اَلَّا تَعْلُوْا عَلَيَّ وَأْتُوْنِيْ مُسْلِمِيْنَ ࣖ ٣١
- allā taʿlū
- أَلَّا تَعْلُوا۟
- நீங்கள் பெருமை காட்டாதீர்கள்!
- ʿalayya
- عَلَىَّ
- என்னிடம்
- watūnī
- وَأْتُونِى
- என்னிடம் வந்து விடுங்கள்!
- mus'limīna
- مُسْلِمِينَ
- பணிந்தவர்களாக
நீங்கள் (கர்வம் கொண்டு) என்னிடம் பெருமை பாராட்டாதீர்கள். (இறைவனுக்கு) முற்றிலும் வழிப்பட்டவர்களாக என்னிடம் வாருங்கள்" (என்றும் எழுதப்பட்டிருக்கின்றது என்று கூறி) ([௨௭] ஸூரத்துந் நம்லி: ௩௧)Tafseer
قَالَتْ يٰٓاَيُّهَا الْمَلَؤُا اَفْتُوْنِيْ فِيْٓ اَمْرِيْۚ مَا كُنْتُ قَاطِعَةً اَمْرًا حَتّٰى تَشْهَدُوْنِ ٣٢
- qālat
- قَالَتْ
- அவள் கூறினாள்
- yāayyuhā l-mala-u
- يَٰٓأَيُّهَا ٱلْمَلَؤُا۟
- பிரமுகர்களே!
- aftūnī
- أَفْتُونِى
- நீங்கள் எனக்கு ஆலோசனை கூறுங்கள்
- fī amrī
- فِىٓ أَمْرِى
- எனது காரியத்தில்
- mā kuntu
- مَا كُنتُ
- நான் இல்லை
- qāṭiʿatan
- قَاطِعَةً
- முடிவு செய்பவளாக
- amran
- أَمْرًا
- ஒரு காரியத்தை
- ḥattā
- حَتَّىٰ
- வரை
- tashhadūni
- تَشْهَدُونِ
- நீங்கள் என்னிடம் ஆஜராகின்ற
(தன்னுடைய பிரதானிகளை நோக்கி) "தலைவர்களே என்னுடைய இவ்விஷயத்தில் நீங்கள் (உங்கள்) ஆலோசனைகளைக் கூறுங்கள். என் சமூகத்தில் நீங்கள் நேராக வந்து (அபிப்பிராயம்) கூறாத வரையில் நான் எவ்விஷயத்தையும் முடிவு செய்பவளல்ல" என்று அவள் கூறினாள். ([௨௭] ஸூரத்துந் நம்லி: ௩௨)Tafseer
قَالُوْا نَحْنُ اُولُوْا قُوَّةٍ وَّاُولُوْا بَأْسٍ شَدِيْدٍ ەۙ وَّالْاَمْرُ اِلَيْكِ فَانْظُرِيْ مَاذَا تَأْمُرِيْنَ ٣٣
- qālū
- قَالُوا۟
- அவர்கள் கூறினர்
- naḥnu
- نَحْنُ
- நாங்கள்
- ulū quwwatin
- أُو۟لُوا۟ قُوَّةٍ
- பலமுடையவர்கள்
- wa-ulū basin
- وَأُو۟لُوا۟ بَأْسٍ
- இன்னும் வலிமை உடையவர்கள்
- shadīdin
- شَدِيدٍ
- கடும்
- wal-amru
- وَٱلْأَمْرُ
- இன்னும் முடிவு
- ilayki
- إِلَيْكِ
- உன்னிடம்இருக்கிறது
- fa-unẓurī
- فَٱنظُرِى
- ஆகவே, நீ நன்கு யோசித்துக் கொள்!
