Skip to content

ஸூரா ஸூரத்துந் நம்லி - Page: 2

An-Naml

(an-Naml)

௧௧

اِلَّا مَنْ ظَلَمَ ثُمَّ بَدَّلَ حُسْنًاۢ بَعْدَ سُوْۤءٍ فَاِنِّيْ غَفُوْرٌ رَّحِيْمٌ ١١

illā
إِلَّا
தவிர
man ẓalama
مَن ظَلَمَ
தவறிழைத்தவரை
thumma
ثُمَّ
பிறகு
baddala
بَدَّلَ
மாற்றி செய்தார்
ḥus'nan
حُسْنًۢا
அழகிய செயலை
baʿda
بَعْدَ
பின்னர்
sūin
سُوٓءٍ
தீமைக்கு
fa-innī
فَإِنِّى
ஏனெனில், நிச்சயமாக நான்
ghafūrun
غَفُورٌ
மகா மன்னிப்பாளன்
raḥīmun
رَّحِيمٌ
பெரும் கருணையாளன்
ஆயினும் தவறிழைத்தவரைத் தவிர. (எனினும்) அவரும் தன்னுடைய குற்றத்தை (உணர்ந்து அதனை மாற்றி) நன்மை செய்தால் நிச்சயமாக நான் (அவரையும்) மன்னித்துக் கிருபை செய்பவனாக இருக்கின்றேன். ([௨௭] ஸூரத்துந் நம்லி: ௧௧)
Tafseer
௧௨

وَاَدْخِلْ يَدَكَ فِيْ جَيْبِكَ تَخْرُجْ بَيْضَاۤءَ مِنْ غَيْرِ سُوْۤءٍۙ فِيْ تِسْعِ اٰيٰتٍ اِلٰى فِرْعَوْنَ وَقَوْمِهٖۚ اِنَّهُمْ كَانُوْا قَوْمًا فٰسِقِيْنَ ١٢

wa-adkhil
وَأَدْخِلْ
நுழைப்பீராக!
yadaka
يَدَكَ
உமது கரத்தை
fī jaybika
فِى جَيْبِكَ
உமது சட்டைப் பையில்
takhruj
تَخْرُجْ
வெளிவரும்
bayḍāa
بَيْضَآءَ
வென்மையாக மின்னும்
min ghayri sūin
مِنْ غَيْرِ سُوٓءٍۖ
எவ்வித குறையுமின்றி
fī tis'ʿi
فِى تِسْعِ
ஒன்பது
āyātin
ءَايَٰتٍ
அத்தாட்சிகளில்
ilā fir'ʿawna
إِلَىٰ فِرْعَوْنَ
ஃபிர்அவ்னுக்கும்
waqawmihi
وَقَوْمِهِۦٓۚ
அவனதுமக்களுக்கும்
innahum
إِنَّهُمْ
நிச்சயமாக அவர்கள்
kānū
كَانُوا۟
இருக்கிறார்கள்
qawman
قَوْمًا
மக்களாக
fāsiqīna
فَٰسِقِينَ
பாவிகளான
(மூஸாவே!) நீங்கள் உங்களுடைய கையை உங்களுடைய சட்டைப்பைக்குள் புகுத்துங்கள். அது யாதொரு மாசற்ற வெண்மையான (பிரகாசத்துடன்) வெளிவரும். (இவ்விரண்டும்) ஒன்பது அத்தாட்சிகளில் உள்ளவையாகும். (இவற்றுடன்) நீங்கள் ஃபிர்அவ்னிடமும் அவனுடைய மக்களிடமும் செல்லுங்கள். நிச்சயமாக அவர்கள் பாவம் செய்யும் மக்களாக இருக்கின்றனர்" (என்றும் கூறினோம்.) ([௨௭] ஸூரத்துந் நம்லி: ௧௨)
Tafseer
௧௩

