Skip to content

ஸூரா ஸூரத்துந் நம்லி - Page: 8

An-Naml

(an-Naml)

௭௧

وَيَقُوْلُوْنَ مَتٰى هٰذَا الْوَعْدُ اِنْ كُنْتُمْ صٰدِقِيْنَ ٧١

wayaqūlūna
وَيَقُولُونَ
இன்னும் அவர்கள் கூறுகின்றனர்
matā
مَتَىٰ
எப்போது
hādhā
هَٰذَا
இந்த
l-waʿdu
ٱلْوَعْدُ
வாக்கு
in kuntum
إِن كُنتُمْ
நீங்கள் இருந்தால்
ṣādiqīna
صَٰدِقِينَ
உண்மையாளர்களாக
(நம்பிக்கையாளர்களை நோக்கி நிராகரிக்கும்) அவர்கள் "மெய்யாகவே நீங்கள் உண்மை சொல்பவர்களாக இருந்தால் நீங்கள் பயமுறுத்தும் வேதனை எப்பொழுது வரும்?" என்று கேட்கின்றார்கள். ([௨௭] ஸூரத்துந் நம்லி: ௭௧)
Tafseer
௭௨

قُلْ عَسٰٓى اَنْ يَّكُوْنَ رَدِفَ لَكُمْ بَعْضُ الَّذِيْ تَسْتَعْجِلُوْنَ ٧٢

qul
قُلْ
கூறுவீராக
ʿasā an yakūna
عَسَىٰٓ أَن يَكُونَ
வரக்கூடும்
radifa
رَدِفَ
சமீபமாக
lakum
لَكُم
உங்களுக்கு
baʿḍu
بَعْضُ
சில
alladhī tastaʿjilūna
ٱلَّذِى تَسْتَعْجِلُونَ
எவை/அவசரப்படுகின்றீர்கள்
அதற்கு (நபியே!) நீங்கள் கூறுங்கள்: "நீங்கள் அவசரப்படுபவைகளில் சில இப்பொழுதே உங்களைப் பின் தொடரவும் கூடும்." ([௨௭] ஸூரத்துந் நம்லி: ௭௨)
Tafseer
௭௩

وَاِنَّ رَبَّكَ لَذُوْ فَضْلٍ عَلَى النَّاسِ وَلٰكِنَّ اَكْثَرَهُمْ لَا يَشْكُرُوْنَ ٧٣

wa-inna
وَإِنَّ
நிச்சயமாக
rabbaka
رَبَّكَ
உமது இறைவன்
ladhū faḍlin
لَذُو فَضْلٍ
அருளுடையவன்
ʿalā l-nāsi
عَلَى ٱلنَّاسِ
மக்கள் மீது
walākinna
وَلَٰكِنَّ
எனினும்
aktharahum
أَكْثَرَهُمْ
அதிகமானவர்கள் அவர்களில்
lā yashkurūna
لَا يَشْكُرُونَ
நன்றி அறிய மாட்டார்கள்
ஆயினும், நிச்சயமாக உங்களது இறைவன் மனிதர்கள் மீது மிக்க கிருபையுடையவனாக இருக்கின்றான். (ஆதலால், தண்டனையை இதுவரை தாமதப்படுத்தி இருக்கிறான்.) எனினும், அவர்களில் பெரும்பாலானவர்கள் (இதற்கு) நன்றி செலுத்துவதில்லை. ([௨௭] ஸூரத்துந் நம்லி: ௭௩)
Tafseer
௭௪