- mādhā tamurīna
- مَاذَا تَأْمُرِينَ
- நீ உத்தரவிடுவதை
அதற்கவர்கள் "நாங்கள் பலவான்களாகவும், கடுமையாக போர் செய்யக் கூடியவர்களாகவும் இருக்கின்றோம். (போர் செய்வதோ, சமாதானம் செய்வதோ) உங்கள் உத்தரவைப் பொறுத்திருக்கின்றது. ஆகவே, நீங்கள் உத்தரவு செய்வ(திலுள்ள சாதக பாதகத்)தை நன்கு கவனித்துப் பாருங்கள்" என்று கூறினார்கள். ([௨௭] ஸூரத்துந் நம்லி: ௩௩)Tafseer
قَالَتْ اِنَّ الْمُلُوْكَ اِذَا دَخَلُوْا قَرْيَةً اَفْسَدُوْهَا وَجَعَلُوْٓا اَعِزَّةَ اَهْلِهَآ اَذِلَّةً ۚوَكَذٰلِكَ يَفْعَلُوْنَ ٣٤
- qālat
- قَالَتْ
- அவள் கூறினாள்
- inna l-mulūka
- إِنَّ ٱلْمُلُوكَ
- நிச்சயமாகமன்னர்கள்
- idhā dakhalū
- إِذَا دَخَلُوا۟
- நுழைந்து விட்டால்
- qaryatan
- قَرْيَةً
- ஓர் ஊருக்குள்
- afsadūhā
- أَفْسَدُوهَا
- அதை சின்னா பின்னப்படுத்தி விடுவார்கள்
- wajaʿalū
- وَجَعَلُوٓا۟
- ஆக்கிவிடுவார்கள்
- aʿizzata
- أَعِزَّةَ
- கண்ணியவான்களை
- ahlihā adhillatan
- أَهْلِهَآ أَذِلَّةًۖ
- அந்த ஊர் வாசிகளில் உள்ள/இழிவானவர்களாக
- wakadhālika
- وَكَذَٰلِكَ
- அப்படித்தான்
- yafʿalūna
- يَفْعَلُونَ
- செய்வார்கள்
அதற்கவள் "அரசர்கள் யாதொரு ஊரில் நுழைந்தால் நிச்சயமாக அதனை அழித்துவிடுகின்றனர். அன்றி, அங்குள்ள கண்ணியவான்களை கேவலப்பட்டவர்களாக ஆக்கிவிடுகின்றனர். (ஆகவே,) இவர்களும் இவ்வாறே செய்யக்கூடும். ([௨௭] ஸூரத்துந் நம்லி: ௩௪)Tafseer
وَاِنِّيْ مُرْسِلَةٌ اِلَيْهِمْ بِهَدِيَّةٍ فَنٰظِرَةٌ ۢبِمَ يَرْجِعُ الْمُرْسَلُوْنَ ٣٥
- wa-innī
- وَإِنِّى
- நிச்சயமாக நான்
- mur'silatun
- مُرْسِلَةٌ
- அனுப்புகிறேன்
- ilayhim
- إِلَيْهِم
- அவர்களிடம்
- bihadiyyatin
- بِهَدِيَّةٍ
- ஓர் அன்பளிப்பை
- fanāẓiratun
- فَنَاظِرَةٌۢ
- பார்க்கிறேன்
- bima
- بِمَ
- என்ன பதில்
- yarjiʿu
- يَرْجِعُ
- திரும்ப கொண்டு வருகிறார்கள்
- l-mur'salūna
- ٱلْمُرْسَلُونَ
- தூதர்கள்
ஆகவே, நான் அவர்களிடம் (உயர்ந்த பொருள்களைக் கொண்ட) ஒரு காணிக்கையை அனுப்பி வைத்து (அதனைக் கொண்டு செல்லும்) தூதர்கள் (அவரிடமிருந்து) என்ன பதில் கொண்டு வருகின்றார்கள் என்பதை நான் எதிர்பார்த்திருப்பேன்" என்று கூறி (அவ்வாறே அனுப்பி வைத்தாள்.) ([௨௭] ஸூரத்துந் நம்லி: ௩௫)Tafseer
فَلَمَّا جَاۤءَ سُلَيْمٰنَ قَالَ اَتُمِدُّوْنَنِ بِمَالٍ فَمَآ اٰتٰىنِ َۧ اللّٰهُ خَيْرٌ مِّمَّآ اٰتٰىكُمْۚ بَلْ اَنْتُمْ بِهَدِيَّتِكُمْ تَفْرَحُوْنَ ٣٦
- falammā jāa
- فَلَمَّا جَآءَ
- அவர் வந்தபோது
- sulaymāna
- سُلَيْمَٰنَ
- சுலைமானிடம்
- qāla
- قَالَ
- அவர் கூறினார்
- atumiddūnani
- أَتُمِدُّونَنِ
- நீங்கள் எனக்கு தருகிறீர்களா?
