طٰسۤ ۚ تِلْكَ اٰيٰتُ الْقُرْاٰنِ وَكِتَابٍ مُّبِيْنٍ ۙ ١
- tta-seen
- طسٓۚ
- தா, சீன்.
- til'ka
- تِلْكَ
- இவை
- āyātu
- ءَايَٰتُ
- வசனங்கள்
- l-qur'āni
- ٱلْقُرْءَانِ
- இந்த குர்ஆனுடைய
- wakitābin
- وَكِتَابٍ
- இன்னும் வேதத்தின்
- mubīnin
- مُّبِينٍ
- தெளிவான
தா; ஸீன். இவை தெளிவான வேதமாகிய இந்தத் திருக்குர்ஆனின் (சில) வசனங்களாகும். ([௨௭] ஸூரத்துந் நம்லி: ௧)Tafseer
هُدًى وَّبُشْرٰى لِلْمُؤْمِنِيْنَ ۙ ٢
- hudan
- هُدًى
- நேர்வழியாகவும்
- wabush'rā
- وَبُشْرَىٰ
- நற்செய்தியாகவும்
- lil'mu'minīna
- لِلْمُؤْمِنِينَ
- நம்பிக்கையாளர்களுக்கு
நம்பிக்கை கொண்டவர்களுக்கு (இது) ஒரு நேர்வழியாகவும், நற்செய்தியாகவும் இருக்கிறது. ([௨௭] ஸூரத்துந் நம்லி: ௨)Tafseer
الَّذِيْنَ يُقِيْمُوْنَ الصَّلٰوةَ وَيُؤْتُوْنَ الزَّكٰوةَ وَهُمْ بِالْاٰخِرَةِ هُمْ يُوْقِنُوْنَ ٣
- alladhīna
- ٱلَّذِينَ
- எவர்கள்
- yuqīmūna
- يُقِيمُونَ
- நிலை நிறுத்துவார்கள்
- l-ṣalata
- ٱلصَّلَوٰةَ
- தொழுகையை
- wayu'tūna
- وَيُؤْتُونَ
- இன்னும் தருவார்கள்
- l-zakata
- ٱلزَّكَوٰةَ
- ஸகாத்தை
- wahum
- وَهُم
- இன்னும் அவர்கள்
- bil-ākhirati hum
- بِٱلْءَاخِرَةِ هُمْ
- மறுமையை/அவர்கள்
- yūqinūna
- يُوقِنُونَ
- நம்பிக்கை கொள்வார்கள்
அவர்கள் தொழுகையைக் கடைப்பிடித்தொழுகுவார்கள், ஜகாத்தும் கொடுத்து வருவார்கள். அன்றி, மறுமையையும் அவர்கள் உறுதியாக நம்புவார்கள். ([௨௭] ஸூரத்துந் நம்லி: ௩)Tafseer
اِنَّ الَّذِيْنَ لَا يُؤْمِنُوْنَ بِالْاٰخِرَةِ زَيَّنَّا لَهُمْ اَعْمَالَهُمْ فَهُمْ يَعْمَهُوْنَ ۗ ٤
- inna
- إِنَّ
- நிச்சயமாக
- alladhīna lā yu'minūna
- ٱلَّذِينَ لَا يُؤْمِنُونَ
- நம்பிக்கை கொள்ளாதவர்கள்
- bil-ākhirati
- بِٱلْءَاخِرَةِ
- மறுமையை
- zayyannā
- زَيَّنَّا
- நாம் அலங்கரித்து விட்டோம்
- lahum
- لَهُمْ
- அவர்களுக்கு
- aʿmālahum
- أَعْمَٰلَهُمْ
- அவர்களுடைய செயல்களை
- fahum
- فَهُمْ
- ஆகவே, அவர்கள்
- yaʿmahūna
- يَعْمَهُونَ
- தறிகெட்டு அலைகிறார்கள்
நிச்சயமாக எவர்கள் மறுமையை நம்பவில்லையோ அவர்களுக்கு (அவர்களுடைய நிராகரிப்பின் காரணமாக) நாம் அவர்களுடைய (தீய) காரியங்களை அழகாக்கி விட்டோம். ஆகவே, அவர்கள் அதில் தட்டழிந்து திரிகின்றனர். ([௨௭] ஸூரத்துந் நம்லி: ௪)Tafseer
اُولٰۤىِٕكَ الَّذِيْنَ لَهُمْ سُوْۤءُ الْعَذَابِ وَهُمْ فِى الْاٰخِرَةِ هُمُ الْاَخْسَرُوْنَ ٥
- ulāika
- أُو۟لَٰٓئِكَ
- alladhīna
- ٱلَّذِينَ
- அவர்கள்தான்
- lahum
- لَهُمْ
- அவர்களுக்கு உண்டு
- sūu
