குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நம்லி வசனம் ௨௫
Qur'an Surah An-Naml Verse 25
ஸூரத்துந் நம்லி [௨௭]: ௨௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اَلَّا يَسْجُدُوْا لِلّٰهِ الَّذِيْ يُخْرِجُ الْخَبْءَ فِى السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَيَعْلَمُ مَا تُخْفُوْنَ وَمَا تُعْلِنُوْنَ (النمل : ٢٧)
- allā yasjudū
- أَلَّا يَسْجُدُوا۟
- That not they prostrate
- அவர்கள் சிரம் பணியாமல் இருப்பதற்கா
- lillahi
- لِلَّهِ
- to Allah
- அல்லாஹ்விற்கு
- alladhī
- ٱلَّذِى
- the One Who
- எவன்
- yukh'riju
- يُخْرِجُ
- brings forth
- வெளிப்படுத்துகின்றான்
- l-khaba-a
- ٱلْخَبْءَ
- the hidden
- மறைந்திருப்பவற்றை
- fī l-samāwāti
- فِى ٱلسَّمَٰوَٰتِ
- in the heavens
- வானங்களிலும்
- wal-arḍi
- وَٱلْأَرْضِ
- and the earth
- பூமியிலும்
- wayaʿlamu
- وَيَعْلَمُ
- and knows
- இன்னும் அறிகின்றான்
- mā tukh'fūna
- مَا تُخْفُونَ
- what you conceal
- நீங்கள் மறைப்பதையும்
- wamā tuʿ'linūna
- وَمَا تُعْلِنُونَ
- and what you declare
- நீங்கள் வெளிப்படுத்துவதையும்
Transliteration:
Allaa yasjudoo lillaahil lazee yukhrijul khab'a fis samaawaati wal ardi wa ya'lamu maa tukhfoona wa maa tu'linoon(QS. an-Naml:25)
English Sahih International:
[And] so they do not prostrate to Allah, who brings forth what is hidden within the heavens and the earth and knows what you conceal and what you declare – (QS. An-Naml, Ayah ௨௫)
Abdul Hameed Baqavi:
வானங்களிலும், பூமியிலும் மறைந்திருப்பவைகளை வெளிப்படுத்தக் கூடிய அல்லாஹ்வுக்கு அவர்கள் சிரம் பணிந்து வணங்க வேண்டாமா? அன்றி, நீங்கள் மறைத்துக் கொள்வதையும் நீங்கள் வெளியாக்குவதையும் அவன் நன்கறிந்து கொள்கிறான். (ஸூரத்துந் நம்லி, வசனம் ௨௫)
Jan Trust Foundation
“வானங்களிலும், பூமியிலும், மறைந்திருப்பவற்றை வெளியாக்குகிறவனும்; இன்னும் நீங்கள் மறைப்பதையும், நீங்கள் வெளியாக்குவதையும் அறிபவனுமாகிய அல்லாஹ்வுக்கு அவர்கள் ஸுஜூது செய்து வணங்க வேண்டாமா?
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
வானங்களிலும் பூமியிலும் மறைந்திருப்பவற்றை (-மழை மற்றும் தாவரங்களை) வெளிப்படுத்துகின்ற, இன்னும் நீங்கள் மறைப்பதையும் நீங்கள் வெளிப்படுத்துவதையும் அறிகின்ற அல்லாஹ்விற்கு அவர்கள் சிரம் பணியாமல் இருப்பதற்காக (அவன் அவர்களது ஷிர்க்கான செயல்களை அலங்கரித்துக் காட்டினான்).