- bimālin
- بِمَالٍ
- செல்வத்தை
- famā ātāniya
- فَمَآ ءَاتَىٰنِۦَ
- எனக்கு தந்திருப்பது
- l-lahu
- ٱللَّهُ
- அல்லாஹ்
- khayrun
- خَيْرٌ
- மிகச் சிறந்தது
- mimmā ātākum
- مِّمَّآ ءَاتَىٰكُم
- அவன் உங்களுக்கு தந்திருப்பதை விட
- bal
- بَلْ
- மாறாக
- antum
- أَنتُم
- நீங்கள்
- bihadiyyatikum
- بِهَدِيَّتِكُمْ
- உங்கள் அன்பளிப்புகளைக் கொண்டு
- tafraḥūna
- تَفْرَحُونَ
- பெருமிதம் அடைவீர்கள்
அந்தத் தூதர்கள் ஸுலைமானிடம் வரவே (ஸுலைமான் அவர்களை நோக்கி) "நீங்கள் பொருளைக் கொண்டு எனக்கு உதவி செய்யக் கருதுகின்றீர்களா? அல்லாஹ் எனக்குக் கொடுத்து இருப்பவைகள் உங்களுக்குக் கொடுத்திருப்பவைகளை விட (அதிகமாகவும்) மேலானதாகவும் இருக்கின்றன. உங்களுடைய இக்காணிக்கையைக் கொண்டு நீங்களே சந்தோஷமடையுங்கள். (அது எனக்கு வேண்டியதில்லை) என்றும், ([௨௭] ஸூரத்துந் நம்லி: ௩௬)Tafseer
اِرْجِعْ اِلَيْهِمْ فَلَنَأْتِيَنَّهُمْ بِجُنُوْدٍ لَّا قِبَلَ لَهُمْ بِهَا وَلَنُخْرِجَنَّهُمْ مِّنْهَآ اَذِلَّةً وَّهُمْ صَاغِرُوْنَ ٣٧
- ir'jiʿ
- ٱرْجِعْ
- நீ திரும்பிப் போ!
- ilayhim
- إِلَيْهِمْ
- அவர்களிடம்
- falanatiyannahum
- فَلَنَأْتِيَنَّهُم
- நாம் அவர்களிடம் கொண்டு வருவோம்
- bijunūdin
- بِجُنُودٍ
- இராணுவங்களை
- lā qibala
- لَّا قِبَلَ
- அறவே வலிமை இருக்காது
- lahum
- لَهُم
- அவர்களுக்கு
- bihā
- بِهَا
- அவர்களை எதிர்க்க
- walanukh'rijannahum
- وَلَنُخْرِجَنَّهُم
- நிச்சயமாக அவர்களை நாம் வெளியேற்றுவோம்
- min'hā
- مِّنْهَآ
- அதிலிருந்து
- adhillatan
- أَذِلَّةً
- இழிவானவர்களாக
- wahum
- وَهُمْ
- அவர்கள்
- ṣāghirūna
- صَٰغِرُونَ
- சிறுமைப்படுவார்கள்
நீங்கள் அவர்களிடம் திரும்பச் செல்லுங்கள். எவராலும் எதிர்க்க முடியாததொரு ராணுவத்துடன் நிச்சயமாக நாங்கள் அவர்களிடம் வருவோம். அவர்களை சிறுமைப்பட்டவர்களாக அவ்வூரிலிருந்து துரத்தி விடுவோம்" என்று (கூறி அனுப்பிவிட்டு,) ([௨௭] ஸூரத்துந் நம்லி: ௩௭)Tafseer
قَالَ يٰٓاَيُّهَا الْمَلَؤُا اَيُّكُمْ يَأْتِيْنِيْ بِعَرْشِهَا قَبْلَ اَنْ يَّأْتُوْنِيْ مُسْلِمِيْنَ ٣٨
- qāla
- قَالَ
- அவர் கூறினார்
- yāayyuhā l-mala-u
- يَٰٓأَيُّهَا ٱلْمَلَؤُا۟
- பிரமுகர்களே!
