனுப்பி வைத்தாள்.) (ஸூரத்துந் நம்லி, வசனம் ௩௫)

Jan Trust Foundation

“ஆகவே, நிச்சயமாக நான் அவர்களுக்கு ஓர் அன்பளிப்பை அனுப்பி, (அதைக் கொண்டு செல்லும்) தூதர்கள் என்ன கொண்டு வருகிறார்கள் என்பதைப் பார்க்கப் போகிறேன்.”

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

“நிச்சயமாக நான் அவர்களிடம் (என் அரசவை தூதர்களுடன்) ஓர் அன்பளிப்பை அனுப்புகிறேன். (நான் அனுப்பிய அந்த) தூதர்கள் என்ன பதில் திரும்பக் கொண்டு வருகிறார்கள் என்று பார்க்கிறேன்.” (அதன் பின்னர் முடிவு செய்கிறேன்.)