وَمَآ اَنْتَ بِهٰدِى الْعُمْيِ عَنْ ضَلٰلَتِهِمْۗ اِنْ تُسْمِعُ اِلَّا مَنْ يُّؤْمِنُ بِاٰيٰتِنَا فَهُمْ مُّسْلِمُوْنَ ٨١
- wamā anta
- وَمَآ أَنتَ
- நீர் முடியாது
- bihādī
- بِهَٰدِى
- நேர்வழிபடுத்த
- l-ʿum'yi
- ٱلْعُمْىِ
- குருடர்களை
- ʿan ḍalālatihim
- عَن ضَلَٰلَتِهِمْۖ
- அவர்களின் வழிகேட்டிலிருந்து
- in tus'miʿu
- إِن تُسْمِعُ
- நீர் செவியுறச் செய்ய முடியாது
- illā
- إِلَّا
- தவிர
- man yu'minu
- مَن يُؤْمِنُ
- எவர்/நம்பிக்கை கொள்வார்
- biāyātinā
- بِـَٔايَٰتِنَا
- நமது வசனங்களை
- fahum
- فَهُم
- அவர்கள்தான்
- mus'limūna
- مُّسْلِمُونَ
- முற்றிலும் பணிந்து நடப்பவர்கள்
குருடர்களையும் அவர்களுடைய வழிகேட்டிலிருந்து நேரான வழிக்குக் கொண்டு வரவும் உங்களால் முடியாது. எவர்கள் நம்முடைய வசனங்களை நம்பிக்கை கொண்டு முற்றிலும் நமக்கு வழிபட்டு நடக்கின்றார்களோ அவர்களைத் தவிர மற்றவர்களுக்கும் நீங்கள் (நம்முடைய வசனங்களைக்) கேட்கும்படிச் செய்ய முடியாது. ([௨௭] ஸூரத்துந் நம்லி: ௮௧)Tafseer
۞ وَاِذَا وَقَعَ الْقَوْلُ عَلَيْهِمْ اَخْرَجْنَا لَهُمْ دَاۤبَّةً مِّنَ الْاَرْضِ تُكَلِّمُهُمْ اَنَّ النَّاسَ كَانُوْا بِاٰيٰتِنَا لَا يُوْقِنُوْنَ ࣖ ٨٢
- wa-idhā waqaʿa
- وَإِذَا وَقَعَ
- நிகழ்ந்து விட்டால்
- l-qawlu
- ٱلْقَوْلُ
- வாக்கு
- ʿalayhim
- عَلَيْهِمْ
- அவர்கள் மீது
- akhrajnā
- أَخْرَجْنَا
- நாம் வெளிப்படுத்துவோம்
- lahum
- لَهُمْ
- அவர்களுக்கு
- dābbatan
- دَآبَّةً
- ஒரு மிருகத்தை
- mina l-arḍi
- مِّنَ ٱلْأَرْضِ
- பூமியிலிருந்து
- tukallimuhum
- تُكَلِّمُهُمْ
- அது பேசும்/அவர்களிடம்
- anna l-nāsa
- أَنَّ ٱلنَّاسَ
- நிச்சயமாக மக்கள்
- kānū
- كَانُوا۟
- இருந்தனர்
- biāyātinā
- بِـَٔايَٰتِنَا
- நமது அத்தாட்சிகளைக் கொண்டு
- lā yūqinūna
- لَا يُوقِنُونَ
- உறுதி கொள்ளாதவர்களாக
இறுதிநாள் அவர்களை நெருங்கிய சமயத்தில், அவர்களுக்காகப் பூமியிலிருந்து ஒரு கால்நடையை நாம் வெளிப் படுத்துவோம். அது எந்தெந்த மனிதர்கள் நம்முடைய வசனங்களை நம்பிக்கை கொள்ளவில்லை என்பதை அவர்களுக்குச் சொல்லிக் காண்பிக்கும். ([௨௭] ஸூரத்துந் நம்லி: ௮௨)Tafseer
وَيَوْمَ نَحْشُرُ مِنْ كُلِّ اُمَّةٍ فَوْجًا مِّمَّنْ يُّكَذِّبُ بِاٰيٰتِنَا فَهُمْ يُوْزَعُوْنَ ٨٣
- wayawma
- وَيَوْمَ
- நாளில்
- naḥshuru
- نَحْشُرُ
- நாம்எழுப்புகின்றோம்
- min kulli ummatin
