Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நம்லி வசனம் ௨௨

Qur'an Surah An-Naml Verse 22

ஸூரத்துந் நம்லி [௨௭]: ௨௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَمَكَثَ غَيْرَ بَعِيْدٍ فَقَالَ اَحَطْتُّ بِمَا لَمْ تُحِطْ بِهٖ وَجِئْتُكَ مِنْ سَبَاٍ ۢبِنَبَاٍ يَّقِيْنٍ (النمل : ٢٧)

famakatha
فَمَكَثَ
So he stayed
அவர் தாமதித்தார்
ghayra baʿīdin
غَيْرَ بَعِيدٍ
not long
சிறிது நேரம்தான்
faqāla
فَقَالَ
and he said
ஆக, அது கூறியது
aḥaṭtu
أَحَطتُ
"I have encompassed
அறிந்துள்ளேன்
bimā lam tuḥiṭ bihi
بِمَا لَمْ تُحِطْ بِهِۦ
that which not you have encompassed it
எதை/நீ்ர் அறியவில்லை/அதை
waji'tuka
وَجِئْتُكَ
and I have come to you
உம்மிடம் கொண்டு வந்துள்ளேன்
min saba-in
مِن سَبَإٍۭ
from Saba
‘சபா’ இனத்தாரிடமிருந்து
binaba-in
بِنَبَإٍ
with news
செய்தியை
yaqīnin
يَقِينٍ
certain
உறுதியான

Transliteration:

Famakasa ghaira ba'eedin faqaala ahattu bimaa lam tuhit bihee wa ji'tuka min Sabaim binaba iny-yaqeen (QS. an-Naml:22)

English Sahih International:

But he [i.e., the hoopoe] stayed not long and said, "I have encompassed [in knowledge] that which you have not encompassed, and I have come to you from Sheba with certain news. (QS. An-Naml, Ayah ௨௨)

Abdul Hameed Baqavi:

(இவ்வாறு கூறி) அதிக நேரமாகவில்லை. (அதற்குள் ஹுத்ஹுத் என்னும் பறவை அவர் முன் தோன்றி) "நீங்கள் அறியாத ஒரு விஷயத்தை நான் அறிந்துகொண்டு "ஸபா"வைப் பற்றி நிச்சயமான (உண்மைச்) செய்தியைக் கொண்டு வந்திருக்கிறேன். (ஸூரத்துந் நம்லி, வசனம் ௨௨)

Jan Trust Foundation

(இவ்வாறு கூறி) சிறிது நேரம் தாமதித்தார்; அதற்குள் (ஹுத்ஹுத் வந்து) கூறிற்று| “தாங்கள் அறியாத ஒரு விஷயத்தை நான் அறிந்து கொண்டேன். “ஸபா”விலிருந்து உம்மிடம் உறுதியான செய்தியைக் கொண்டு வந்திருக்கிறேன்.”

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர் (ஹுத்ஹுதைப் பற்றி விசாரித்து விட்டு) சிறிது நேரம்தான் தாமதித்தார். (ஹுத்ஹுத் அவர் முன் வந்துவிட்டது. பின்னர்) அது கூறியது: “ஆக, நீர் அறியாததை நான் அறிந்துள்ளேன். உம்மிடம் ‘சபா’ இனத்தாரிடமிருந்து உறுதியான செய்தியைக் கொண்டு வந்துள்ளேன்.