- ayyukum
- أَيُّكُمْ
- உங்களில் யார்
- yatīnī
- يَأْتِينِى
- என்னிடம் கொண்டு வருவார்
- biʿarshihā
- بِعَرْشِهَا
- அவளுடைய அரச கட்டிலை
- qabla
- قَبْلَ
- முன்னர்
- an yatūnī
- أَن يَأْتُونِى
- அவர்கள் என்னிடம் வருவதற்கு
- mus'limīna
- مُسْلِمِينَ
- பணிந்தவர்களாக
(ஸுலைமான் தன் மந்திரிகளை நோக்கி) "சன்றோர்களே! அவர்கள் கட்டுப்பட்டவர்களாக என்னிடம் வந்து சேருவதற்கு முன்னதாகவே அவளுடைய சிம்மாசனத்தை என்னிடம் கொண்டு வருபவர் உங்களில் யார்?" என்று கேட்டார். ([௨௭] ஸூரத்துந் நம்லி: ௩௮)Tafseer
قَالَ عِفْرِيْتٌ مِّنَ الْجِنِّ اَنَا۠ اٰتِيْكَ بِهٖ قَبْلَ اَنْ تَقُوْمَ مِنْ مَّقَامِكَۚ وَاِنِّيْ عَلَيْهِ لَقَوِيٌّ اَمِيْنٌ ٣٩
- qāla
- قَالَ
- கூறியது
- ʿif'rītun
- عِفْرِيتٌ
- சாதுர்யமான ஒன்று
- mina l-jini
- مِّنَ ٱلْجِنِّ
- ஜின்களில்
- anā
- أَنَا۠
- நான்
- ātīka
- ءَاتِيكَ
- உம்மிடம் கொண்டு வருவேன்
- bihi
- بِهِۦ
- அதை
- qabla
- قَبْلَ
- முன்னர்
- an taqūma
- أَن تَقُومَ
- நீர் எழுவதற்கு
- min maqāmika
- مِن مَّقَامِكَۖ
- உமது இடத்திலிருந்து
- wa-innī
- وَإِنِّى
- நிச்சயமாக நான்
- ʿalayhi
- عَلَيْهِ
- அதற்கு
- laqawiyyun
- لَقَوِىٌّ
- ஆற்றல் உள்ளவன்
- amīnun
- أَمِينٌ
- நம்பிக்கைக்குரியவன்
அதற்கு ஜின்களிலுள்ள "இஃப்ரீத்" (என்னும் ஒரு வீரன்) "நீங்கள் இந்தச் சபையை முடித்துக்கொண்டு எழுந்திருப்பதற்கு முன்னதாகவே அதனை நான் கொண்டு வந்துவிடுவேன். நிச்சயமாக நான் இவ்வாறு செய்ய மிக்க சக்தியும் நம்பிக்கையும் உடையவன்" என்று கூறினான். ([௨௭] ஸூரத்துந் நம்லி: ௩௯)Tafseer
قَالَ الَّذِيْ عِنْدَهٗ عِلْمٌ مِّنَ الْكِتٰبِ اَنَا۠ اٰتِيْكَ بِهٖ قَبْلَ اَنْ يَّرْتَدَّ اِلَيْكَ طَرْفُكَۗ فَلَمَّا رَاٰهُ مُسْتَقِرًّا عِنْدَهٗ قَالَ هٰذَا مِنْ فَضْلِ رَبِّيْۗ لِيَبْلُوَنِيْٓ ءَاَشْكُرُ اَمْ اَكْفُرُۗ وَمَنْ شَكَرَ فَاِنَّمَا يَشْكُرُ لِنَفْسِهٖۚ وَمَنْ كَفَرَ فَاِنَّ رَبِّيْ غَنِيٌّ كَرِيْمٌ ٤٠
- qāla
- قَالَ
- ஒருவர் கூறினார்
- alladhī ʿindahu
- ٱلَّذِى عِندَهُۥ
- எவர்/தன்னிடம்
- ʿil'mun
- عِلْمٌ
- ஞானம்
