Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நம்லி வசனம் ௧௮

Qur'an Surah An-Naml Verse 18

ஸூரத்துந் நம்லி [௨௭]: ௧௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

حَتّٰىٓ اِذَآ اَتَوْا عَلٰى وَادِ النَّمْلِۙ قَالَتْ نَمْلَةٌ يّٰٓاَيُّهَا النَّمْلُ ادْخُلُوْا مَسٰكِنَكُمْۚ لَا يَحْطِمَنَّكُمْ سُلَيْمٰنُ وَجُنُوْدُهٗۙ وَهُمْ لَا يَشْعُرُوْنَ (النمل : ٢٧)

ḥattā
حَتَّىٰٓ
Until
இறுதியாக
idhā ataw
إِذَآ أَتَوْا۟
when they came
அவர்கள் வந்த போது
ʿalā wādi
عَلَىٰ وَادِ
to (the) valley
ஒரு பள்ளத்தாக்கில்
l-namli
ٱلنَّمْلِ
(of) the ants
எறும்புகளின்
qālat
قَالَتْ
said
கூறியது
namlatun
نَمْلَةٌ
an ant
ஓர் எறும்பு
yāayyuhā l-namlu
يَٰٓأَيُّهَا ٱلنَّمْلُ
"O ants!
எறும்புகளே!
ud'khulū
ٱدْخُلُوا۟
Enter
நுழைந்து விடுங்கள்!
masākinakum
مَسَٰكِنَكُمْ
your dwellings
உங்கள் பொந்துகளுக்குள்
lā yaḥṭimannakum
لَا يَحْطِمَنَّكُمْ
lest not crush you lest not crush you
உங்களை மிதித்து அழித்து விடவேண்டாம்
sulaymānu
سُلَيْمَٰنُ
Sulaiman
சுலைமானும்
wajunūduhu
وَجُنُودُهُۥ
and his hosts
அவருடைய ராணுவங்களும்
wahum
وَهُمْ
while they
அவர்களோ
lā yashʿurūna
لَا يَشْعُرُونَ
(do) not perceive" (do) not perceive"
உணர மாட்டார்கள்

Transliteration:

hattaaa izaaa ataw 'alaa waadin namli qaalat namlatuny yaaa aiyuhan namlud khuloo masaakinakum laa yahtimannakum Sulaimaanu wa junooduhoo wa hum laa yash'uroon (QS. an-Naml:18)

English Sahih International:

Until, when they came upon the valley of the ants, an ant said, "O ants, enter your dwellings that you not be crushed by Solomon and his soldiers while they perceive not." (QS. An-Naml, Ayah ௧௮)

Abdul Hameed Baqavi:

அவை எறும்புகள் வசிக்கும் ஓர் ஓடையின் சமீபமாக வந்தபொழுது அதிலொரு பெண் எறும்பு (மற்ற எறும்புகளை நோக்கி) "எறும்புகளே! நீங்கள் உங்கள் வீடுகளுக்குள் நுழைந்து கொள்ளுங்கள். ஸுலைமானும் அவருடைய ராணுவமும் (நீங்கள் இருப்பதை) அறியாது உங்களை(த் தங்கள் கால்களால்) மிதித்துவிட வேண்டாம்" என்று கூறியது. (ஸூரத்துந் நம்லி, வசனம் ௧௮)

Jan Trust Foundation

இறுதியாக, எறும்புகள் நிறைந்த இடத்திற்கு அவர்கள் வந்த போது ஓர் எறும்பு (மற்ற எறும்புகளை நோக்கி|) “எறும்புகளே! நீங்கள் உங்கள் புற்றுகளுக்குள் நுழைந்து கொள்ளுங்கள்; ஸுலைமானும் அவருடைய சேனைகளும், அவர்கள் அறியாதிருக்கும் நிலையில் உங்களை நசுக்கி விடாதிருக்கும் பொருட்டு (அவ்வாறு செய்யுங்கள்)“ என்று கூறிற்று.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இறுதியாக, (ஒரு முறை) எறும்புகளின் ஒரு பள்ளத்தாக்கில் அவர்கள் வந்த போது ஓர் எறும்பு கூறியது: எறும்புகளே! உங்கள் பொந்துகளுக்குள் நுழைந்து விடுங்கள்! சுலைமானும் அவருடைய ராணுவங்களும் உங்களை மிதித்து அழித்து விடவேண்டாம். அவர்களோ (நீங்கள் இருப்பதையும் அவர்கள் உங்களை மிதிப்பதையும்) உணர மாட்டார்கள்.