குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நம்லி வசனம் ௧௫
Qur'an Surah An-Naml Verse 15
ஸூரத்துந் நம்லி [௨௭]: ௧௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَلَقَدْ اٰتَيْنَا دَاوٗدَ وَسُلَيْمٰنَ عِلْمًاۗ وَقَالَا الْحَمْدُ لِلّٰهِ الَّذِيْ فَضَّلَنَا عَلٰى كَثِيْرٍ مِّنْ عِبَادِهِ الْمُؤْمِنِيْنَ (النمل : ٢٧)
- walaqad
- وَلَقَدْ
- And verily
- திட்டவட்டமாக
- ātaynā
- ءَاتَيْنَا
- We gave
- நாம் தந்தோம்
- dāwūda
- دَاوُۥدَ
- Dawood
- தாவூதுக்கும்
- wasulaymāna
- وَسُلَيْمَٰنَ
- and Sulaiman
- சுலைமானுக்கும்
- ʿil'man
- عِلْمًاۖ
- knowledge
- அறிவை
- waqālā
- وَقَالَا
- and they said
- அவ்விருவரும் கூறினர்
- l-ḥamdu
- ٱلْحَمْدُ
- "Praise be
- எல்லாப் புகழும்
- lillahi
- لِلَّهِ
- to Allah
- அல்லாஹ்விற்கே
- alladhī
- ٱلَّذِى
- the One Who
- எவன்
- faḍḍalanā
- فَضَّلَنَا
- has favored us
- எங்களை மேன்மைப்படுத்தினான்
- ʿalā kathīrin
- عَلَىٰ كَثِيرٍ
- over many
- பலரைப் பார்க்கிலும்
- min ʿibādihi
- مِّنْ عِبَادِهِ
- of His servants
- தனது அடியார்களில்
- l-mu'minīna
- ٱلْمُؤْمِنِينَ
- the believers"
- நம்பிக்கையாளர்களான
Transliteration:
Wa laqad aatainaa Daawooda wa sulaimaana 'ilmaa; wa qaalal hamdu lil laahil lazee faddalanaa 'alaa kaseerim min 'ibaadihil mu'mineen(QS. an-Naml:15)
English Sahih International:
And We had certainly given to David and Solomon knowledge, and they said, "Praise [is due] to Allah, who has favored us over many of His believing servants." (QS. An-Naml, Ayah ௧௫)
Abdul Hameed Baqavi:
தாவூதுக்கும், ஸுலைமானுக்கும் நிச்சயமாக நாம் (இம்மை மறுமையில் பயனளிக்கக்கூடிய) கல்வியைக் கொடுத்தோம். அதற்கு அவ்விருவரும் "புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே சொந்தமானவை. அவன்தான் நம்பிக்கை கொண்ட தன்னுடைய நல்லடியார்களில் பலரைவிட எங்களை மேன்மையாக்கி வைத்தான்" என்று கூறி (நன்றி செலுத்தி)னார்கள். (ஸூரத்துந் நம்லி, வசனம் ௧௫)
Jan Trust Foundation
தாவூதுக்கும், ஸுலைமானுக்கும் நிச்சயமாக நாம் கல்வி ஞானத்தைக் கொடுத்தோம்; அதற்கு அவ்விருவரும்| “புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியது; அவன் தான், முஃமின்களான தன் நல்லடியார்களில் அநேகரைவிட நம்மை மேன்மையாக்கினான்” என்று கூறினார்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
திட்டவட்டமாக தாவூதுக்கும் சுலைமானுக்கும் (பறவைகளின் மொழி அறிவு மற்றும் பல துறைகளின் சிறப்பான) அறிவை நாம் தந்தோம். அவ்விருவரும் கூறினர்: “தனது நம்பிக்கையாளர்களான அடியார்களில் பலரைப் பார்க்கிலும் எங்களை மேன்மைப்படுத்திய அல்லாஹ்விற்கே எல்லா புகழும்.”