Skip to content

ஸூரா ஸூரத்துந் நம்லி - Page: 6

An-Naml

(an-Naml)

௫௧

فَانْظُرْ كَيْفَ كَانَ عَاقِبَةُ مَكْرِهِمْ اَنَّا دَمَّرْنٰهُمْ وَقَوْمَهُمْ اَجْمَعِيْنَ ٥١

fa-unẓur
فَٱنظُرْ
நீர் பார்ப்பீராக!
kayfa
كَيْفَ
எப்படி என்று
kāna
كَانَ
ஆகியது
ʿāqibatu
عَٰقِبَةُ
முடிவு
makrihim
مَكْرِهِمْ
அவர்கள் சூழ்ச்சியின்
annā
أَنَّا
நிச்சயமாக நாம்
dammarnāhum
دَمَّرْنَٰهُمْ
அவர்களை அழித்து விட்டோம்
waqawmahum
وَقَوْمَهُمْ
அவர்களின் மக்கள்
ajmaʿīna
أَجْمَعِينَ
அனைவரையும்
ஆகவே, அவர்களுடைய சூழ்ச்சியின் முடிவு எவ்வாறு ஆயிற்று என்பதை (நபியே!) நீங்கள் கவனித்துப் பாருங்கள். நிச்சயமாக நாம் அவர்களையும் அவர்களுடைய மக்கள் அனைவரையும் அழித்துவிட்டோம். ([௨௭] ஸூரத்துந் நம்லி: ௫௧)
Tafseer
௫௨

فَتِلْكَ بُيُوْتُهُمْ خَاوِيَةً ۢبِمَا ظَلَمُوْاۗ اِنَّ فِيْ ذٰلِكَ لَاٰيَةً لِّقَوْمٍ يَّعْلَمُوْنَ ٥٢

fatil'ka
فَتِلْكَ
இதோ
buyūtuhum
بُيُوتُهُمْ
அவர்களது வீடுகள்
khāwiyatan
خَاوِيَةًۢ
வெறுமையாக இருக்கின்றன
bimā ẓalamū
بِمَا ظَلَمُوٓا۟ۗ
அவர்கள் தீமை செய்ததால்
inna
إِنَّ
நிச்சயமாக
fī dhālika
فِى ذَٰلِكَ
இதில் இருக்கிறது
laāyatan
لَءَايَةً
ஓர் அத்தாட்சி
liqawmin
لِّقَوْمٍ
மக்களுக்கு
yaʿlamūna
يَعْلَمُونَ
அறிகின்ற
அவர்கள் செய்து கொண்டிருந்த அநியாயங்களின் காரணமாக (அழிந்து போன) அவர்களுடைய வீடுகள் இதோ பாழடைந்து கிடக்கின்றன. அறியக்கூடிய மக்களுக்கு நிச்சயமாக இதில் ஒரு (நல்ல) படிப்பினை இருக்கின்றது. ([௨௭] ஸூரத்துந் நம்லி: ௫௨)
Tafseer
௫௩

وَاَنْجَيْنَا الَّذِيْنَ اٰمَنُوْا وَكَانُوْا يَتَّقُوْنَ ٥٣

wa-anjaynā
وَأَنجَيْنَا
நாம் பாதுகாத்தோம்
alladhīna āmanū
ٱلَّذِينَ ءَامَنُوا۟
நம்பிக்கை கொண்டவர்களை
wakānū yattaqūna
وَكَانُوا۟ يَتَّقُونَ
அவர்கள் அஞ்சிக் கொண்டிருந்தனர்
அவர்களில் எவர்கள் நம்பிக்கை கொண்டு (அல்லாஹ்வுக்குப்) பயந்து கொண்டிருந்தார்களோ, அவர்களை நாம் பாதுகாத்துக் கொண்டோம். ([௨௭] ஸூரத்துந் நம்லி: ௫௩)
Tafseer
௫௪

وَلُوْطًا اِذْ قَالَ لِقَوْمِهٖٓ اَتَأْتُوْنَ الْفَاحِشَةَ وَاَنْتُمْ تُبْصِرُوْنَ ٥٤

walūṭan
وَلُوطًا
இன்னும் லூத்தையும்
idh
إِذْ
கூறிய சமயத்தை
qāla
قَالَ
நினைவு கூறுவீராக!
liqawmihi
لِقَوْمِهِۦٓ
அவர் தம் மக்களுக்கு
atatūna
أَتَأْتُونَ
நீங்கள் செய்கிறீர்களா?
l-fāḥishata
ٱلْفَٰحِشَةَ
மகா அசிங்கமான
wa-antum
وَأَنتُمْ
நீங்கள்
tub'ṣirūna
تُبْصِرُونَ
அறியத்தான் செய்கிறீர்கள்
லூத்தையும் (நாம் நம்முடைய தூதராக அனுப்பி வைத்தோம்) அவர் தன் மக்களை நோக்கி (மறைவு திரைவின்றி) "மக்கள் முன்பாகவே நீங்கள் மானக்கேடான காரியங்களைச் செய்கின்றீர்கள். ([௨௭] ஸூரத்துந் நம்லி: ௫௪)
Tafseer
௫௫