فَلَمَّا جَاۤءَتْهُمْ اٰيٰتُنَا مُبْصِرَةً قَالُوْا هٰذَا سِحْرٌ مُّبِيْنٌ ۚ ١٣

falammā jāathum
فَلَمَّا جَآءَتْهُمْ
ஆக, அது அவர்களிடம் வந்தபோது
āyātunā
ءَايَٰتُنَا
நம் அத்தாட்சிகள்
mub'ṣiratan
مُبْصِرَةً
பார்க்கும்படியாக
qālū
قَالُوا۟
கூறினர்
hādhā
هَٰذَا
இது
siḥ'run
سِحْرٌ
சூனியம்
mubīnun
مُّبِينٌ
தெளிவான
(மூஸாவுக்கு கொடுக்கப்பட்ட) நம்முடைய பார்த்து புரிந்து கொள்ளும் படியான அத்தாட்சிகள் அவர்களிடம் வரவே "இது சந்தேகமற்ற சூனியம்தான்" என்று அவர்கள் கூறினார்கள். ([௨௭] ஸூரத்துந் நம்லி: ௧௩)
Tafseer
௧௪

وَجَحَدُوْا بِهَا وَاسْتَيْقَنَتْهَآ اَنْفُسُهُمْ ظُلْمًا وَّعُلُوًّاۗ فَانْظُرْ كَيْفَ كَانَ عَاقِبَةُ الْمُفْسِدِيْنَ ࣖ ١٤

wajaḥadū
وَجَحَدُوا۟
அவர்கள் மறுத்தனர்
bihā
بِهَا
அவற்றை
wa-is'tayqanathā
وَٱسْتَيْقَنَتْهَآ
அவற்றை உறுதியாக நம்பின
anfusuhum
أَنفُسُهُمْ
அவர்களுடைய ஆன்மாக்களோ
ẓul'man
ظُلْمًا
அநியாயமாக
waʿuluwwan
وَعُلُوًّاۚ
இன்னும் பெருமையாக
fa-unẓur
فَٱنظُرْ
ஆகவே நீர் கவனிப்பீராக
kayfa kāna
كَيْفَ كَانَ
எவ்வாறுஆகிவிட்டது
ʿāqibatu
عَٰقِبَةُ
முடிவு
l-muf'sidīna
ٱلْمُفْسِدِينَ
விஷமிகளின்
(அத்தாட்சிகளைக் கண்ட) அவர்களுடைய உள்ளங்கள் அவைகளை (உண்மையென) உறுதிகொண்டபோதிலும், கர்வம் கொண்டு அநியாயமாக அவைகளை அவர்கள் மறுத்தார்கள். ஆகவே, இந்த விஷமிகளின் முடிவு எவ்வாறாயிற்று என்பதை (நபியே!) நீங்கள் கவனியுங்கள். ([௨௭] ஸூரத்துந் நம்லி: ௧௪)
Tafseer
௧௫

وَلَقَدْ اٰتَيْنَا دَاوٗدَ وَسُلَيْمٰنَ عِلْمًاۗ وَقَالَا الْحَمْدُ لِلّٰهِ الَّذِيْ فَضَّلَنَا عَلٰى كَثِيْرٍ مِّنْ عِبَادِهِ الْمُؤْمِنِيْنَ ١٥

