Skip to content

ஸூரா ஸூரத்துந் நம்லி - Page: 3

An-Naml

(an-Naml)

௨௧

لَاُعَذِّبَنَّهٗ عَذَابًا شَدِيْدًا اَوْ لَاَا۟ذْبَحَنَّهٗٓ اَوْ لَيَأْتِيَنِّيْ بِسُلْطٰنٍ مُّبِيْنٍ ٢١

la-uʿadhibannahu ʿadhāban
لَأُعَذِّبَنَّهُۥ عَذَابًا
நிச்சயமாக நான் அதை தண்டிப்பேன்
shadīdan
شَدِيدًا
கடுமையாக
aw
أَوْ
அல்லது
laādh'baḥannahu
لَأَا۟ذْبَحَنَّهُۥٓ
அதை நிச்சயமாக நான் அறுத்து விடுவேன்
aw
أَوْ
அல்லது
layatiyannī
لَيَأْتِيَنِّى
அது என்னிடம் கொண்டு வரவேண்டும்
bisul'ṭānin
بِسُلْطَٰنٍ
ஆதாரத்தை
mubīnin
مُّبِينٍ
தெளிவான
(அவ்வாறாயின்) நிச்சயமாக நான் அதனைக் கடினமான வேதனை செய்வேன். அல்லது அதனை அறுத்துவிடுவேன். அல்லது தக்க ஆதாரத்தை அது (என் முன்) கொண்டு வர வேண்டும்" என்று கூறினார். ([௨௭] ஸூரத்துந் நம்லி: ௨௧)
Tafseer
௨௨

فَمَكَثَ غَيْرَ بَعِيْدٍ فَقَالَ اَحَطْتُّ بِمَا لَمْ تُحِطْ بِهٖ وَجِئْتُكَ مِنْ سَبَاٍ ۢبِنَبَاٍ يَّقِيْنٍ ٢٢

famakatha
فَمَكَثَ
அவர் தாமதித்தார்
ghayra baʿīdin
غَيْرَ بَعِيدٍ
சிறிது நேரம்தான்
faqāla
فَقَالَ
ஆக, அது கூறியது
aḥaṭtu
أَحَطتُ
அறிந்துள்ளேன்
bimā lam tuḥiṭ bihi
بِمَا لَمْ تُحِطْ بِهِۦ
எதை/நீ்ர் அறியவில்லை/அதை
waji'tuka
وَجِئْتُكَ
உம்மிடம் கொண்டு வந்துள்ளேன்
min saba-in
مِن سَبَإٍۭ
‘சபா’ இனத்தாரிடமிருந்து
binaba-in
بِنَبَإٍ
செய்தியை
yaqīnin
يَقِينٍ
உறுதியான
(இவ்வாறு கூறி) அதிக நேரமாகவில்லை. (அதற்குள் ஹுத்ஹுத் என்னும் பறவை அவர் முன் தோன்றி) "நீங்கள் அறியாத ஒரு விஷயத்தை நான் அறிந்துகொண்டு "ஸபா"வைப் பற்றி நிச்சயமான (உண்மைச்) செய்தியைக் கொண்டு வந்திருக்கிறேன். ([௨௭] ஸூரத்துந் நம்லி: ௨௨)
Tafseer
௨௩

اِنِّيْ وَجَدْتُّ امْرَاَةً تَمْلِكُهُمْ وَاُوْتِيَتْ مِنْ كُلِّ شَيْءٍ وَّلَهَا عَرْشٌ عَظِيْمٌ ٢٣

innī
إِنِّى
நிச்சயமாக நான்
wajadttu
وَجَدتُّ
கண்டேன்
im'ra-atan
ٱمْرَأَةً
ஒரு பெண்ணை
tamlikuhum
تَمْلِكُهُمْ
அவர்களை ஆட்சி செய்கின்றவளாக
waūtiyat
وَأُوتِيَتْ
அவள் வழங்கப்பட்டு இருக்கிறாள்
min kulli shayin
مِن كُلِّ شَىْءٍ
எல்லாம்
walahā
وَلَهَا
அவளுக்கு சொந்தமான
ʿarshun
عَرْشٌ
அரச கட்டிலும்
ʿaẓīmun
عَظِيمٌ
ஒரு பெரிய
மெய்யாகவே அந்நாட்டு மக்களை ஒரு பெண் ஆட்சி புரிவதை நான் கண்டேன். எல்லா வசதிகளும் அவள் பெற்றிருக்கிறாள். மகத்தானதொரு சிம்மாசனமும் அவளுக்கு இருக்கின்றது. ([௨௭] ஸூரத்துந் நம்லி: ௨௩)
Tafseer
௨௪