اَىِٕنَّكُمْ لَتَأْتُوْنَ الرِّجَالَ شَهْوَةً مِّنْ دُوْنِ النِّسَاۤءِ ۗبَلْ اَنْتُمْ قَوْمٌ تَجْهَلُوْنَ ٥٥

a-innakum
أَئِنَّكُمْ
?/நீங்கள்
latatūna
لَتَأْتُونَ
தீர்க்கிறீர்கள்
l-rijāla
ٱلرِّجَالَ
ஆண்களிடமா
shahwatan
شَهْوَةً
இச்சையை
min dūni
مِّن دُونِ
அன்றி
l-nisāi
ٱلنِّسَآءِۚ
பெண்கள்
bal
بَلْ
மாறாக
antum
أَنتُمْ
நீங்கள்
qawmun
قَوْمٌ
மக்கள்
tajhalūna
تَجْهَلُونَ
நீங்கள் அறிய மாட்டீர்கள்
நீங்கள் பெண்களைவிட்டு ஆண்களிடம் மோகங்கொண்டு வருகின்றீர்களே! நீங்கள் முற்றிலும் அறிவீனமான மக்களாக இருக்கிறீர்கள்" என்று கூறினார். ([௨௭] ஸூரத்துந் நம்லி: ௫௫)
Tafseer
௫௬

۞ فَمَا كَانَ جَوَابَ قَوْمِهٖٓ اِلَّآ اَنْ قَالُوْٓا اَخْرِجُوْٓا اٰلَ لُوْطٍ مِّنْ قَرْيَتِكُمْۙ اِنَّهُمْ اُنَاسٌ يَّتَطَهَّرُوْنَ ٥٦

famā kāna
فَمَا كَانَ
இருக்கவில்லை
jawāba
جَوَابَ
பதிலோ
qawmihi
قَوْمِهِۦٓ
அவருடைய மக்களின்
illā
إِلَّآ
தவிர
an qālū
أَن قَالُوٓا۟
கூறுவதாகவே
akhrijū
أَخْرِجُوٓا۟
வெளியேற்றுங்கள்
āla
ءَالَ
குடும்பத்தாரை
lūṭin
لُوطٍ
லூத்துடைய
min qaryatikum
مِّن قَرْيَتِكُمْۖ
உங்கள் ஊரிலிருந்து
innahum
إِنَّهُمْ
நிச்சயமாக அவர்கள்
unāsun
أُنَاسٌ
அந்த மக்கள்
yataṭahharūna
يَتَطَهَّرُونَ
அசூசைப்படுகிறார்கள்
அதற்கவர்கள் (தங்கள் மக்களை நோக்கி) "லூத்துடைய குடும்பத்தை உங்கள் ஊரை விட்டும் நீங்கள் ஓட்டிவிடுங்கள். நிச்சயமாக அவர் மிகப் பரிசுத்தமான மனிதர்கள் (போல் பேசுகின்றனர்)" என்று (பரிகாசமாகக்) கூறினார்கள். ([௨௭] ஸூரத்துந் நம்லி: ௫௬)
Tafseer
௫௭

فَاَنْجَيْنٰهُ وَاَهْلَهٗٓ اِلَّا امْرَاَتَهٗ قَدَّرْنٰهَا مِنَ الْغٰبِرِيْنَ ٥٧

fa-anjaynāhu
فَأَنجَيْنَٰهُ
எனவே, நாம் அவரை(யும்) பாதுகாத்தோம்
wa-ahlahu
وَأَهْلَهُۥٓ
அவருடைய குடும்பத்தையும்
illā
إِلَّا
தவிர
im'ra-atahu
ٱمْرَأَتَهُۥ
அவருடைய மனைவியை
qaddarnāhā
قَدَّرْنَٰهَا
அவளை முடிவு செய்தோம்
mina l-ghābirīna
مِنَ ٱلْغَٰبِرِينَ
மிஞ்சியவர்களில்
ஆகவே, அவரையும் அவருடைய குடும்பத்தாரையும் நாம் பாதுகாத்துக் கொண்டோம். எனினும், அவருடைய மனைவியைத் தவிர. ஏனென்றால், அவள் (அந்தப் பாவிகளுடன்) தங்கிவிட வேண்டுமென்று (ஏற்கனவே) தீர்மானித்து விட்டோம். ([௨௭] ஸூரத்துந் நம்லி: ௫௭)
Tafseer
௫௮

وَاَمْطَرْنَا عَلَيْهِمْ مَّطَرًاۚ فَسَاۤءَ مَطَرُ الْمُنْذَرِيْنَ ࣖ ٥٨

wa-amṭarnā
وَأَمْطَرْنَا
பொழிவித்தோம்
ʿalayhim
عَلَيْهِم
அவர்கள் மீது
maṭaran
مَّطَرًاۖ
மழை
fasāa
فَسَآءَ
மிகக் கெட்டதாகும்
maṭaru
مَطَرُ
அந்த மழை
l-mundharīna
ٱلْمُنذَرِينَ
எச்சரிக்கப்பட்டவர்களின்
ஆகவே, அவர்கள் மீது கல்மழையை நாம் பொழிந்தோம். பயமுறுத்தப்பட்ட அவர்கள் மீது (பொழியப்பட்ட) கல்மழை மகா கெட்டது. ([௨௭] ஸூரத்துந் நம்லி: ௫௮)
Tafseer
௫௯