وَاِنَّ رَبَّكَ لَيَعْلَمُ مَا تُكِنُّ صُدُوْرُهُمْ وَمَا يُعْلِنُوْنَ ٧٤

wa-inna
وَإِنَّ
நிச்சயமாக
rabbaka
رَبَّكَ
உமது இறைவன்
layaʿlamu
لَيَعْلَمُ
நன்கறிவான்
mā tukinnu
مَا تُكِنُّ
எவற்றை/ மறைக்கின்றன
ṣudūruhum
صُدُورُهُمْ
உள்ளங்கள் அவர்களது
wamā yuʿ'linūna
وَمَا يُعْلِنُونَ
இன்னும் எவற்றை/வெளிப்படுத்துகின்றனர்
(நபியே!) நிச்சயமாக உங்களது இறைவன் அவர்கள் தங்கள் உள்ளங்களில் மறைந்திருப்பதையும், (அதற்கு மாறாக) அவர்கள் வெளிப்படுத்துவதையும் நன்கறிவான். ([௨௭] ஸூரத்துந் நம்லி: ௭௪)
Tafseer
௭௫

وَمَا مِنْ غَاۤىِٕبَةٍ فِى السَّمَاۤءِ وَالْاَرْضِ اِلَّا فِيْ كِتٰبٍ مُّبِيْنٍ ٧٥

wamā
وَمَا
இல்லை
min ghāibatin
مِنْ غَآئِبَةٍ
மறைந்த எதுவும்
fī l-samāi
فِى ٱلسَّمَآءِ
வானத்திலும்
wal-arḍi
وَٱلْأَرْضِ
இன்னும் பூமியிலும்
illā
إِلَّا
தவிர
fī kitābin
فِى كِتَٰبٍ
பதிவேட்டில்
mubīnin
مُّبِينٍ
தெளிவான
வானத்திலோ பூமியிலோ மறைவாக இருக்கும் எதுவுமே ("லவ்ஹுல் மஹ்ஃபூள்" என்னும்) அவனுடைய தெளிவான குறிப்புப் புத்தகத்தில் பதியப்படாமலில்லை. ([௨௭] ஸூரத்துந் நம்லி: ௭௫)
Tafseer
௭௬

اِنَّ هٰذَا الْقُرْاٰنَ يَقُصُّ عَلٰى بَنِيْٓ اِسْرَاۤءِيْلَ اَكْثَرَ الَّذِيْ هُمْ فِيْهِ يَخْتَلِفُوْنَ ٧٦

inna
إِنَّ
நிச்சயமாக
hādhā
هَٰذَا
இந்த
l-qur'āna
ٱلْقُرْءَانَ
குர்ஆன்
yaquṣṣu
يَقُصُّ
விவரிக்கிறது
ʿalā
عَلَىٰ
மீது
banī is'rāīla
بَنِىٓ إِسْرَٰٓءِيلَ
இஸ்ரவேலர்கள்
akthara
أَكْثَرَ
பல விஷயங்களை
alladhī
ٱلَّذِى
எவை
hum
هُمْ
அவர்கள்
fīhi yakhtalifūna
فِيهِ يَخْتَلِفُونَ
அதில்/முரண்படுகின்றனர்
நிச்சயமாக இந்தக் குர்ஆன், இஸ்ராயீலின் சந்ததிகள் எவ்விஷயத்தில் தர்க்கித்துக் கொண்டிருக்கிறார்களோ அவைகளில் பெரும்பாலானவற்றை அவர்களுக்கு விவரித்துக் கூறுகிறது. ([௨௭] ஸூரத்துந் நம்லி: ௭௬)
Tafseer
௭௭

وَاِنَّهٗ لَهُدًى وَّرَحْمَةٌ لِّلْمُؤْمِنِيْنَ ٧٧

wa-innahu
وَإِنَّهُۥ
நிச்சயமாக இது
lahudan
لَهُدًى
நேர்வழியும்
waraḥmatun
وَرَحْمَةٌ
கருணையும்
lil'mu'minīna
لِّلْمُؤْمِنِينَ
நம்பிக்கையாளர்களுக்கு
ஆகவே, அவர்களில் எவர்கள் நம்பிக்கை கொண்டார்களோ அவர்களுக்கு இது நேர்வழி காட்டுவதாகவும் அருளாகவும் இருக்கின்றது. ([௨௭] ஸூரத்துந் நம்லி: ௭௭)
Tafseer
௭௮

