Skip to content

ஸூரா ஸூரத்துந் நம்லி - Page: 10

An-Naml

(an-Naml)

௯௧

اِنَّمَآ اُمِرْتُ اَنْ اَعْبُدَ رَبَّ هٰذِهِ الْبَلْدَةِ الَّذِيْ حَرَّمَهَا وَلَهٗ كُلُّ شَيْءٍ وَّاُمِرْتُ اَنْ اَكُوْنَ مِنَ الْمُسْلِمِيْنَ ۙ ٩١

innamā umir'tu
إِنَّمَآ أُمِرْتُ
நான் கட்டளையிடப்பட்டதெல்லாம்
an aʿbuda
أَنْ أَعْبُدَ
வணங்குவதற்குத்தான்
rabba
رَبَّ
இறைவனை
hādhihi l-baldati
هَٰذِهِ ٱلْبَلْدَةِ
இந்த ஊரின்
alladhī ḥarramahā
ٱلَّذِى حَرَّمَهَا
எவன்/புனிதப்படுத்தியுள்ளான்/அதை
walahu
وَلَهُۥ
அவனுக்குத்தான்
kullu
كُلُّ
எல்லா
shayin
شَىْءٍۖ
பொருள்களும்
wa-umir'tu
وَأُمِرْتُ
இன்னும் , நான் கட்டளை இடப்பட்டுள்ளேன்
an akūna
أَنْ أَكُونَ
நான் ஆகவேண்டும் என்று
mina l-mus'limīna
مِنَ ٱلْمُسْلِمِينَ
முஸ்லிம்களில்
(நபியே! நீங்கள் கூறுங்கள்:) மிக்க கண்ணியமுள்ள இந்நகரத்தின் அதிபதியாகிய இறைவன் ஒருவனையே வணங்குமாறு நான் ஏவப்பட்டு உள்ளேன். எல்லா பொருள்களும் அவனுக்கு உரியனவே! அன்றி, அவனுக்கே முற்றிலும் வழிபட்டவனாக இருக்கும்படியும் நான் ஏவப்பட்டுள்ளேன். ([௨௭] ஸூரத்துந் நம்லி: ௯௧)
Tafseer
௯௨

وَاَنْ اَتْلُوَا الْقُرْاٰنَ ۚفَمَنِ اهْتَدٰى فَاِنَّمَا يَهْتَدِيْ لِنَفْسِهٖۚ وَمَنْ ضَلَّ فَقُلْ اِنَّمَآ اَنَا۠ مِنَ الْمُنْذِرِيْنَ ٩٢

wa-an atluwā
وَأَنْ أَتْلُوَا۟
இன்னும் நான் ஓதுவதற்கு
l-qur'āna
ٱلْقُرْءَانَۖ
குர்ஆனை
famani
فَمَنِ
ஆகவே, யார்
ih'tadā
ٱهْتَدَىٰ
நேர்வழி பெறுகிறாரோ
fa-innamā yahtadī
فَإِنَّمَا يَهْتَدِى
நிச்சயமாக அவர் நேர்வழி பெறுவதெல்லாம்
linafsihi waman
لِنَفْسِهِۦۖ وَمَن
அவரது நன்மைக்காகத்தான்/யார்
ḍalla
ضَلَّ
வழி கெடுகின்றானோ
faqul
فَقُلْ
கூறுவீராக!
innamā anā
إِنَّمَآ أَنَا۠
நான் எல்லாம்
mina l-mundhirīna
مِنَ ٱلْمُنذِرِينَ
எச்சரிப்பவர்களில் உள்ளவன்தான்
அன்றி, திருக்குர்ஆனை நான் (அனைவருக்கும்) ஓதிக் காண்பிக்குமாறும் (ஏவப்பட்டுள்ளேன். அதனைக் கொண்டு) எவன் நேரான வழியை அடைகின்றானோ அவன் தன் சுய நன்மைக் காகவே நேரான வழியில் செல்கின்றான். எவரேனும் (இதிலிருந்து விலகித்) தவறான வழியில் சென்றால் (நபியே! நீங்கள் அதைப் பற்றிக் கவலைப்படாதீர்கள்.) "நிச்சயமாக நான் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவன் மட்டும்தான் (நிர்ப்பந்திப்பவனல்ல)" என்று கூறுங்கள். ([௨௭] ஸூரத்துந் நம்லி: ௯௨)
Tafseer
௯௩

وَقُلِ الْحَمْدُ لِلّٰهِ سَيُرِيْكُمْ اٰيٰتِهٖ فَتَعْرِفُوْنَهَاۗ وَمَا رَبُّكَ بِغَافِلٍ عَمَّا تَعْمَلُوْنَ ࣖ ٩٣

waquli
وَقُلِ
கூறுவீராக
l-ḥamdu
ٱلْحَمْدُ
எல்லாப் புகழும்
lillahi
لِلَّهِ
அல்லாஹ்விற்கே
sayurīkum
سَيُرِيكُمْ
உங்களுக்கு காண்பிப்பான்
āyātihi
ءَايَٰتِهِۦ
தனது அத்தாட்சிகளை
fataʿrifūnahā
فَتَعْرِفُونَهَاۚ
அச்சமயம் நீங்கள் அறிந்து கொள்வீர்கள்/அவற்றை
wamā
وَمَا
இல்லை
rabbuka
رَبُّكَ
உமது இறைவன்
bighāfilin
بِغَٰفِلٍ
கவனிக்காதவனாக
ʿammā taʿmalūna
عَمَّا تَعْمَلُونَ
நீங்கள் செய்பவற்றை
புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியன. (அவன் மறுமை வருவதற்குரிய) தன்னுடைய அத்தாட்சிகளை அதி சீக்கிரத்தில் உங்களுக்குக் காண்பிப்பான். அச்சமயம், அவைகளை நீங்கள் (உண்மையென) அறிந்து கொள்வீர்கள். (தற்சமயம்) நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றீர்கள் என்பதைப் பற்றி (நபியே!) உங்களது இறைவன் பராமுகமாயில்லை என்று கூறுங்கள். ([௨௭] ஸூரத்துந் நம்லி: ௯௩)
Tafseer