قُلِ الْحَمْدُ لِلّٰهِ وَسَلٰمٌ عَلٰى عِبَادِهِ الَّذِيْنَ اصْطَفٰىۗ ءٰۤاللّٰهُ خَيْرٌ اَمَّا يُشْرِكُوْنَ ۔ ٥٩

quli
قُلِ
கூறுவீராக
l-ḥamdu
ٱلْحَمْدُ
எல்லாப் புகழும்
lillahi
لِلَّهِ
அல்லாஹ்விற்கே
wasalāmun
وَسَلَٰمٌ
இன்னும் ஸலாம்
ʿalā ʿibādihi
عَلَىٰ عِبَادِهِ
அவனுடைய அடியார்களுக்கு
alladhīna iṣ'ṭafā
ٱلَّذِينَ ٱصْطَفَىٰٓۗ
எவர்கள்/அவன் தேர்ந்தெடுத்தான்
āllahu
ءَآللَّهُ
?/அல்லாஹ்
khayrun
خَيْرٌ
சிறந்தவையா
ammā yush'rikūna
أَمَّا يُشْرِكُونَ
அல்லது அவர்கள் இணைவைப்பவையா?
ஆகவே, (நபியே!) புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக் குரியனவே. தன்னுடைய அடியார்களில் அவன் தேர்ந்தெடுத்துக் கொண்டவர்களின் மீது "ஈடேற்றம் உண்டாவதாக" என்றும் "அல்லாஹ் மேலானவனா அல்லது அவர்கள் அவனுக்கு இணையாக்குகின்றவைகள் மேலானவைகளா?" என்று கேளுங்கள். ([௨௭] ஸூரத்துந் நம்லி: ௫௯)
Tafseer
௬௦

اَمَّنْ خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ وَاَنْزَلَ لَكُمْ مِّنَ السَّمَاۤءِ مَاۤءً فَاَنْۢبَتْنَا بِهٖ حَدَاۤىِٕقَ ذَاتَ بَهْجَةٍۚ مَا كَانَ لَكُمْ اَنْ تُنْۢبِتُوْا شَجَرَهَاۗ ءَاِلٰهٌ مَّعَ اللّٰهِ ۗبَلْ هُمْ قَوْمٌ يَّعْدِلُوْنَ ۗ ٦٠

amman
أَمَّنْ
?/எவன்
khalaqa
خَلَقَ
படைத்தான்
l-samāwāti
ٱلسَّمَٰوَٰتِ
வானங்களையும்
wal-arḍa
وَٱلْأَرْضَ
பூமியையும்
wa-anzala
وَأَنزَلَ
இன்னும் அவன் இறக்கினான்
lakum
لَكُم
உங்களுக்கு
mina l-samāi
مِّنَ ٱلسَّمَآءِ
மேகத்திலிருந்து
māan
مَآءً
மழையை
fa-anbatnā
فَأَنۢبَتْنَا
நாம் முளைக்க வைத்தோம்
bihi
بِهِۦ
அதன்மூலம்
ḥadāiqa
حَدَآئِقَ
தோட்டங்களை
dhāta bahjatin
ذَاتَ بَهْجَةٍ
அழகிய காட்சியுடைய
mā kāna
مَّا كَانَ
முடியாது
lakum
لَكُمْ
உங்களால்
an tunbitū
أَن تُنۢبِتُوا۟
நீங்கள் முளைக்க வைக்க
shajarahā
شَجَرَهَآۗ
அதன் மரங்களை
a-ilāhun
أَءِلَٰهٌ
(வணங்கப்படும் வேறு) ஒரு கடவுளா?!
maʿa l-lahi
مَّعَ ٱللَّهِۚ
அல்லாஹ்வுடன்
bal
بَلْ
மாறாக
hum
هُمْ
அவர்கள்
qawmun
قَوْمٌ
மக்கள்
yaʿdilūna
يَعْدِلُونَ
இணைவைக்கின்றனர்
அன்றி, வானங்களையும் பூமியையும் படைத்து, மேகத்தில் இருந்து உங்களுக்காக மழை பொழியச் செய்பவன் யார்? நாமே அதனைக் கொண்டு கண்ணைக் கவரும் அழகான தோட்டங் களையும் உற்பத்தி செய்கிறோம். (நம்முடைய உதவியின்றி) அதன் மரங்களை முளைப்பிக்க உங்களால் முடியாது. ஆகவே, அல்லாஹ்வுடன் வணக்கத்திற்குரிய வேறொரு இறைவன் இருக்கின்றானா? (இவ்வாறிருந்தும்) இவர்கள் (தங்கள் கற்பனை தெய்வங்களை இறைவனுக்குச்) சமமாக்குகின்றனர். ([௨௭] ஸூரத்துந் நம்லி: ௬௦)
Tafseer