குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நம்லி வசனம் ௩௪
Qur'an Surah An-Naml Verse 34
ஸூரத்துந் நம்லி [௨௭]: ௩௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
قَالَتْ اِنَّ الْمُلُوْكَ اِذَا دَخَلُوْا قَرْيَةً اَفْسَدُوْهَا وَجَعَلُوْٓا اَعِزَّةَ اَهْلِهَآ اَذِلَّةً ۚوَكَذٰلِكَ يَفْعَلُوْنَ (النمل : ٢٧)
- qālat
- قَالَتْ
- She said
- அவள் கூறினாள்
- inna l-mulūka
- إِنَّ ٱلْمُلُوكَ
- "Indeed the kings
- நிச்சயமாகமன்னர்கள்
- idhā dakhalū
- إِذَا دَخَلُوا۟
- when they enter
- நுழைந்து விட்டால்
- qaryatan
- قَرْيَةً
- a town
- ஓர் ஊருக்குள்
- afsadūhā
- أَفْسَدُوهَا
- they ruin it
- அதை சின்னா பின்னப்படுத்தி விடுவார்கள்
- wajaʿalū
- وَجَعَلُوٓا۟
- and make
- ஆக்கிவிடுவார்கள்
- aʿizzata
- أَعِزَّةَ
- (the) most honorable
- கண்ணியவான்களை
- ahlihā adhillatan
- أَهْلِهَآ أَذِلَّةًۖ
- (of) its people (the) lowest
- அந்த ஊர் வாசிகளில் உள்ள/இழிவானவர்களாக
- wakadhālika
- وَكَذَٰلِكَ
- And thus
- அப்படித்தான்
- yafʿalūna
- يَفْعَلُونَ
- they do
- செய்வார்கள்
Transliteration:
Qaalat innal mulooka izaa dakhaloo qaryatan afsadoohaa wa ja'alooo a'izzata ahlihaaa azillah; wa kazaalika yaf'aloon(QS. an-Naml:34)
English Sahih International:
She said, "Indeed kings – when they enter a city, they ruin it and render the honored of its people humbled. And thus do they do. (QS. An-Naml, Ayah ௩௪)
Abdul Hameed Baqavi:
அதற்கவள் "அரசர்கள் யாதொரு ஊரில் நுழைந்தால் நிச்சயமாக அதனை அழித்துவிடுகின்றனர். அன்றி, அங்குள்ள கண்ணியவான்களை கேவலப்பட்டவர்களாக ஆக்கிவிடுகின்றனர். (ஆகவே,) இவர்களும் இவ்வாறே செய்யக்கூடும். (ஸூரத்துந் நம்லி, வசனம் ௩௪)
Jan Trust Foundation
அவள் கூறினாள்| “அரசர்கள் ஒரு நகரத்துள் (படையெடுத்து) நுழைவார்களானால், நிச்சயமாக அதனை அழித்து விடுகிறார்கள்; அதிலுள்ள கண்ணியமுள்ளவர்களை, சிறுமைப் படுத்தி விடுகிறார்கள்; அவ்வாறு தான் இவர்களும் செய்வார்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவள் கூறினாள்: “நிச்சயமாக மன்னர்கள் ஓர் ஊருக்குள் நுழைந்து விட்டால் அதை சின்னா பின்னப்படுத்தி விடுவார்கள். அந்த ஊர் வாசிகளில் உள்ள கண்ணியவான்களை இழிவானவர்களாக ஆக்கிவிடுவார்கள்.” (ஆகவே, இவர்களும்) அப்படித்தான் செய்வார்கள்.