walaqad
وَلَقَدْ
திட்டவட்டமாக
ātaynā
ءَاتَيْنَا
நாம் தந்தோம்
dāwūda
دَاوُۥدَ
தாவூதுக்கும்
wasulaymāna
وَسُلَيْمَٰنَ
சுலைமானுக்கும்
ʿil'man
عِلْمًاۖ
அறிவை
waqālā
وَقَالَا
அவ்விருவரும் கூறினர்
l-ḥamdu
ٱلْحَمْدُ
எல்லாப் புகழும்
lillahi
لِلَّهِ
அல்லாஹ்விற்கே
alladhī
ٱلَّذِى
எவன்
faḍḍalanā
فَضَّلَنَا
எங்களை மேன்மைப்படுத்தினான்
ʿalā kathīrin
عَلَىٰ كَثِيرٍ
பலரைப் பார்க்கிலும்
min ʿibādihi
مِّنْ عِبَادِهِ
தனது அடியார்களில்
l-mu'minīna
ٱلْمُؤْمِنِينَ
நம்பிக்கையாளர்களான
தாவூதுக்கும், ஸுலைமானுக்கும் நிச்சயமாக நாம் (இம்மை மறுமையில் பயனளிக்கக்கூடிய) கல்வியைக் கொடுத்தோம். அதற்கு அவ்விருவரும் "புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே சொந்தமானவை. அவன்தான் நம்பிக்கை கொண்ட தன்னுடைய நல்லடியார்களில் பலரைவிட எங்களை மேன்மையாக்கி வைத்தான்" என்று கூறி (நன்றி செலுத்தி)னார்கள். ([௨௭] ஸூரத்துந் நம்லி: ௧௫)
Tafseer
௧௬

وَوَرِثَ سُلَيْمٰنُ دَاوٗدَ وَقَالَ يٰٓاَيُّهَا النَّاسُ عُلِّمْنَا مَنْطِقَ الطَّيْرِ وَاُوْتِيْنَا مِنْ كُلِّ شَيْءٍۗ اِنَّ هٰذَا لَهُوَ الْفَضْلُ الْمُبِيْنُ ١٦

wawaritha
وَوَرِثَ
வாரிசாக ஆனார்
sulaymānu
سُلَيْمَٰنُ
சுலைமான்
dāwūda
دَاوُۥدَۖ
தாவூதுக்கு
waqāla
وَقَالَ
இன்னும் , கூறினார்
yāayyuhā l-nāsu
يَٰٓأَيُّهَا ٱلنَّاسُ
மக்களே!
ʿullim'nā
عُلِّمْنَا
நாங்கள் கற்பிக்கப்பட்டோம்
manṭiqa
مَنطِقَ
பேச்சை
l-ṭayri
ٱلطَّيْرِ
பறவைகளின்
waūtīnā
وَأُوتِينَا
வழங்கப்பட்டோம்
min kulli shayin
مِن كُلِّ شَىْءٍۖ
எல்லாம்
inna
إِنَّ
நிச்சயமாக
hādhā lahuwa
هَٰذَا لَهُوَ
இதுதான்
l-faḍlu
ٱلْفَضْلُ
மேன்மையாகும்
l-mubīnu
ٱلْمُبِينُ
தெளிவான
பின்னர் தாவூதுக்கு ஸுலைமான் வாரிசானார். (ஸுலைமான் மனிதர்களை நோக்கி) "மனிதர்களே! எங்களுக்குப் பறவைகளின் மொழி கற்பிக்கப்பட்டிருக்கிறது. எங்களுக்கு (வேண்டிய) எல்லா பொருள்களும் (ஏராளமாகவே) கொடுக்கப்பட்டிருக்கின்றன. நிச்சயமாக இது (இறைவனின்) மிக்க தெளிவானதொரு அருளாகும்" என்று கூறி(யும் நன்றி செலுத்தி)னார். ([௨௭] ஸூரத்துந் நம்லி: ௧௬)
Tafseer
௧௭