اِنَّ رَبَّكَ يَقْضِيْ بَيْنَهُمْ بِحُكْمِهٖۚ وَهُوَ الْعَزِيْزُ الْعَلِيْمُۚ ٧٨

inna
إِنَّ
நிச்சயமாக
rabbaka
رَبَّكَ
உமது இறைவன்
yaqḍī
يَقْضِى
தீர்ப்பளிப்பான்
baynahum
بَيْنَهُم
அவர்களுக்கு மத்தியில்
biḥuk'mihi
بِحُكْمِهِۦۚ
தனது சட்டத்தின் படி
wahuwa
وَهُوَ
அவன்தான்
l-ʿazīzu
ٱلْعَزِيزُ
மிகைத்தவன்
l-ʿalīmu
ٱلْعَلِيمُ
நன்கறிந்தவன்
நிச்சயமாக உங்கள் இறைவன் தன் உத்தரவைக் கொண்டு (இந்தக் குர்ஆன் மூலம்) அவர்களுக்கிடையில் (ஏற்பட்ட விவகாரங்களைப் பற்றி) தீர்ப்பளிக்கின்றான். அவன் (அனைவரையும்) மிகைத்தவனும் (அனைத்தையும்) அறிந்தவனாகவும் இருக்கின்றான். ([௨௭] ஸூரத்துந் நம்லி: ௭௮)
Tafseer
௭௯

فَتَوَكَّلْ عَلَى اللّٰهِ ۗاِنَّكَ عَلَى الْحَقِّ الْمُبِيْنِ ٧٩

fatawakkal
فَتَوَكَّلْ
ஆகவே, நம்பிக்கை வைப்பீராக!
ʿalā
عَلَى
மீது
l-lahi
ٱللَّهِۖ
அல்லாஹ்வின்
innaka
إِنَّكَ
நிச்சயமாக நீர்
ʿalā
عَلَى
மீது
l-ḥaqi
ٱلْحَقِّ
சத்தியத்தின்
l-mubīni
ٱلْمُبِينِ
தெளிவான
ஆகவே, (நபியே!) நீங்கள் அல்லாஹ்வையே நம்புங்கள். நிச்சயமாக நீங்கள் தெளிவான உண்மையின் மீதே இருக்கின்றீர்கள். ([௨௭] ஸூரத்துந் நம்லி: ௭௯)
Tafseer
௮௦

اِنَّكَ لَا تُسْمِعُ الْمَوْتٰى وَلَا تُسْمِعُ الصُّمَّ الدُّعَاۤءَ اِذَا وَلَّوْا مُدْبِرِيْنَ ٨٠

innaka
إِنَّكَ
நிச்சயமாக நீர்
lā tus'miʿu
لَا تُسْمِعُ
நீர் செவியுறச் செய்யமுடியாது
l-mawtā
ٱلْمَوْتَىٰ
மரணித்தவர்களை
walā tus'miʿu
وَلَا تُسْمِعُ
இன்னும் நீர் செவியுறச் செய்ய முடியாது
l-ṣuma
ٱلصُّمَّ
செவிடர்களுக்கும்
l-duʿāa
ٱلدُّعَآءَ
அழைப்பை
idhā wallaw mud'birīna
إِذَا وَلَّوْا۟ مُدْبِرِينَ
அவர்கள் புறமுதுகிட்டவர்களாக திரும்பினால்
(நபியே!) மரணித்தவர்களுக்குக் கேட்கும்படிச் செய்ய நிச்சயமாக உங்களால் முடியாது. (அவ்வாறே உங்களுக்குப்) புறங்காட்டிச் செல்லும் செவிடர்களுக்கு நீங்கள் அழைக்கும் (உங்களுடைய) சப்தத்தைக் கேட்கும்படிச் செய்யவும் முடியாது. ([௨௭] ஸூரத்துந் நம்லி: ௮௦)
Tafseer