குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நம்லி வசனம் ௩௨
Qur'an Surah An-Naml Verse 32
ஸூரத்துந் நம்லி [௨௭]: ௩௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
قَالَتْ يٰٓاَيُّهَا الْمَلَؤُا اَفْتُوْنِيْ فِيْٓ اَمْرِيْۚ مَا كُنْتُ قَاطِعَةً اَمْرًا حَتّٰى تَشْهَدُوْنِ (النمل : ٢٧)
- qālat
- قَالَتْ
- She said
- அவள் கூறினாள்
- yāayyuhā l-mala-u
- يَٰٓأَيُّهَا ٱلْمَلَؤُا۟
- "O chiefs!
- பிரமுகர்களே!
- aftūnī
- أَفْتُونِى
- Advise me
- நீங்கள் எனக்கு ஆலோசனை கூறுங்கள்
- fī amrī
- فِىٓ أَمْرِى
- in my affair
- எனது காரியத்தில்
- mā kuntu
- مَا كُنتُ
- Not I would be
- நான் இல்லை
- qāṭiʿatan
- قَاطِعَةً
- the one to decide
- முடிவு செய்பவளாக
- amran
- أَمْرًا
- any matter
- ஒரு காரியத்தை
- ḥattā
- حَتَّىٰ
- until
- வரை
- tashhadūni
- تَشْهَدُونِ
- you are present with me"
- நீங்கள் என்னிடம் ஆஜராகின்ற
Transliteration:
Qaalat yaaa aiyuhal mala'u aftoonee fee amree maa kuntu qaati'atan amran hattaa tashhhaddon(QS. an-Naml:32)
English Sahih International:
She said, "O eminent ones, advise me in my affair. I would not decide a matter until you witness [for] me." (QS. An-Naml, Ayah ௩௨)
Abdul Hameed Baqavi:
(தன்னுடைய பிரதானிகளை நோக்கி) "தலைவர்களே என்னுடைய இவ்விஷயத்தில் நீங்கள் (உங்கள்) ஆலோசனைகளைக் கூறுங்கள். என் சமூகத்தில் நீங்கள் நேராக வந்து (அபிப்பிராயம்) கூறாத வரையில் நான் எவ்விஷயத்தையும் முடிவு செய்பவளல்ல" என்று அவள் கூறினாள். (ஸூரத்துந் நம்லி, வசனம் ௩௨)
Jan Trust Foundation
எனவே பிரமுகர்களே! “என்னுடைய (இந்த) விஷயத்தில் ஆலோசனை கூறுவீர்களாக! நீங்கள் என்னிடம் நேரிடையாகக் கருத்துச் சொல்லாதவரை நான் எந்த காரியத்தையும் முடிவு செய்பவளல்ல” என்று கூறினாள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவள் கூறினாள்: பிரமுகர்களே! எனது இந்த காரியத்தில் நீங்கள் எனக்கு ஆலோசனை கூறுங்கள். நான் ஒரு காரியத்தை நீங்கள் என்னிடம் ஆஜராகி (கருத்து தெரிவிக்கி)ன்ற வரை முடிவு செய்பவளாக இல்லை.