وَجَدْتُّهَا وَقَوْمَهَا يَسْجُدُوْنَ لِلشَّمْسِ مِنْ دُوْنِ اللّٰهِ وَزَيَّنَ لَهُمُ الشَّيْطٰنُ اَعْمَالَهُمْ فَصَدَّهُمْ عَنِ السَّبِيْلِ فَهُمْ لَا يَهْتَدُوْنَۙ ٢٤

wajadttuhā
وَجَدتُّهَا
அவளையும் கண்டேன்
waqawmahā
وَقَوْمَهَا
அவளுடைய மக்களையும்
yasjudūna
يَسْجُدُونَ
சிரம் பணிந்து வணங்குகின்றவர்களாக
lilshamsi
لِلشَّمْسِ
சூரியனுக்கு
min dūni l-lahi
مِن دُونِ ٱللَّهِ
அல்லாஹ்வையன்றி
wazayyana
وَزَيَّنَ
இன்னும் அலங்கரித்து விட்டான்
lahumu
لَهُمُ
அவர்களுக்கு
l-shayṭānu
ٱلشَّيْطَٰنُ
ஷைத்தான்
aʿmālahum
أَعْمَٰلَهُمْ
அவர்களின் செயல்களை
faṣaddahum
فَصَدَّهُمْ
ஆகவே, அவன் தடுத்து விட்டான் அவர்களை
ʿani l-sabīli
عَنِ ٱلسَّبِيلِ
பாதையிலிருந்து
fahum
فَهُمْ
ஆகவே, அவர்கள்
lā yahtadūna
لَا يَهْتَدُونَ
நேர்வழி பெறவில்லை
அவளும் அவளுடைய மக்களும் அல்லாஹ்வையன்றிச் சூரியனைச் சிரம் பணிந்து வணங்குவதை நான் கண்டேன். அவர்களுடைய இக்காரியத்தை ஷைத்தான் அவர்களுக்கு அழகாகக் காண்பித்து, அவர்களை நேரான பாதையிலிருந்து தடுத்து விட்டான். ஆதலால், அவர்கள் நேரான வழியை அடையவில்லை. ([௨௭] ஸூரத்துந் நம்லி: ௨௪)
Tafseer
௨௫

اَلَّا يَسْجُدُوْا لِلّٰهِ الَّذِيْ يُخْرِجُ الْخَبْءَ فِى السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَيَعْلَمُ مَا تُخْفُوْنَ وَمَا تُعْلِنُوْنَ ٢٥

allā yasjudū
أَلَّا يَسْجُدُوا۟
அவர்கள் சிரம் பணியாமல் இருப்பதற்கா
lillahi
لِلَّهِ
அல்லாஹ்விற்கு
alladhī
ٱلَّذِى
எவன்
yukh'riju
يُخْرِجُ
வெளிப்படுத்துகின்றான்
l-khaba-a
ٱلْخَبْءَ
மறைந்திருப்பவற்றை
fī l-samāwāti
فِى ٱلسَّمَٰوَٰتِ
வானங்களிலும்
wal-arḍi
وَٱلْأَرْضِ
பூமியிலும்
wayaʿlamu
وَيَعْلَمُ
இன்னும் அறிகின்றான்
mā tukh'fūna
مَا تُخْفُونَ
நீங்கள் மறைப்பதையும்
wamā tuʿ'linūna
وَمَا تُعْلِنُونَ
நீங்கள் வெளிப்படுத்துவதையும்
வானங்களிலும், பூமியிலும் மறைந்திருப்பவைகளை வெளிப்படுத்தக் கூடிய அல்லாஹ்வுக்கு அவர்கள் சிரம் பணிந்து வணங்க வேண்டாமா? அன்றி, நீங்கள் மறைத்துக் கொள்வதையும் நீங்கள் வெளியாக்குவதையும் அவன் நன்கறிந்து கொள்கிறான். ([௨௭] ஸூரத்துந் நம்லி: ௨௫)
Tafseer
௨௬

اَللّٰهُ لَآ اِلٰهَ اِلَّا هُوَۙ رَبُّ الْعَرْشِ الْعَظِيْمِ ۩ ٢٦

al-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
لَآ
அறவே இல்லை
ilāha
إِلَٰهَ
வணக்கத்திற்குரியவன்
illā
إِلَّا
தவிர
huwa
هُوَ
அவனை
rabbu
رَبُّ
அதிபதி
l-ʿarshi
ٱلْعَرْشِ
அர்ஷுடைய
l-ʿaẓīmi
ٱلْعَظِيمِ۩
மகத்தான
அந்த அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறு யாரும் இல்லை. அவன்தான் மகத்தான அர்ஷுடையவன்" என்று கூறிற்று. ([௨௭] ஸூரத்துந் நம்லி: ௨௬)
Tafseer
௨௭