- mina l-kitābi
- مِّنَ ٱلْكِتَٰبِ
- வேதத்தின்
- anā
- أَنَا۠
- நான்
- ātīka
- ءَاتِيكَ
- உம்மிடம் கொண்டு வருவேன்
- bihi
- بِهِۦ
- அதை
- qabla
- قَبْلَ
- முன்னர்
- an yartadda
- أَن يَرْتَدَّ
- திரும்புவதற்கு
- ilayka
- إِلَيْكَ
- உன் பக்கம்
- ṭarfuka
- طَرْفُكَۚ
- உமது பார்வை
- falammā raāhu
- فَلَمَّا رَءَاهُ
- அவர் பார்த்த போது
- mus'taqirran
- مُسْتَقِرًّا
- நிலையாகி விட்டதாக
- ʿindahu
- عِندَهُۥ
- தன்னிடம்
- qāla
- قَالَ
- கூறினார்
- hādhā min faḍli
- هَٰذَا مِن فَضْلِ
- இது/அருளாகும்
- rabbī
- رَبِّى
- என் இறைவனின்
- liyabluwanī
- لِيَبْلُوَنِىٓ
- அவன் என்னை சோதிப்பதற்காக
- a-ashkuru
- ءَأَشْكُرُ
- நான் நன்றி செலுத்துகிறேனா?
- am
- أَمْ
- அல்லது
- akfuru
- أَكْفُرُۖ
- நன்றி கெடுகிறேனா?
- waman
- وَمَن
- யார்
- shakara
- شَكَرَ
- நன்றிசெலுத்துகிறாரோ
- fa-innamā yashkuru
- فَإِنَّمَا يَشْكُرُ
- அவர் நன்றி செலுத்துவதெல்லாம்
- linafsihi
- لِنَفْسِهِۦۖ
- அவருக்குத்தான்
- waman
- وَمَن
- யார்
- kafara
- كَفَرَ
- நிராகரிப்பாரோ
- fa-inna
- فَإِنَّ
- ஏனெனில்
- rabbī
- رَبِّى
- என் இறைவன்
- ghaniyyun
- غَنِىٌّ
- முற்றிலும் தேவை அற்றவன்
- karīmun
- كَرِيمٌ
- பெரும் தயாளன்
(எனினும், அவர்களில்) வேத ஞானம் பெற்ற ஒருவர் (இருந்தார். அவர் ஸுலைமான் நபியை நோக்கி) "நீங்கள் கண்மூடித் திறப்பதற்குள் அதனை நான் உங்களிடம் கொண்டு வந்துவிடுவேன்" என்று கூறினார். (அவ்வாறே கொண்டு வந்து சேர்த்தார்.) அது தன் முன் (கொண்டு வந்து வைக்கப்பட்டு) இருப்பதை (ஸுலைமான்) கண்டதும், "இது நான் அவனுக்கு நன்றி செலுத்துகின்றேனா இல்லையா என்று என்னைச் சோதிப்பதற்காக என் இறைவன் எனக்குப் புரிந்த பேரருளாகும். எவன் (இறைவனுக்கு) நன்றி செலுத்துகிறானோ அவன் தனக்கே நன்மை செய்து கொள்கிறான். எவன் நன்றியை நிராகரிக்கின்றானோ (அதனால் என் இறைவனுக்கு யாதொரு நஷ்டமுமில்லை.) நிச்சயமாக என் இறைவன் (எவருடைய) தேவையற்றவனும், மிக்க கண்ணியமானவனாகவும் இருக்கிறான்" என்று கூறி (தன் வேலைக்காரர்களை நோக்கி,) ([௨௭] ஸூரத்துந் நம்லி: ௪௦)Tafseer