- سُوٓءُ
- கெட்ட
- l-ʿadhābi
- ٱلْعَذَابِ
- தண்டனை
- wahum
- وَهُمْ
- அவர்கள்
- fī l-ākhirati
- فِى ٱلْءَاخِرَةِ
- மறுமையில்
- humu
- هُمُ
- அவர்கள்தான்
- l-akhsarūna
- ٱلْأَخْسَرُونَ
- நஷ்டவாளிகள்
இத்தகையவர்களுக்கு (அவர்கள் மரண காலத்தில்) தீய வேதனைதான் உண்டு. மறுமையிலோ அவர்கள் பெரும் நஷ்டம் அடைந்தவர்களாக இருப்பார்கள். ([௨௭] ஸூரத்துந் நம்லி: ௫)Tafseer
وَاِنَّكَ لَتُلَقَّى الْقُرْاٰنَ مِنْ لَّدُنْ حَكِيْمٍ عَلِيْمٍ ٦
- wa-innaka
- وَإِنَّكَ
- நிச்சயமாக நீர்
- latulaqqā
- لَتُلَقَّى
- மனனம் செய்விக்கப்படுகிறீர்
- l-qur'āna
- ٱلْقُرْءَانَ
- இந்த குர்ஆனை
- min ladun ḥakīmin
- مِن لَّدُنْ حَكِيمٍ
- மகா ஞானவானிடமிருந்து
- ʿalīmin
- عَلِيمٍ
- நன்கறிந்தவன்
(நபியே!) நிச்சயமாக மிக்க ஞானமுடைய, (அனைத்தையும்) நன்கு அறிந்தவனிடம் இருந்தே இந்தக் குர்ஆன் உங்களுக்குக் கொடுக்கப்பட்டது. ([௨௭] ஸூரத்துந் நம்லி: ௬)Tafseer
اِذْ قَالَ مُوْسٰى لِاَهْلِهٖٓ اِنِّيْٓ اٰنَسْتُ نَارًاۗ سَاٰتِيْكُمْ مِّنْهَا بِخَبَرٍ اَوْ اٰتِيْكُمْ بِشِهَابٍ قَبَسٍ لَّعَلَّكُمْ تَصْطَلُوْنَ ٧
- idh qāla
- إِذْ قَالَ
- அந்த சமயத்தை நினைவு கூறினார்
- mūsā
- مُوسَىٰ
- மூசா
- li-ahlihi
- لِأَهْلِهِۦٓ
- தன்குடும்பத்தினருக்கு
- innī
- إِنِّىٓ
- நிச்சயமாக நான்
- ānastu
- ءَانَسْتُ
- நான் பார்த்தேன்
- nāran
- نَارًا
- நெருப்பை
- saātīkum
- سَـَٔاتِيكُم
- உங்களுக்கு கொண்டு வருகிறேன்
- min'hā
- مِّنْهَا
- அதிலிருந்து
- bikhabarin
- بِخَبَرٍ
- ஒரு செய்தியை
- aw
- أَوْ
- அல்லது
- ātīkum
- ءَاتِيكُم
- உங்களுக்கு கொண்டு வருகிறேன்
- bishihābin
- بِشِهَابٍ
- நெருப்பை
- qabasin
- قَبَسٍ
- எடுக்கப்பட்ட
- laʿallakum taṣṭalūna
- لَّعَلَّكُمْ تَصْطَلُونَ
- நீங்கள் குளிர் காய்வதற்காக
மூஸா (தூர் என்னும் மலையின் சமீபமாகச் சென்றபொழுது) தன் குடும்பத்தினரை நோக்கி "நிச்சயமாக நான் ஒரு நெருப்பைக் காண்கிறேன். (நீங்கள் இங்கு தாமதித்து இருங்கள்.) நான் சென்று (நம்முடைய வழியைப் பற்றி) யாதொரு விஷயத்தை அதன் மூலம் அறிந்து வருகின்றேன் அல்லது நீங்கள் குளிர் காய்வதற்கு ஓர் எரி கொள்ளியேனும் கொண்டு வருவேன்" என்று கூறி, ([௨௭] ஸூரத்துந் நம்லி: ௭)Tafseer
فَلَمَّا جَاۤءَهَا نُوْدِيَ اَنْۢ بُوْرِكَ مَنْ فِى النَّارِ وَمَنْ حَوْلَهَاۗ وَسُبْحٰنَ اللّٰهِ رَبِّ الْعٰلَمِيْنَ ٨
- falammā jāahā
- فَلَمَّا جَآءَهَا
- அவர் அதனிடம் வந்த போது
- nūdiya
- نُودِىَ
- அழைக்கப்பட்டார்
- an būrika
- أَنۢ بُورِكَ