- مِن كُلِّ أُمَّةٍ
- ஒவ்வொரு சமுதாயத்திலிருந்தும்
- fawjan
- فَوْجًا
- கூட்டத்தை
- mimman yukadhibu
- مِّمَّن يُكَذِّبُ
- பொய்ப்பிக்கின்றவர்களின்
- biāyātinā
- بِـَٔايَٰتِنَا
- நமது அத்தாட்சிகளை
- fahum
- فَهُمْ
- ஆகவே, அவர்கள்
- yūzaʿūna
- يُوزَعُونَ
- தடுத்து நிறுத்தப்படுவார்கள்
(அவர்களில் உள்ள) ஒவ்வொரு வகுப்பாரிலும் நம்முடைய வசனங்களைப் பொய்யாக்கிக் கொண்டிருந்தவர்களை நாம் (பிரித்து) அணியணியாகக் கூட்டும் நாளை (நபியே!) நீங்கள் அவர்களுக்கு ஞாபகமூட்டுங்கள். ([௨௭] ஸூரத்துந் நம்லி: ௮௩)Tafseer
حَتّٰٓى اِذَا جَاۤءُوْ قَالَ اَكَذَّبْتُمْ بِاٰيٰتِيْ وَلَمْ تُحِيْطُوْا بِهَا عِلْمًا اَمَّاذَا كُنْتُمْ تَعْمَلُوْنَ ٨٤
- ḥattā
- حَتَّىٰٓ
- இறுதியாக
- idhā jāū
- إِذَا جَآءُو
- அவர்கள் வந்து விடும்போது
- qāla
- قَالَ
- அவன் கூறுவான்
- akadhabtum
- أَكَذَّبْتُم
- நீங்கள்பொய்ப்பித்தீர்களா?
- biāyātī
- بِـَٔايَٰتِى
- எனதுஅத்தாட்சிகளை
- walam tuḥīṭū bihā ʿil'man
- وَلَمْ تُحِيطُوا۟ بِهَا عِلْمًا
- நீங்கள் முழுமையாக அறியாமல் இருக்க/அவற்றை
- ammādhā
- أَمَّاذَا
- ?/அல்லது/என்ன
- kuntum taʿmalūna
- كُنتُمْ تَعْمَلُونَ
- நீங்கள் செய்து கொண்டு இருந்தீர்கள்?
அவர்கள் அனைவரும் (தங்கள் இறைவனிடம்) வரும் சமயத்தில் (இறைவன் அவர்களை நோக்கி) "நீங்கள் என்னுடைய வசனங்களை நன்கறிந்து கொள்வதற்கு முன்னதாகவே அதனைப் பொய்யாக்கி விட்டீர்களா? (அவ்வாறில்லையாயின்) பின்னர் என்னதான் நீங்கள் செய்து கொண்டிருந்தீர்கள்?" என்று கேட்பான். ([௨௭] ஸூரத்துந் நம்லி: ௮௪)Tafseer
وَوَقَعَ الْقَوْلُ عَلَيْهِمْ بِمَا ظَلَمُوْا فَهُمْ لَا يَنْطِقُوْنَ ٨٥
- wawaqaʿa
- وَوَقَعَ
- நிகழ்ந்து விட்டது
- l-qawlu
- ٱلْقَوْلُ
- கூற்று
- ʿalayhim
- عَلَيْهِم
- அவர்கள் மீது
- bimā ẓalamū
- بِمَا ظَلَمُوا۟
- அவர்களின் தீமைகளால்
- fahum
- فَهُمْ
- ஆகவே, அவர்கள்
- lā yanṭiqūna
- لَا يَنطِقُونَ
- பேசமாட்டார்கள்
அவர்கள் செய்துகொண்டிருந்த அநியாயத்தின் காரணமாக அவர்கள் மீது வேதனை ஏற்பட்டுவிடும். அச்சமயம் அவர்களால் பேசவும் முடியாது. ([௨௭] ஸூரத்துந் நம்லி: ௮௫)Tafseer
اَلَمْ يَرَوْا اَنَّا جَعَلْنَا الَّيْلَ لِيَسْكُنُوْا فِيْهِ وَالنَّهَارَ مُبْصِرًاۗ اِنَّ فِيْ ذٰلِكَ لَاٰيٰتٍ لِّقَوْمٍ يُّؤْمِنُوْنَ ٨٦
- alam yaraw
- أَلَمْ يَرَوْا۟
- அவர்கள் பார்க்கவில்லையா?