وَحُشِرَ لِسُلَيْمٰنَ جُنُوْدُهٗ مِنَ الْجِنِّ وَالْاِنْسِ وَالطَّيْرِ فَهُمْ يُوْزَعُوْنَ ١٧

waḥushira
وَحُشِرَ
ஒன்று திரட்டப்பட்டன
lisulaymāna
لِسُلَيْمَٰنَ
சுலைமானுக்கு
junūduhu
جُنُودُهُۥ
அவருடைய ராணுவங்கள்
mina l-jini
مِنَ ٱلْجِنِّ
ஜின்களிலிருந்து
wal-insi
وَٱلْإِنسِ
இன்னும் மனிதர்கள்
wal-ṭayri
وَٱلطَّيْرِ
இன்னும் பறவைகளில்
fahum
فَهُمْ
ஆகவே, அவர்கள்
yūzaʿūna
يُوزَعُونَ
நிறுத்தப்படுவார்கள்
ஸுலைமானுடைய ராணுவம் ஜின்கள், மனிதர்கள், பறவைகள் ஆகியவைகளிலிருந்து திரட்டப்பட்டு அவை இனவாரியாகப் பிரிக்கப்பட்டு அணியணியாகப் புறப்பட்டன. ([௨௭] ஸூரத்துந் நம்லி: ௧௭)
Tafseer
௧௮

حَتّٰىٓ اِذَآ اَتَوْا عَلٰى وَادِ النَّمْلِۙ قَالَتْ نَمْلَةٌ يّٰٓاَيُّهَا النَّمْلُ ادْخُلُوْا مَسٰكِنَكُمْۚ لَا يَحْطِمَنَّكُمْ سُلَيْمٰنُ وَجُنُوْدُهٗۙ وَهُمْ لَا يَشْعُرُوْنَ ١٨

ḥattā
حَتَّىٰٓ
இறுதியாக
idhā ataw
إِذَآ أَتَوْا۟
அவர்கள் வந்த போது
ʿalā wādi
عَلَىٰ وَادِ
ஒரு பள்ளத்தாக்கில்
l-namli
ٱلنَّمْلِ
எறும்புகளின்
qālat
قَالَتْ
கூறியது
namlatun
نَمْلَةٌ
ஓர் எறும்பு
yāayyuhā l-namlu
يَٰٓأَيُّهَا ٱلنَّمْلُ
எறும்புகளே!
ud'khulū
ٱدْخُلُوا۟
நுழைந்து விடுங்கள்!
masākinakum
مَسَٰكِنَكُمْ
உங்கள் பொந்துகளுக்குள்
lā yaḥṭimannakum
لَا يَحْطِمَنَّكُمْ
உங்களை மிதித்து அழித்து விடவேண்டாம்
sulaymānu
سُلَيْمَٰنُ
சுலைமானும்
wajunūduhu
وَجُنُودُهُۥ
அவருடைய ராணுவங்களும்
wahum
وَهُمْ
அவர்களோ
lā yashʿurūna
لَا يَشْعُرُونَ
உணர மாட்டார்கள்
அவை எறும்புகள் வசிக்கும் ஓர் ஓடையின் சமீபமாக வந்தபொழுது அதிலொரு பெண் எறும்பு (மற்ற எறும்புகளை நோக்கி) "எறும்புகளே! நீங்கள் உங்கள் வீடுகளுக்குள் நுழைந்து கொள்ளுங்கள். ஸுலைமானும் அவருடைய ராணுவமும் (நீங்கள் இருப்பதை) அறியாது உங்களை(த் தங்கள் கால்களால்) மிதித்துவிட வேண்டாம்" என்று கூறியது. ([௨௭] ஸூரத்துந் நம்லி: ௧௮)
Tafseer
௧௯

فَتَبَسَّمَ ضَاحِكًا مِّنْ قَوْلِهَا وَقَالَ رَبِّ اَوْزِعْنِيْٓ اَنْ اَشْكُرَ نِعْمَتَكَ الَّتِيْٓ اَنْعَمْتَ عَلَيَّ وَعَلٰى وَالِدَيَّ وَاَنْ اَعْمَلَ صَالِحًا تَرْضٰىهُ وَاَدْخِلْنِيْ بِرَحْمَتِكَ فِيْ عِبَادِكَ الصّٰلِحِيْنَ ١٩