- பரிசுத்தமானவன்
- man fī l-nāri
- مَن فِى ٱلنَّارِ
- நெருப்பில் இருப்பவன்
- waman ḥawlahā
- وَمَنْ حَوْلَهَا
- இன்னும் அதை சுற்றி உள்ளவர்களும்
- wasub'ḥāna
- وَسُبْحَٰنَ
- மிகப் பரிசுத்தமானவன்
- l-lahi
- ٱللَّهِ
- அல்லாஹ்
- rabbi
- رَبِّ
- இறைவன்
- l-ʿālamīna
- ٱلْعَٰلَمِينَ
- அகிலங்களின்
அவர் அதன் சமீபமாக வந்த சமயத்தில் "நெருப்பில் இருப்பவர் (மலக்கின்) மீதும் அதன் சமீபமாக இருப்பவர் (மூஸா) மீதும் பெரும் பாக்கியமளிக்கப்பட்டுள்ளது என்(று சப்தமிட்டுக் கூறப்பெற்)றதுடன், உலகத்தார் அனைவரையும் படைத்து வளர்த்து பரிபக்குவப்படுத்தும் அல்லாஹ் மிக்க பரிசுத்தமானவன்" என்றும் கூறப்பட்டது. ([௨௭] ஸூரத்துந் நம்லி: ௮)Tafseer
يٰمُوْسٰٓى اِنَّهٗٓ اَنَا اللّٰهُ الْعَزِيْزُ الْحَكِيْمُ ۙ ٩
- yāmūsā
- يَٰمُوسَىٰٓ
- மூஸாவே!
- innahu
- إِنَّهُۥٓ
- நிச்சயமாக
- anā
- أَنَا
- நான்தான்
- l-lahu
- ٱللَّهُ
- அல்லாஹ்
- l-ʿazīzu
- ٱلْعَزِيزُ
- மிகைத்தவனான
- l-ḥakīmu
- ٱلْحَكِيمُ
- மகா ஞானமுடையவனான
(அன்றி) மூஸாவே! நிச்சயமாக நான்தான் அல்லாஹ். நான் அனைவரையும் மிகைத்தவன்; (அனைத்தையும் நன்கறிந்த) ஞானமுடையவன். ([௨௭] ஸூரத்துந் நம்லி: ௯)Tafseer
وَاَلْقِ عَصَاكَ ۗفَلَمَّا رَاٰهَا تَهْتَزُّ كَاَنَّهَا جَاۤنٌّ وَّلّٰى مُدْبِرًا وَّلَمْ يُعَقِّبْۗ يٰمُوْسٰى لَا تَخَفْۗ اِنِّيْ لَا يَخَافُ لَدَيَّ الْمُرْسَلُوْنَ ۖ ١٠
- wa-alqi
- وَأَلْقِ
- போடுவீராக!
- ʿaṣāka
- عَصَاكَۚ
- உமது தடியை
- falammā raāhā
- فَلَمَّا رَءَاهَا
- அவர் அதை பார்த்த போது
- tahtazzu
- تَهْتَزُّ
- நெளிவதாக
- ka-annahā
- كَأَنَّهَا
- அது போன்று
- jānnun
- جَآنٌّ
- பாம்பை
- wallā
- وَلَّىٰ
- திரும்பினார்
- mud'biran
- مُدْبِرًا
- புறமுதுகிட்டு
- walam yuʿaqqib
- وَلَمْ يُعَقِّبْۚ
- அவர் திரும்பவே இல்லை
- yāmūsā
- يَٰمُوسَىٰ
- மூஸாவே!
- lā takhaf
- لَا تَخَفْ
- பயப்படாதீர்
- innī
- إِنِّى
- நிச்சயமாக நான்
- lā yakhāfu
- لَا يَخَافُ
- பயப்பட மாட்டார்கள்
- ladayya
- لَدَىَّ
- என்னிடம்
- l-mur'salūna
- ٱلْمُرْسَلُونَ
- இறைத்தூதர்கள்
(மூஸாவே!) உங்களுடைய தடியை நீங்கள் எறியுங்கள்" என்றும் (கூறப்பட்டது. அவ்வாறு அவர் அதனை எறியவே) அது ஒரு பாம்பைப் போல் (ஆகி) நெளிவதைக் கண்டு அவர் திரும்பியும் பார்க்காது அதனைவிட்டும் விலகிச் சென்றார். (ஆகவே, நாம் மூஸாவை நோக்கி) மூஸாவே! நீங்கள் பயப்படாதீர்கள். நிச்சயமாக என்னிடத்தில் எந்தத் தூதரும் பயப்படமாட்டார்கள். ([௨௭] ஸூரத்துந் நம்லி: ௧௦)Tafseer