- annā
- أَنَّا
- நிச்சயமாக நாம்
- jaʿalnā
- جَعَلْنَا
- நாம் அமைத்தோம்
- al-layla
- ٱلَّيْلَ
- இரவை
- liyaskunū
- لِيَسْكُنُوا۟
- அவர்கள் ஓய்வு பெறுவதற்காக(வும்)
- fīhi
- فِيهِ
- அதில்
- wal-nahāra
- وَٱلنَّهَارَ
- இன்னும் பகலை
- mub'ṣiran
- مُبْصِرًاۚ
- வெளிச்சமாகவும்
- inna
- إِنَّ
- நிச்சயமாக
- fī dhālika
- فِى ذَٰلِكَ
- இதில்
- laāyātin
- لَءَايَٰتٍ
- பல அத்தாட்சிகள்
- liqawmin
- لِّقَوْمٍ
- மக்களுக்கு
- yu'minūna
- يُؤْمِنُونَ
- நம்பிக்கை கொள்கின்றனர்
நிச்சயமாக நாம்தாம் அவர்கள் சுகமடைவதற்கு இரவையும் (அனைத்தையும்) நன்கு பார்ப்பதற்குப் பகலையும் உண்டு பண்ணினோம் என்பதை அவர்கள் (கவனித்துப்) பார்க்கவில்லையா? நிச்சயமாக இதில் நம்பிக்கை கொண்ட மக்களுக்குப் பல அத்தாட்சிகள் இருக்கின்றன. ([௨௭] ஸூரத்துந் நம்லி: ௮௬)Tafseer
وَيَوْمَ يُنْفَخُ فِى الصُّوْرِ فَفَزِعَ مَنْ فِى السَّمٰوٰتِ وَمَنْ فِى الْاَرْضِ اِلَّا مَنْ شَاۤءَ اللّٰهُ ۗوَكُلٌّ اَتَوْهُ دَاخِرِيْنَ ٨٧
- wayawma
- وَيَوْمَ
- நாளில்
- yunfakhu
- يُنفَخُ
- ஊதப்படும்
- fī l-ṣūri
- فِى ٱلصُّورِ
- ‘சூர்’ல்
- fafaziʿa
- فَفَزِعَ
- திடுக்கிடுவார்(கள்)
- man fī l-samāwāti
- مَن فِى ٱلسَّمَٰوَٰتِ
- வானங்களில் உள்ளவர்களும்
- waman fī l-arḍi
- وَمَن فِى ٱلْأَرْضِ
- பூமியில் உள்ளவர்களும்
- illā
- إِلَّا
- தவிர
- man shāa
- مَن شَآءَ
- எவர்களை நாடினான்
- l-lahu
- ٱللَّهُۚ
- அல்லாஹ்
- wakullun
- وَكُلٌّ
- எல்லோரும்
- atawhu
- أَتَوْهُ
- அவனிடம் வருவார்கள்
- dākhirīna
- دَٰخِرِينَ
- பணிந்தவர்களாக
சூர் (எக்காளம்) ஊதப்படும் நாளில் அல்லாஹ் அருள் புரிந்தவர்களைத் தவிர, வானங்களிலும் பூமியிலும் உள்ள அனைவருமே திடுக்கிட்டு, நடுங்கித் தலை குனிந்தவர்களாக அவனிடம் வந்து சேருவார்கள். ([௨௭] ஸூரத்துந் நம்லி: ௮௭)Tafseer
وَتَرَى الْجِبَالَ تَحْسَبُهَا جَامِدَةً وَّهِيَ تَمُرُّ مَرَّ السَّحَابِۗ صُنْعَ اللّٰهِ الَّذِيْٓ اَتْقَنَ كُلَّ شَيْءٍۗ اِنَّهٗ خَبِيْرٌ ۢبِمَا تَفْعَلُوْنَ ٨٨
- watarā
- وَتَرَى
- பார்ப்பீர்
- l-jibāla
- ٱلْجِبَالَ
- மலைகளை
- taḥsabuhā
- تَحْسَبُهَا
- அவற்றை நீர் கருதுவீர்
- jāmidatan
- جَامِدَةً
- உறுதியாக நிற்பதாக
- wahiya
- وَهِىَ
- அவையோ
- tamurru
- تَمُرُّ
- செல்கின்றன
- marra
- مَرَّ
- செல்வதைப் போன்று
- l-saḥābi
- ٱلسَّحَابِۚ
- மேகங்கள்
- ṣun'ʿa
- صُنْعَ
- செயலாகும்
- l-lahi
