Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நம்லி வசனம் ௧௯

Qur'an Surah An-Naml Verse 19

ஸூரத்துந் நம்லி [௨௭]: ௧௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَتَبَسَّمَ ضَاحِكًا مِّنْ قَوْلِهَا وَقَالَ رَبِّ اَوْزِعْنِيْٓ اَنْ اَشْكُرَ نِعْمَتَكَ الَّتِيْٓ اَنْعَمْتَ عَلَيَّ وَعَلٰى وَالِدَيَّ وَاَنْ اَعْمَلَ صَالِحًا تَرْضٰىهُ وَاَدْخِلْنِيْ بِرَحْمَتِكَ فِيْ عِبَادِكَ الصّٰلِحِيْنَ (النمل : ٢٧)

fatabassama
فَتَبَسَّمَ
So he smiled -
ஆக, புன்முறுவல் பூத்தார்
ḍāḥikan
ضَاحِكًا
laughing
அவர் சிரித்தவராக
min qawlihā
مِّن قَوْلِهَا
at her speech
அதன் பேச்சினால்
waqāla
وَقَالَ
and said
இன்னும் கூறினார்
rabbi
رَبِّ
"My Lord!
என் இறைவா!
awziʿ'nī
أَوْزِعْنِىٓ
Grant me (the) power
எனக்கு நீ அகத்தூண்டுதலை ஏற்படுத்து!
an ashkura
أَنْ أَشْكُرَ
that I may thank You
நான் நன்றி செலுத்துவதற்கு
niʿ'mataka
نِعْمَتَكَ
(for) Your Favor
உன் அருளுக்கு
allatī anʿamta
ٱلَّتِىٓ أَنْعَمْتَ
which You have bestowed
எது/நீ அருள்புரிந்தாய்
ʿalayya
عَلَىَّ
on me
என் மீதும்
waʿalā wālidayya
وَعَلَىٰ وَٰلِدَىَّ
and on my parents
என் பெற்றோர் மீதும்
wa-an aʿmala
وَأَنْ أَعْمَلَ
and that I may do
நான் செய்வதற்கும்
ṣāliḥan
صَٰلِحًا
righteous (deeds)
நல்லதை
tarḍāhu
تَرْضَىٰهُ
that will please You
நீ மகிழ்ச்சியுறுகின்ற
wa-adkhil'nī
وَأَدْخِلْنِى
And admit me
இன்னும் என்னைநுழைத்துவிடு
biraḥmatika
بِرَحْمَتِكَ
by Your Mercy
உன் கருணையால்
fī ʿibādika
فِى عِبَادِكَ
among Your slaves
உன் அடியார்களில்
l-ṣāliḥīna
ٱلصَّٰلِحِينَ
righteous"
நல்லவர்கள்

Transliteration:

Fatabassama daahikam min qawlihaa wa qaala Rabbi awzi'nee an ashkura ni'mata kal lateee an'amta 'alaiya wa 'alaa waalidaiya wa an a'mala saalihan tardaahu wa adkhilnee birahmatika fee 'ibaadikas saaliheen (QS. an-Naml:19)

English Sahih International:

So [Solomon] smiled, amused at her speech, and said, "My Lord, enable me to be grateful for Your favor which You have bestowed upon me and upon my parents and to do righteousness of which You approve. And admit me by Your mercy into [the ranks of] Your righteous servants." (QS. An-Naml, Ayah ௧௯)

Abdul Hameed Baqavi:

அதன் சொல்லைக் கேள்வியுற்று ஸுலைமான் சிரித்தவராக புன்னகைப் பூத்தார். மேலும், "என் இறைவனே! நீ என் மீதும், என் தாய் தந்தை மீதும் புரிந்த உன்னுடைய அருள்களுக்கு உனக்கு நான் நன்றி செலுத்த நீ அருள் புரிவாயாக! உனக்குத் திருப்தியளிக்கக் கூடிய நற் செயல்களையும் நான் செய்ய(க்கூடிய பாக்கியத்தை எனக்கு) அருள் புரிந்து, உன்னுடைய கிருபையைக் கொண்டு உன்னுடைய நல்லடியார்களுடனும் என்னைச் சேர்த்து விடுவாயாக!" என்று பிரார்த்தனை செய்தார். (ஸூரத்துந் நம்லி, வசனம் ௧௯)

Jan Trust Foundation

அப்போது அதன் சொல்லைக் கேட்டு, அவர் புன்னகை கொண்டு சிரித்தார். இன்னும், “என் இறைவா! நீ என் மீதும், என் பெற்றோர் மீதும் புரிந்துள்ள உன் அருட்கொடைகளுக்காக, நான் நன்றி செலுத்தவும், நீ பொருந்திக் கொள்ளும் விதத்தில் நான் நன்மைகள் செய்யவும், எனக்கு அருள் செய்வாயாக! இன்னும் உம் கிருபையைக் கொண்டு என்னை உன்னுடைய நல்லடியார்களில் சேர்த்தருள்வாயாக!” என்று பிரார்த்தித்தார்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

ஆக, அதன் பேச்சினால் அவர் சிரித்தவராக புன்முறுவல் பூத்தார். இன்னும் கூறினார்: “என் இறைவா! நீ என் மீதும் என் பெற்றோர் மீதும் அருள்புரிந்த உன் அருளுக்கு நான் நன்றி செலுத்துவதற்கும் நீ மகிழ்ச்சியுறுகின்ற நல்லதை நான் செய்வதற்கும் எனக்கு நீ அகத்தூண்டுதலை (-உள்ளத்தில் உதிப்பை) ஏற்படுத்து! (மனதில் அதற்குண்டான ஆசையையும் உணர்வையும் ஏற்படுத்து.) உன் கருணையால் உன் நல்லடியார்களில் என்னை நுழைத்துவிடு!”