fatabassama
فَتَبَسَّمَ
ஆக, புன்முறுவல் பூத்தார்
ḍāḥikan
ضَاحِكًا
அவர் சிரித்தவராக
min qawlihā
مِّن قَوْلِهَا
அதன் பேச்சினால்
waqāla
وَقَالَ
இன்னும் கூறினார்
rabbi
رَبِّ
என் இறைவா!
awziʿ'nī
أَوْزِعْنِىٓ
எனக்கு நீ அகத்தூண்டுதலை ஏற்படுத்து!
an ashkura
أَنْ أَشْكُرَ
நான் நன்றி செலுத்துவதற்கு
niʿ'mataka
نِعْمَتَكَ
உன் அருளுக்கு
allatī anʿamta
ٱلَّتِىٓ أَنْعَمْتَ
எது/நீ அருள்புரிந்தாய்
ʿalayya
عَلَىَّ
என் மீதும்
waʿalā wālidayya
وَعَلَىٰ وَٰلِدَىَّ
என் பெற்றோர் மீதும்
wa-an aʿmala
وَأَنْ أَعْمَلَ
நான் செய்வதற்கும்
ṣāliḥan
صَٰلِحًا
நல்லதை
tarḍāhu
تَرْضَىٰهُ
நீ மகிழ்ச்சியுறுகின்ற
wa-adkhil'nī
وَأَدْخِلْنِى
இன்னும் என்னைநுழைத்துவிடு
biraḥmatika
بِرَحْمَتِكَ
உன் கருணையால்
fī ʿibādika
فِى عِبَادِكَ
உன் அடியார்களில்
l-ṣāliḥīna
ٱلصَّٰلِحِينَ
நல்லவர்கள்
அதன் சொல்லைக் கேள்வியுற்று ஸுலைமான் சிரித்தவராக புன்னகைப் பூத்தார். மேலும், "என் இறைவனே! நீ என் மீதும், என் தாய் தந்தை மீதும் புரிந்த உன்னுடைய அருள்களுக்கு உனக்கு நான் நன்றி செலுத்த நீ அருள் புரிவாயாக! உனக்குத் திருப்தியளிக்கக் கூடிய நற் செயல்களையும் நான் செய்ய(க்கூடிய பாக்கியத்தை எனக்கு) அருள் புரிந்து, உன்னுடைய கிருபையைக் கொண்டு உன்னுடைய நல்லடியார்களுடனும் என்னைச் சேர்த்து விடுவாயாக!" என்று பிரார்த்தனை செய்தார். ([௨௭] ஸூரத்துந் நம்லி: ௧௯)
Tafseer
௨௦

وَتَفَقَّدَ الطَّيْرَ فَقَالَ مَا لِيَ لَآ اَرَى الْهُدْهُدَۖ اَمْ كَانَ مِنَ الْغَاۤىِٕبِيْنَ ٢٠

watafaqqada
وَتَفَقَّدَ
அவர் தேடினார்
l-ṭayra
ٱلطَّيْرَ
பறவைகளில்
faqāla
فَقَالَ
கூறினார்
mā liya
مَا لِىَ
எனக்கென்ன
lā arā
لَآ أَرَى
நான் காணமுடியவில்லை
l-hud'huda
ٱلْهُدْهُدَ
ஹூத்ஹூதை
am
أَمْ
அல்லது
kāna
كَانَ
அது இருக்கிறதா?
mina l-ghāibīna
مِنَ ٱلْغَآئِبِينَ
வராதவர்களில்
அவர் பறவைகளைப் பரிசீலனை செய்தபொழுது "என்ன காரணம்? "ஹுத்ஹுத்" என்னும் பறவையை நான் காணவில்லையே! (அது பறவைகளின் நெருக்கடியில்) மறைந்திருக்கின்றதா? (அல்லது என் அனுமதியின்றி எங்கேனும் சென்றுவிட்டதா?) ([௨௭] ஸூரத்துந் நம்லி: ௨௦)
Tafseer