- ٱللَّهِ
- அல்லாஹ்வின்
- alladhī atqana
- ٱلَّذِىٓ أَتْقَنَ
- எவன்/செம்மையாகச் செய்தான்
- kulla shayin
- كُلَّ شَىْءٍۚ
- எல்லாவற்றையும்
- innahu
- إِنَّهُۥ
- நிச்சயமாக அவன்
- khabīrun
- خَبِيرٌۢ
- ஆழ்ந்தறிபவன்
- bimā tafʿalūna
- بِمَا تَفْعَلُونَ
- நீங்கள் செய்பவற்றை
நீங்கள் காணும் மலைகளை அவை வெகு உறுதியாக இருப்பதாக எண்ணிக்கொண்டிருக்கிறீர்கள். (எனினும், அந்நாளில்) அவை மேகத்தைப் போல் (ஆகாயத்தில்) பறந்தோடும். ஒவ்வொரு பொருளையும் (படைத்து) அதன் இயற்கை அமைப்பின் மீது உறுதிப்படுத்திய அல்லாஹ்வுடைய கட்டளையால் (அவ்வாறு நடைபெறும்). நிச்சயமாக அவன் நீங்கள் செய்து கொண்டிருக்கும் அனைத்தையும் நன்கறிபவனாகவே இருக்கின்றான். ([௨௭] ஸூரத்துந் நம்லி: ௮௮)Tafseer
مَنْ جَاۤءَ بِالْحَسَنَةِ فَلَهٗ خَيْرٌ مِّنْهَاۚ وَهُمْ مِّنْ فَزَعٍ يَّوْمَىِٕذٍ اٰمِنُوْنَ ٨٩
- man
- مَن
- யார்
- jāa
- جَآءَ
- வருவரோ
- bil-ḥasanati
- بِٱلْحَسَنَةِ
- நன்மையைக் கொண்டு
- falahu
- فَلَهُۥ
- அவருக்கு உண்டு
- khayrun
- خَيْرٌ
- சிறந்தது
- min'hā
- مِّنْهَا
- அதன் காரணமாக
- wahum
- وَهُم
- அவர்கள்
- min fazaʿin
- مِّن فَزَعٍ
- திடுக்கத்திலிருந்து
- yawma-idhin
- يَوْمَئِذٍ
- அந்நாளில்
- āminūna
- ءَامِنُونَ
- பாதுகாப்புப் பெறுவார்கள்
எவரேனும் யாதொரு நன்மையைச் செய்தால், அதற்கு(ரிய கூலியைவிட) மேலானதே அவர்களுக்குக் கிடைக்கின்றது. அன்றி, அந்நாளின் திடுக்கத்திலிருந்தும் அவர்கள் அச்சமற்று விடுகின்றார்கள். ([௨௭] ஸூரத்துந் நம்லி: ௮௯)Tafseer
وَمَنْ جَاۤءَ بِالسَّيِّئَةِ فَكُبَّتْ وُجُوْهُهُمْ فِى النَّارِۗ هَلْ تُجْزَوْنَ اِلَّا مَا كُنْتُمْ تَعْمَلُوْنَ ٩٠
- waman
- وَمَن
- இன்னும் யார்
- jāa
- جَآءَ
- வருவாரோ
- bil-sayi-ati
- بِٱلسَّيِّئَةِ
- தீமையைக் கொண்டு
- fakubbat
- فَكُبَّتْ
- தள்ளப்படும்
- wujūhuhum
- وُجُوهُهُمْ
- அவர்களுடைய முகங்கள்
- fī l-nāri
- فِى ٱلنَّارِ
- நரகத்தில்
- hal tuj'zawna
- هَلْ تُجْزَوْنَ
- கூலி கொடுக்கப்படுவீர்களா?
- illā
- إِلَّا
- தவிர
- mā kuntum
- مَا كُنتُمْ
- எதற்கு நீங்கள் இருந்தீர்கள்
- taʿmalūna
- تَعْمَلُونَ
- செய்கிறீர்கள்
எவரேனும் யாதொரு பாவம் செய்தால், அவர்கள் நரகத்தில் முகங்குப்புறத் தள்ளப்பட்டு "நீங்கள் செய்து கொண்டிருந்தவை களுக்கன்றி (வேறெதற்கும்) உங்களுக்குக் கூலி கொடுக்கப்படுமா?" (என்று கேட்கப்படும்.) ([௨௭] ஸூரத்துந் நம்லி: ௯௦)Tafseer