Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நம்லி வசனம் ௨௪

Qur'an Surah An-Naml Verse 24

ஸூரத்துந் நம்லி [௨௭]: ௨௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَجَدْتُّهَا وَقَوْمَهَا يَسْجُدُوْنَ لِلشَّمْسِ مِنْ دُوْنِ اللّٰهِ وَزَيَّنَ لَهُمُ الشَّيْطٰنُ اَعْمَالَهُمْ فَصَدَّهُمْ عَنِ السَّبِيْلِ فَهُمْ لَا يَهْتَدُوْنَۙ (النمل : ٢٧)

wajadttuhā
وَجَدتُّهَا
And I found her
அவளையும் கண்டேன்
waqawmahā
وَقَوْمَهَا
and her people
அவளுடைய மக்களையும்
yasjudūna
يَسْجُدُونَ
prostrating
சிரம் பணிந்து வணங்குகின்றவர்களாக
lilshamsi
لِلشَّمْسِ
to the sun
சூரியனுக்கு
min dūni l-lahi
مِن دُونِ ٱللَّهِ
instead of Allah instead of Allah instead of Allah
அல்லாஹ்வையன்றி
wazayyana
وَزَيَّنَ
and has made fair-seeming
இன்னும் அலங்கரித்து விட்டான்
lahumu
لَهُمُ
to them
அவர்களுக்கு
l-shayṭānu
ٱلشَّيْطَٰنُ
the Shaitaan
ஷைத்தான்
aʿmālahum
أَعْمَٰلَهُمْ
their deeds
அவர்களின் செயல்களை
faṣaddahum
فَصَدَّهُمْ
and averted them
ஆகவே, அவன் தடுத்து விட்டான் அவர்களை
ʿani l-sabīli
عَنِ ٱلسَّبِيلِ
from the Way
பாதையிலிருந்து
fahum
فَهُمْ
so they
ஆகவே, அவர்கள்
lā yahtadūna
لَا يَهْتَدُونَ
(are) not guided
நேர்வழி பெறவில்லை

Transliteration:

Wajattuhaa wa qawmahaa yasjudoona lishshamsi min doonil laahi wa zaiyana lahumush Shaitaanu a'maalahum fasaddahum 'anis sabeeli fahum laa yahtadoon (QS. an-Naml:24)

English Sahih International:

I found her and her people prostrating to the sun instead of Allah, and Satan has made their deeds pleasing to them and averted them from [His] way, so they are not guided, (QS. An-Naml, Ayah ௨௪)

Abdul Hameed Baqavi:

அவளும் அவளுடைய மக்களும் அல்லாஹ்வையன்றிச் சூரியனைச் சிரம் பணிந்து வணங்குவதை நான் கண்டேன். அவர்களுடைய இக்காரியத்தை ஷைத்தான் அவர்களுக்கு அழகாகக் காண்பித்து, அவர்களை நேரான பாதையிலிருந்து தடுத்து விட்டான். ஆதலால், அவர்கள் நேரான வழியை அடையவில்லை. (ஸூரத்துந் நம்லி, வசனம் ௨௪)

Jan Trust Foundation

“அவளும், அவளுடைய சமூகத்தார்களும் அல்லாஹ்வையன்றி, சூரியனுக்கு ஸுஜூது செய்வதை நான் கண்டேன்; அவர்களுடைய (இத்தவறான) செயல்களை அவர்களுக்கு ஷைத்தான் அழகாகக் காண்பித்து, அவர்களை நேரான வழியிலிருந்து தடுத்துள்ளான்; ஆகவே அவர்கள் நேர்வழி பெறவில்லை.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவளையும் அவளுடைய மக்களையும் அல்லாஹ்வை அன்றி சூரியனுக்கு சிரம் பணிந்து வணங்குகின்றவர்களாக கண்டேன். ஷைத்தான் அவர்களுக்கு அவர்களின் (இந்த இணைவைப்பு) செயல்களை அலங்கரித்து விட்டான். ஆகவே, அவர்களை (நேரான) பாதையிலிருந்து அவன் தடுத்து விட்டான். ஆகவே, அவர்கள் நேர்வழி பெறவில்லை.