۞ قَالَ سَنَنْظُرُ اَصَدَقْتَ اَمْ كُنْتَ مِنَ الْكٰذِبِيْنَ ٢٧

qāla
قَالَ
அவர் கூறினார்
sananẓuru
سَنَنظُرُ
ஆராய்ந்துபார்ப்போம்
aṣadaqta
أَصَدَقْتَ
நீ உண்மை கூறினாயா?
am
أَمْ
அல்லது
kunta
كُنتَ
ஆகிவிட்டாயா?
mina l-kādhibīna
مِنَ ٱلْكَٰذِبِينَ
பொய்யர்களில்
(அதற்கு ஸுலைமான்) "நீ உண்மை சொல்கிறாயா அல்லது பொய் சொல்கிறாயா? என்பதை அதிசீக்கிரத்தில் நாம் கண்டு கொள்வோம். ([௨௭] ஸூரத்துந் நம்லி: ௨௭)
Tafseer
௨௮

اِذْهَبْ بِّكِتٰبِيْ هٰذَا فَاَلْقِهْ اِلَيْهِمْ ثُمَّ تَوَلَّ عَنْهُمْ فَانْظُرْ مَاذَا يَرْجِعُوْنَ ٢٨

idh'hab
ٱذْهَب
எடுத்துச் செல்!
bikitābī
بِّكِتَٰبِى
எனது இந்தக் கடிதத்தை
hādhā
هَٰذَا
இதை
fa-alqih
فَأَلْقِهْ
அதைப் போடு!
ilayhim
إِلَيْهِمْ
அவர்கள் முன்
thumma
ثُمَّ
பிறகு
tawalla
تَوَلَّ
விலகி இரு!
ʿanhum
عَنْهُمْ
அவர்களை விட்டு
fa-unẓur
فَٱنظُرْ
நீ பார்!
mādhā
مَاذَا
என்ன
yarjiʿūna
يَرْجِعُونَ
அவர்கள் பதில் தருகிறார்கள்
என்னுடைய இக்கடிதத்தைக் கொண்டு போய் அவர்களின் முன் எறிந்துவிட்டு அவர்களைவிட்டு விலகி (மறைவாக இருந்து கொண்டு) அவர்கள் என்ன முடிவுக்கு வருகிறார்கள் என்பதை நீ கவனித்துவா" என்று கூறினார். ([௨௭] ஸூரத்துந் நம்லி: ௨௮)
Tafseer
௨௯

قَالَتْ يٰٓاَيُّهَا الْمَلَؤُا اِنِّيْٓ اُلْقِيَ اِلَيَّ كِتٰبٌ كَرِيْمٌ ٢٩

qālat
قَالَتْ
அவள் கூறினாள்
yāayyuhā l-mala-u
يَٰٓأَيُّهَا ٱلْمَلَؤُا۟
பிரமுகர்களே!
innī
إِنِّىٓ
நிச்சயமாக
ul'qiya
أُلْقِىَ
அனுப்பப்பட்டுள்ளது
ilayya
إِلَىَّ
என்னிடம்
kitābun
كِتَٰبٌ
ஒரு கடிதம்
karīmun
كَرِيمٌ
கண்ணியமான
(அவ்வாறே அப்பறவை அவர்கள் முன் அக்கடிதத்தை எறியவே அதனைக் கண்ணுற்ற அவ்வரசி தன் பிரதானிகளை நோக்கி) "தலைவர்களே! மிக்க கண்ணியமுள்ள ஒரு கடிதம் என் முன் எறியப்பட்டிருக்கின்றது. ([௨௭] ஸூரத்துந் நம்லி: ௨௯)
Tafseer
௩௦

اِنَّهٗ مِنْ سُلَيْمٰنَ وَاِنَّهٗ بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ ۙ ٣٠

innahu
إِنَّهُۥ
நிச்சயமாக அது
min sulaymāna
مِن سُلَيْمَٰنَ
சுலைமானிடமிருந்து
wa-innahu
وَإِنَّهُۥ
நிச்சயமாக செய்தியாவது
bis'mi
بِسْمِ
பெயரால்
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
l-raḥmāni
ٱلرَّحْمَٰنِ
பேரருளாளன்
l-raḥīmi
ٱلرَّحِيمِ
பேரன்பாளன்
மெய்யாகவே அது ஸுலைமானிடமிருந்து வந்துள்ளது. நிச்சயமாக அ(தன் ஆரம்பத்)தில் "பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்" என்றெழுதி, ([௨௭] ஸூரத்துந் நம்லி: ௩௦)
Tafseer