குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நம்லி வசனம் ௧௪
Qur'an Surah An-Naml Verse 14
ஸூரத்துந் நம்லி [௨௭]: ௧௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَجَحَدُوْا بِهَا وَاسْتَيْقَنَتْهَآ اَنْفُسُهُمْ ظُلْمًا وَّعُلُوًّاۗ فَانْظُرْ كَيْفَ كَانَ عَاقِبَةُ الْمُفْسِدِيْنَ ࣖ (النمل : ٢٧)
- wajaḥadū
- وَجَحَدُوا۟
- And they rejected
- அவர்கள் மறுத்தனர்
- bihā
- بِهَا
- them
- அவற்றை
- wa-is'tayqanathā
- وَٱسْتَيْقَنَتْهَآ
- though were convinced with them (signs)
- அவற்றை உறுதியாக நம்பின
- anfusuhum
- أَنفُسُهُمْ
- themselves
- அவர்களுடைய ஆன்மாக்களோ
- ẓul'man
- ظُلْمًا
- (out of) injustice
- அநியாயமாக
- waʿuluwwan
- وَعُلُوًّاۚ
- and haughtiness
- இன்னும் பெருமையாக
- fa-unẓur
- فَٱنظُرْ
- So see
- ஆகவே நீர் கவனிப்பீராக
- kayfa kāna
- كَيْفَ كَانَ
- how was
- எவ்வாறுஆகிவிட்டது
- ʿāqibatu
- عَٰقِبَةُ
- (the) end
- முடிவு
- l-muf'sidīna
- ٱلْمُفْسِدِينَ
- (of) the corrupters
- விஷமிகளின்
Transliteration:
Wa jahadoo bihaa wastaiqanat haaa anfusuhum zulmanw-wa 'uluwwaa; fanzur kaifa kaana 'aaqibatul mufsideen(QS. an-Naml:14)
English Sahih International:
And they rejected them, while their [inner] selves were convinced thereof, out of injustice and haughtiness. So see how was the end of the corrupters. (QS. An-Naml, Ayah ௧௪)
Abdul Hameed Baqavi:
(அத்தாட்சிகளைக் கண்ட) அவர்களுடைய உள்ளங்கள் அவைகளை (உண்மையென) உறுதிகொண்டபோதிலும், கர்வம் கொண்டு அநியாயமாக அவைகளை அவர்கள் மறுத்தார்கள். ஆகவே, இந்த விஷமிகளின் முடிவு எவ்வாறாயிற்று என்பதை (நபியே!) நீங்கள் கவனியுங்கள். (ஸூரத்துந் நம்லி, வசனம் ௧௪)
Jan Trust Foundation
அவர்களுடைய உள்ளங்கள் அவற்றை (உண்மையென) உறுதி கொண்ட போதிலும், அநியாயமாகவும், பெருமை கொண்டவர்களாகவும் அவர்கள் அவற்றை மறுத்தார்கள். ஆனால், இந்த விஷமிகளின் முடிவு என்ன வாயிற்று என்பதை நீர் கவனிப்பீராக.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவர்கள் அவற்றை (-ஒன்பது அத்தாட்சிகளை) மறுத்தனர், அநியாயமாக பெருமையாக. அவர்களுடைய ஆன்மாக்களோ அவற்றை உறுதியாக நம்பின. ஆகவே, (இந்த) விஷமிகளின் முடிவு எவ்வாறு ஆகிவிட்டது என்பதை (நபியே!) நீர் கவனிப்பீராக.